பிரச்சனை
அதிக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் அரச தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் அதிகம் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள், முயற்சியாளர்கள் எனப் பலர் வாழும் எமது பிரதேசத்தில் தமது பணப்புழக்கத்தினை செய்ய நீண்ட தூரம் பிரயாணம் செய்து களுவாஞ்சிகுடிக்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு துவங்கி களுதாவளை வரையிலான பகுதியில் சுமார் 10,000 வங்கி வாடிக்கையாளர்கள் ஏறத்தாள வசிக்கின்றனர். ஆனாலும் இங்கு எந்த ஒரு ஏடிஎம் வசதியும் இல்லை. இதனால், அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிகுடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள்
• நேரம் வீணாதல்
- பாதுகாப்புப் பிரச்சினை
• போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு
• பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படல்
• மனித வளத்தை வீணாக்குதல்
ஏடிஎம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள்
• பணம் எடுப்பது, வைப்பு செய்வது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு எளிதில் அணுகல்.
• வங்கிகளுக்கு சென்று வீணாகும் நேரம் மற்றும் பணம் மிச்சம்.
• பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும்.
• மனித வளத்தை திறம்பட பயன்படுத்த முடியும்.
வங்கிகளுக்கு வேண்டுகோள்
கிராமப்புறங்களில் ஏடிஎம் வசதிகளை அதிகரிக்க வங்கிகள் முன்வர வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். வங்கிகளும் மக்களிடம் அதிக வருமானத்தினை அடைய முடியும். எமது பிரதேச மக்கள் சார்பில் பல முன்னெடுப்புக்களை நான் முன்னெடுத்தும் சரிவராத நிலையில் இதனை பொதுவான வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகின்றேன்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
ஏடிஎம் வசதிகளை அதிகரிக்க வலியுறுத்தி வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்களே! ஒன்றிணைந்து செயல்பட்டால், கிராமப்புறங்களில் ஏடிஎம் வசதிகளை பெற முடியும்.
0 comments:
Post a Comment