ADS 468x60

30 March 2013

மட்டக்களப்பு கிராமங்கள் மாற்றம் காணுகின்றன-குடியிருப்பு ஓர் எடுத்துக்காட்டு

"ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டு நின்றது. ஆல மரத்தின் இலைகள் அசைந்து பச்சைக் கொடி பிடிக்க, மாடுகளும், ஆடுகளும்  பறவைகளும் குதுகலிக்க, ஒரு கிராமத்து வாசனையை நுகர்ந்த வண்ணம் உள்ளே நகர்ந்தோம்"

பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

02 March 2013

கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ! கவலையுறும் கிராம மக்கள்

காலங்காலமாக விவசாயத்தினையே நம்பி வாழுகின்ற மக்கள் நம்மவர்கள். ஆனால் காலநிலை மாறிவிட்டது, காலங்களும் மாறிவிட்டது இதனால் கை நழுவிப்போனது அவர்களின் தொழில் நிலமை, அவர்களது நம்பிக்கையினைப் போல். மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடா வருடம் ஏற்ப்பட்டு வரும் வெள்ள அனர்த்தம் மாற்றீடில்லாத பாரம்பரிய விவசாயத்தினை கழுவிச் சென்று அந்த விவசாயிகளை எல்லாம் நடு வீதியில் தள்ளி விடுவதனை சமகால அறிக்கைகளில் இருந்து காணலாம்.  
கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் மனித வலுவில் (கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம்) ஏற்ப்படுத்தும் பயனுள்ள மாற்றம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது