ADS 468x60

28 December 2022

'நாம் என்ன இந்த நாட்டுக்கு செய்தோம்' என்பதே இன்று நமக்குள்ள கேள்வி

பல மாதங்களாக இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதனைப் பார்க்கின்றோம். ஆனால் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயல்முறை குறித்து அர்த்தமுள்ள உரையாடல்கள் நடைபெறுகின்றனவா என்பது ஒரு கேள்வி. கடந்த காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நம் நாட்டை உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் செல்ல வேண்டிய திசையைப் பற்றிய சரியான மதிப்பீட்டை அடைவதே இன்று எம் முன் உள்ள தேவையாகும்.

இந்த புதிய யோசனைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். உழைக்கும் மக்கள், உழைக்காதவர்களை இயன்றவரை உழைக்கத் தூண்ட வேண்டும். இந்த ஊக்கத்தை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் செய்ததெல்லாம் வேலை செய்யாத மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுதான். அரசியல் சித்தாந்தத்துக்காகப் பல நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் மக்களுக்கு இலவசங்களை வழங்க அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

22 December 2022

பொது மக்கள் ஒருபோதும் தேர்தலைக் கோரவில்லை!

இன்று பல பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தவண்ணமுள்ளன. 2023ல் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கை எளிதாகுமா? ஐஎம்எப் கடன் தொகை கிடைக்குமா? மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுமா? இது போன்ற பல பிரச்சனைகள் பொது சமூகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தற்போது மின்சார நெருக்கடி பற்றி பேசப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்கள் வேகமாக வறண்டு கிடப்பது இதனை பாதிக்கும் முக்கிய காரணிகள் என பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சார விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமையை நாம் பாதுகாக்கத் தவறினால், நாம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மின்சாரம் இல்லாதபோது பொருளாதாரமும் அதோகெதியாகி பாதிக்கப்பட்டுவிடும்.

16 December 2022

நாம் நெல் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட என்ன செய்யலாம்?

நம்மில் பலர் உணவு நெருக்கடி மற்றும் உணவுப்பாதுகாப்பு பற்றி கரிசனைகொள்ள ஆரம்பித்துள்ளோம். ஆதில் முக்கிய செல்வாக்குச் செலுத்தும் உணவுப்பொருள் அரிசியாகும். அதில் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது பற்றி இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

நமது நெல் அறுவடை, அரிசி நுகர்வு, விலை நி
ர்ணயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, மூன்று முக்கிய காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. 

முதலில் நெல் அறுவடையில் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இரண்டாவதாக, நெற்செய்கையாளருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அரிசியினுடைய சந்தையை கையாள வேண்டும். 

மூன்றாவதாக, அரிசியை நியாய விலையில் பெற நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

15 December 2022

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையின் வேகமான வளர்சியால் நாடு இன்னொரு ஆபத்தில் சிக்கியுள்ளது.

இன்று நம் எல்லோருக்கும் தெரிந்த நாட்டின் முக்கியப் பிரச்சினை பொருளாதாரத்தின் வீழ்ச்சி என்றாலும், அதே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய மற்றொரு பிரச்சினை இன்று உள்ளது. அதுதான் இன்று பாடசாலை மாணவர்கள் உட்பட இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு வேகமாக அடிமையாகி வருவது.

நாம் கடின உழைப்பால் பொருளாதாரத்தை மீட்டெடுத்தாலும், போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து இளம் தலைமுறையை காப்பாற்றவில்லை என்றால், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க யாரும் இருக்க மாட்டார்கள். 

12 December 2022

போதைப்பொருள் வலையில் சிறியமீன்களை மட்டுமல்லாது சுறாக்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நமது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பிரித்தானியர்களுக்குப் பிறகு நாட்டை ஆண்டவர்களே இதற்குக் காரணம். இவர்கள் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள். இதன் விளைவாக, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் நம் நாட்டிற்கு பரிசாக கிடைத்துள்ளனர். இந்நிலை மேலும் வளர்ச்சியடைந்தால் நாளை நமது நாடு மேலும் வீழ்ச்சியடையும். இப்போதும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து காப்பாற்ற அறிவார்ந்த மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

03 December 2022

பிரச்சனைகளின் வேர்களுக்கு கீழே: இலங்கையின் நெருக்கடிக்கு தேர்தலைத் தாண்டிய தீர்வுகள்

இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர், தேர்தலில் வெற்றிபெறும் கட்சி இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள், தேர்தல் மூலம் புதிய அரசாங்கத்தை அமைத்து, அதை நல்ல முறையில் நிர்வகித்தால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீரடையும் என்று கருதுகின்றனர்.

15 November 2022

நேற்றய வட்ஜெட் யாரைத் திருப்திப்படுத்தியுள்ளது?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி, 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ரூ. 2,404 பில்லியன்.

அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவு ரூ. 5,819 பில்லியன் (19.2%) மற்றும் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் ரூ. 3,415 பில்லியன் (11.3%).

அரசு தனது வருவாயை பெருக்குவது போல், பொருளாதாரத்தின் முழுச் சுமையையும் பொதுத்துறையே சுமக்க வேண்டும் என்பது நவீன உலகத்துக்கு ஒத்துப்போகாத தோல்வி அம்சமாகும்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியது, கோவிட்-19 தொற்றுநோயால் சுற்றுலா வருவாயை இழந்தது மற்றும் பல ஆண்டுகளாக பொருளாதார தவறான நிர்வாகம் கடுமையான டொலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

12 November 2022

வெட்கத்தின் காரணமாக உண்மையை மறைக்கக்கூடாது

பசி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிந்தைய மனவுளைச்சல் சீர்கேடு பசியின் காரணமாக குழந்தைகளுக்கு பொதுவானதாக இருந்துவிடுகின்றது

பாடசாலைகளில் பல சிறுவர்கள் பட்டினியால் பாடசாலை செல்வதை நிறுத்திவிட்டதாக பல செய்திகள் நாளிதழில் வெளியாகியுள்ளது. எனினும் இது உண்மைக்குப் புறம்பானவை என சிலர் தெரிவித்துள்ளனர். 

அது உண்மையா பொய்யா என்பதை ஊர் மக்களிடம் விட்டுவிடுவோம். இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் சரியாக சாப்பிடாமல் விலை அதிகரிப்பினால் உணவை புறக்கணித்து வருவதாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வெளியான செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

பாடசாலைக்கு வரும் குழந்தைகள் பசியால் மயங்கி விழுவது போன்ற செய்திகளும் சமீப நாட்களில் நாளிதழ்களில் வந்தன. ஆசிரியர்களின் கூற்றும் இதை உறுதிப்படுத்தியது. இந்நாட்டு மக்களின் பட்டினியைப் போக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை உலக உணவு அமைப்பு கோரியுள்ளது. நாம் வெட்கத்தின் காரணமாக உண்மையை மறைக்கக்கூடாது, ஏனென்றால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் பசியின் பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும்.

07 November 2022

அரசியல் திருப்புமுனை இன்றேல் சமுக நெருக்கடி தீவிரமடையலாம்.

தொடர்ச்சியான நிதி நெருக்கடி 2022 இல் வறுமையை 25.6 வீதமாக உயர்த்தக்கூடும்.

2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாகி, நாட்டின் வறுமையை 2009 ஆம் ஆண்டின் நிலைக்குத் தள்ளுவார்கள் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக எமது நாட்டில் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும், மக்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் (DCS) ஒவ்வொரு குடியுரிமையாளரதும் வருமானம்; மற்றும் செலவினை மதிப்பிடுவதற்கு குடும்ப வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பைப்பைப் (he Household Income and Expenditure Survey) பயன்படுத்துகிறது.

'அடிப்படை தேவை அணுகுமுறைக்கான செலவு' என அறியப்படும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையைப் 'பயன்படுத்தி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம்- DCS நாட்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டை கணக்கிடுகிறது. 

06 November 2022

அரசு மக்கள் மீது பாரத்தினை போடுதல் பொருளாதார நெருக்கடிக்குப் பயன்தராது

அரசின் திட்டங்கள் சிலவற்றால் பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைந்தாலும், பொதுமக்களின், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வயிற்றில் அடிப்பது ஒருவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்னும் நீடிககின்றது. பிள்ளைகளுக்காக பால் மாவினைப் பெற்றுக் கொள்வதற்காகப் செல்லும் பெற்றோர் வெறுங்கையுடன் வீடு திரும்புவது முதல், மண்ணெண்ணெய் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டதால், எரிபொருள் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து ஏற்பட்ட மரணங்கள், எரிவாயுவுக்காக நீண்ட வரிசையில் நிற்பது போன்றவற்றைப் பார்த்தோம். 

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னும் மீண்டு வருகிறது, இருந்தாலும் மேலும் உணவுப் பணவீக்கம் 70-75 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இன்றும் அன்றாடம் வாழ்கைக்காகப் ஒரு நாளைக்கு ஒரு உணவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன.

எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம்.

  • நாம் செலுத்தவேண்டிய மொத்த பொதுக் கடன் சுமார் 80 பில்லியன் டொலர்கள்.
  • ஆனால் எங்களுக்கு முன்மொழியப்பட்ட கடன் தொகை 2.9 பில்லியன் டொலர்கள் ஆகும்
இந்த நாடு பல இடர்களை கண்டு வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் அதன் பொருளாதாரம் அவ்வளவு ஆட்டம் காணவில்லை. அது 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்தான் இந்தப் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சுத்தமாக இல்லாமற்போனது, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகம் தடைபட்டது. தினசரி சமையலுக்கு எரிவாயு கூட வழங்க முடியாத நிலை தோன்றியது. இவை அனைத்தும் சேர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயரக் காரணமானது. இதனால் தொல்லை தாங்க முடியாத மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு பலராலும் என்ன வியாக்கியானங்கள் கூறப்பட்டாலும், நாட்டின் அரசியல் தலைமை மாற்றப்பட்டது அந்த மாற்றத்தின் பின்னர் அது நிறுத்தப்பட்டது.

30 October 2022

பணவீக்கமும் பொருட்களின் விலை ஏற்றமும்

சமீப காலமாக, பொருட்களின் விலை தொடர்ந்து வேகமாக உயர்ந்து வந்தது. இதன் காரணமாக மாதந்தோறும் பணவீக்கமும் வேகமாக அதிகரித்தது. இந்த உயர்ந்து வரும் பொருட்களின் விலைகள் குறையுமா, எப்போதும் அதிகரித்து வரும் பணவீக்கம் குறையுமா என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் இந்த பொருட்களின் விலை குறைவதும் பணவீக்கம் குறைவதும் ஒன்றல்ல. பணவீக்கம் என்பது பொதுவான விலை மட்டத்தில் ஏற்படும் தொடர்ச்சியான உயர்வு. இது விலை குறியீடுகளால் அளவிடப்படுகிறது. தற்போது, நாட்டின் பணவீக்கம் முக்கியமாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது. 

இன்று போதைப் பாவனையில் இருந்து மாணவ சமுகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு பாடசாலை சமுகத்திடமே உள்ளது

ஒரு நாடு இப்படியெல்லாம் வரக்கூடாது என்பதற்கு உதாரணமாக நமது நாடும் இருப்பது கவலை. இன்று சில குழந்தைகள் மற்றும் சில இளம் பெண்கள் எதிர்கொள்ளும் துரதிஷ;டமான நிகழ்வுகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது, நமது மூத்த சமூகம் அவர்கள் மீது குறைவான கவனம் செலுத்துகிறது என்று தோன்றுகிறது. 

நமது குழந்தைகளுக்கு சிறந்தவற்றை செய்துகொடுப்போம், என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், குழந்தைகளின் உள ஆரோக்கியத்திற்குத் தேவையான காரணிகள் நிறைவேறவில்லை. இளைஞர்களே முதுகெலும்பு, எதிர்காலம் என்று பெற்றோர்கள் பெருமை பேசுகிறார்கள், ஆனால் அவர்களை வழிநடத்த பெற்றோருக்கு எந்த திட்டமும் பெரும்பாலானோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், இது ஒரு சமூக நெருக்கடியின் முன்னோடியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதற்கான தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தின் மாத்திரமல்ல, மூத்தோர் சமூகத்தினதும் கடமை என சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

29 October 2022

பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி. -பாலியல் கல்வியின் தற்போதைய பலவீனத்தை காட்டுகிறது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் செல்வம் இல்லாமல் போயுள்ளது ஆனால் நோய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது நம் நாடு பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நோய் பொருளாதார நோய். இதனால் நாட்டு மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை அசெம்பிளியின் போது பள்ளிக் குழந்தைகள் மயங்கி விழும் அளவுக்கு அது கடுமையாகிவிட்டது. டொலர் நெருக்கடி, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரக் காரணங்களால் நம் நாடு வறுமையில் விழுந்து, பிச்சைக்காரர்கள் உதவி அனுப்பினாலும் வங்குரோத்துக்கு வந்துவிட்டோம். 

இந்நிலை ஒரே இரவில் ஏற்பட்டதல்ல. வெள்ளையர்களுக்குப்; பிறகு 74 வருடங்கள் நம் நாட்டை ஆண்டவர்களே இதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும். நாடு வறுமையில் வீழ்ந்துள்ள போதிலும், எமது நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டுக்காக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளன. இது தொடர்பில் சில நல்ல முன்மொழிவுகள் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட போதிலும், தமது அரசியல் பயணம் வீழ்ச்சியடையும் என்ற அச்சத்தில் பல தரப்பினரும் அவற்றைப் பின்பற்றியதாகக் காணப்படவில்லை.

23 October 2022

பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை?

மட்டக்களப்புக்கு மேலதிகமாக ஒரு அரச பல்கலைக்கழகம் வர இருக்கும் செய்தி மகிழ்ச்சியைத் தருகின்றது. 

நாம் அறிந்த வகையில் நமது பல்கலைக்கழக அமைப்பை எடுத்துக் கொண்டால், சிக்கலான பல பிரச்சினைகள்; உள்ளன. சில அரசுகள் இதைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளன. சில அரச தலைவர்கள் விதிகளையும் நிர்வாகத்தையும் மாற்றியுள்ளனர். 

ஆனால் அண்மைக்காலமாக கல்விக்கும் ஆய்வுக்கும் ஏற்ற சூழல் பல்கலைக் கழகங்களில் கட்டியெழுப்பப்படவில்லை. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், பல்கலைக்கழக மாணவர்களின் கைகளால் நல்ல படைப்புகள் உருவாக்கப்பட்டன. முக்கியமான ஆய்வு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன விவாதிக்கப்பட்டன. இன்று அவை எதுவும் பெரிதாகக் காணப்படவில்லை. பல்கலைக்கழக அனுமதியில் தாமதம், படிப்புகளை முடிப்பதில் தாமதம், தொல்லைகள், வசதிகள் இல்லாமை போன்றவை நாம் காணும் பிரச்சினைகளில் சிலவாகும்.

அரசியலமைப்பு ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் அவுட்லைன்

நாம் காலாகாலமாக பல அரசியல்வாதிகளை எம்போன்ற மூன்றாம் உலகநாடுகளில் இருந்து பலம்வாய்ந்த நாடுகளையும், அமைப்புக்களையும் பயமில்லாமல் எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளமையை நாம் அவதானித்துள்ளோம். இதனால் பல இழப்புக்களை நாம் அவர்களின் உலகமயமாக்கல் கொள்ளையில் இருந்து சந்தித்து வருகின்றோம்.

ஜனநாயகம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு சக்திவாய்ந்த அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குகின்றன. இது ஒரு அறிவுறுத்தல் மட்டுமல்ல, ஒரு வகையான எச்சரிக்கையும் கூட. ஜனநாயகத்தை இழந்த சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்ட ஏழை நாடுகள் சர்வதேச ஆதரவைப் பெறுவதில்லை. இந்த நாடுகள் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலம்வாய்ந்த நாடுகளும் அவர்களைத் தலைமை தாங்கும் சர்வதேச நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு சாசனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்திற்கு வழி வகுத்துள்ளது.

19 October 2022

வரி நாட்டை வளர்தெடுக்கவா இல்லை வறுமையில் தள்ளவா?

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை, ஒவ்வொரு சவால், ஒவ்வொரு இடர், ஒவ்வொரு தடை அதனால் இந்த நாடு, வறுமையில் முதலிடம், உணவுப் பற்றாக்குறையில் முதலிடம் என பல விடயங்களில் பின்னடைந்து செல்வதனை நாம் நன்கு அவதானித்து வரும் நிலையில் புதிய வரிக்கொள்கை மக்களை சோகத்தில் தள்ளியுள்ளது. நமது தேசத்தில் தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூர் வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரிக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டில் வரி விதிப்பு முறைகளில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை இவ்வருடத்தில் காணக்கூடிய தனித்துவமான உண்மையாகும். பெறுமதி கூட்டப்பட்ட வரி (வற்)) சமீபத்தில் செப்டம்பர் 1 முதல் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

ஆதற்கு அப்பால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்ற புதிய வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வரி விகிதம் 2.5 சதவீதம். அதனுடன் மின்சாரம், தண்ணீர் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளும் அதிக சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டன. இவை அனைத்தின் இறுதி விளைவு மக்களின் கைக்கு எட்டாத அளவிற்கு வாழ்க்கைச் செலவு உயர்ந்தது. இதன் மூலம் நாட்டில் இயங்கி வரும் சிறு, குநந் தொழில்துறையினர் உட்பட பல தொழில் அதிபர்கள் தங்களது தொழிலை தொடர முடியாத பின்னணி உருவானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அரசு நேரடி வரிகளை விதித்து உயர்த்தியுள்ளது.

18 October 2022

சமத்துவமற்ற வரிக்கொள்கையில் வாடப்போகும் பொதுமக்கள்

மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் ஒவ்வொருவரும் இனி வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர் வருமான வரி வரம்புகளை அரசு திருத்தியமைத்துள்ளதால், இந்த புதிய வருமான வரி வரம்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமூலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய திருத்தத்தின்படி, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர் வருமான வரி செலுத்தும் வரம்பை 12 லட்சம் ரூபாயாகக் குறைப்பதன் மூலம், இனிமேல் சுறா மீன்கள் மட்டுமின்றி, நெத்தலிகளும் வரி வலையில் சிக்கிவிடும் அபாயம் காத்திருக்கின்றது.

16 October 2022

நாம் வசதிபடைத்தவர்களா அல்லது வருமானம் குறைந்தவர்களா?

இன்று பொருளாதாரம் கற்பிக்கின்ற, பல பட்டங்களை பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கானர்கள் நம்மத்தியில் எப்படியோ மலிந்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் எமது சிறிய நாட்டின் பொருளாதாரச் சிக்கலைக்கூட விளங்காத மக்களுக்கு சொல்லிக்கொடுக்க முடியாத கல்வியால் வீட்டில் மாத்திரமல்ல நாட்டிலும் பல பிரச்சினைகள்! அது நாம் வசதியானவர்களா இல்லையா என்பதுதான் அந்தப்பிரச்சினை.

இலங்கையை நடுத்தர வருமான நிலையிலிருந்து நீக்குவதற்கு சந்தர்ப்பம் கோரி உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது. 

அதாவது, இலங்கை இப்போது இருக்கும் இடத்திலிருந்து கீழே இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மற்றவர்களின் பணத்தில் வாழும் பொய்யான பொய்யர்கள் மற்றும் திருடர்கள் இந்த சூழ்நிலையை விரும்பவில்லை என்பதையே இதிலிருந்து நாம் உணரலாம்.

எமது பாடசாலைக் குழந்தைகளின் எதிர்காலம் இப்படியாகிவிடக்கூடாது!

பாடசாலைக் கல்வி முறை, ஒழுக்க முறைகள் என்பன காலத்துக்குக் காலம் வேகமாக மாறி வருகின்றன. ஆந்த வகையில், ஹலவத்த பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் தனது பாடசாலை பையில் மது போத்தலை மறைத்து வைத்திருந்த போது மாணவர் தலைவர்களால் பிடிக்கப்பட்டார். ஒன்பதாம் ஆண்டு படிக்கும் குறித்த மாணவி, பாடசாலைக்குள் விஸ்கி போத்தலைக்; கொண்டு வந்துள்ளார். சந்தேகத்துக்குரிய மாணவி, தனது தந்தை விஸ்கி போத்தலை வீட்டிற்கு கொண்டு வந்து தனது நண்பருடன் குடித்த மிகுதியை பாடசாலைக்கு கொண்டு வந்ததாக கூறினார். இது தொடர்பில் மாணவி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு அதிபர் அறிவித்துள்ளார். ஒன்பதாம் ஆண்டு மாணவர் என்பவர் தனது எதிர்காலத்திற்காகத் தயாராகும் மாணவர். ஜி.இ.சி. சா. துரர் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் உயர்தரப் பரீட்சையின் ஊடாக பல்கலைக்கழகம் செல்வதே அவருக்கு இயல்பான பாதை. 

15 October 2022

கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் !

கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் !
கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான்  ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் பெறுகின்றது எங்கும். அந்த ஆழுமை மக்கள் நலன் சார்ந்து அவர்களை மீட்பதற்காக சிந்தித்துத் திட்டமிடுதலிலும் அதனை செயற்படுத்துவதிலும்தான் தங்கியிருக்கின்றது. 

12 October 2022

அரசியலில் எதற்கு இத்தனைபேர் தேவை? எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்!

நாம் அனைவரும் அறிந்த  நாட்டின் முன் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதார சரிவுஇ மற்றொன்று அரசியல் அமைப்பை பெரும்பான்மை மக்களால் நிராகரிப்படுவது. பொருளாதார வீழ்ச்சிக்கு தற்போதுள்ள அரசியல் அமைப்புதான் காரணம் என்று பலர் கருதத்துவங்கியுள்ளனர்.
உண்மையில் பொருளாதாரத்தை புத்துயிர் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக விவாதித்ததால்இ அது பற்றி இனி இங்கு பேசி வேலையில்லை. மாறாக அரசியல் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நாட்டின் அரசியல் அமைப்பு பெரும்பான்மை மக்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதோடு 225 உறுப்பினர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்றனர். 

09 October 2022

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரிக்கலாமா?

இன்று ஆர்பாட்டங்கள், எதிர்புகளை தெரிவித்து இலங்கைக்குள் இருந்துகொண்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரித்தாலும், அவற்றை முழுமையாக புறக்கணிக்க முடியாது. குறிப்பாக சர்வதேச ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கைக்கு அதனை எப்படியும் செய்ய முடியாது. அத்துடன்  இன்று சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெறுவதுடன், சக்தி வாய்ந்த வல்லரசுகளுடன் நட்புறவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இங்கே, பலம்கொண்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். இல்லை என்றால் சர்வதேச சமூகத்தின் முன் அவமானப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுவோம் மற்றும் புறக்கணிக்கப்படுவோம்.

08 October 2022

விவசாயிகளுக்கு யார்தான் முக்கியம் கொடுக்கிறான்?

இன்றைக்கு எல்லோரும் டாக்டராகனும், எஞ்சினியராகனும், வக்கீலாகனும், ஐரி ஒப்பிசராகனும் அப்புறம் உழைக்கிற காச கடையில கொண்டு கொடுத்தா ப்ரசா உணவு வேண்டிச் சாப்பிடலாம். 

ஐயா இந்தச் சாப்பாட்ட என்னுடைய விவசாயப் பெருங்குடி மக்கள் எங்கயோ ஒரு காட்டில மழையிலும் வெயிலிலும் கண்ணுமுழி பிதுங்க, கன்னச் சதை தொங்க உடலில் வேர்வை உப்பா பூக்க உடலால வெம்பாடுபட்டு விளைய வைத்தால்தான் இங்க ப்றசா உணவு வரும். 

ஒரு கவிஞ்ஞன் எழுதுகிறான் ' கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு, கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் மனிதன் உணருவான் பணத்தைச் சாப்பிட முடியாதென்று'. 

02 October 2022

அறிவை மூலதனமாக மாற்றுவதே வீழ்ந்து கிடக்கும் எமது நாட்டிற்கு ஒரே வழி.

இன்று எமது தேசிய கல்வி மற்றும் சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றி பல விவாதங்கள் உள்ளன. அவர்கள் பழகும் போது முதலில் உணரும் விடயம் என்னவென்றால், சமூகத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் பற்றிய உன்னிப்பான அவதானிப்பு உள்ளது. படித்த சமுதாயம் மற்றும் படிக்காத சமூகம் இரண்டும் கல்வியில் ஆர்வமாக உள்ளது. அதுபோல பணக்கார சமூகம் மற்றும் ஏழை சமூகம் கல்வியில் சமமாக ஈடுபடுகின்றனர். கல்வி தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளை ஒட்டுமொத்த சமூகமும் உற்று நோக்குகிறது. எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும், இது ஒரு சாதகமான நிலை. கல்வியில் பலவிதத்தில் சாதகமான சூழ்நிலையை தெரிவிக்கும் ஆசிய நாடாகவும் நமது நாடு அறியப்படுகிறது.

01 October 2022

பிறருடைய குழந்கைகளை நமது குழந்தைகள் போல் பாதுகாப்போம்.

இந்த ஆண்டு உலக குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் 'ஒவ்வொரு குழந்தைக்குமான ஒரு சிறந்த எதிர்காலம்' என்பது ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்டுள்ளது.

1857 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற பாதிரியாரான டாக்டர் சார்லஸ் லியோனார்ட், ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு 'தி ரோஸ் டே' என்று பெயரிட்டார், மேலும் அந்த நாளில் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1919 ஆம் ஆண்டில், குழந்தைகளைப் பாதுகாப்பது, கல்வி, உணவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பு போன்ற 10 காரணிகளின் அடிப்படையில் குழந்தைகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்தது.

18 September 2022

'யார் இந்த பூராடனார்' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நினைவுப் பேருரை!

அறிமுகம்

சிந்தனைகளை யாராலும் பசிவந்தால் சாப்பிட முடிவதில்லை ஆனால் அதுவே பலர் ஒழுக்கமுள்ள மற்றும் வளர்சியடைந்த சமுகமாக மாற வழிவகக்கின்றது என்றால் அது பொய்யில்லை. உலகத் தமிழ் வளர்சிக்கு ஊன்றுகோலாக பல ஈழத்தமிழர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர் இன்னும் இருந்துகொண்டே இருப்பபார்கள். 

தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் (இலக்கியம், இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.  

14 September 2022

கிழக்கில் ஒருபோக விவசாயம் செய்ய 5 இலட்சம் தொழிலாளர்கள் தேவை: மீண்டும் மம்பட்டி தூக்கவேண்டும்!

  • சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம்?
  • எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியுமா?
  • ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார்.
  • கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர்.

வரலாறு முக்கியம் நமக்கு, நமது விவசாயிகள் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளனர். அந்தவகையில் 1900 ஆம் ஆண்டில், இலங்கை விவசாயிகள் முட்செடிகளைப் பயன்படுத்தி நெல் வயல்களைப் பயிரிட்டனர். இது ஒரு இயற்கைக் கரிம உரம். அதேபோல பூச்சிக்களை மற்றும் ஈக்களை விரட்ட பாரம்பரிய இரசாயன முறைகளையும் உள்ளூர் மூலிகைகளையும் பயன்படுத்தினர். 1910ல் கூட இந்நாட்டு மக்களும் அவ்வாறே பயிரிடப்பட்டனர்.

உணவு நெருக்கடிக்கு கொண்டு செல்லும் பொருளாதார பின்னடைவு

  • 185 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பாண் விலை  485 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • ஒவ்வொரு 05 குடும்பங்களிலும் 04 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
  • ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள வற் வரி அதிகரிப்பின் மூலம் இந்த விலைகள் அதிகரித்து பணவீக்கம் மேலும் உயரும் 
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. சில நேரங்களில் இந்த யோசனைகள் உள்நாட்டிலும் பின்னர் சர்வதேசத்திலும் வழங்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான அடக்குமுறைகளும் தற்போது சர்வதேசப் பொருளாக மாறியுள்ளது.

12 September 2022

சுற்றறிக்கைகளும் பொருளாதாரப் பின்னடைவும்: ஒரு ஆய்வுப்பார்வை.

பல வருடங்களாக நான் கோடிட்டுக்காட்டு; ஒரு விடயம் அது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் சுற்று நிருபங்கள். இதனை இன்று மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடலில் அரச தலைவர் இந்த ஆலோசனையை வழங்குகிறார். மேற்கூறிய கலந்துரையாடல், அந்தத் திட்டங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த சிக்கல் சூழ்நிலைகளை அகற்ற உதவியது. வெளிநாட்டு உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சரியான இலக்கை நோக்கி நகரவில்லை என்றும் அதனால்தான் வெளிநாட்டு உதவி வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

11 September 2022

விளையாட்டு வீரர்களின் சாதனை சோதனையில் வாடும் மக்களுக்கு ஊக்கமருந்து.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முழு இலங்கை சமூகத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதிலும், நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் பட்டாசுகளின் சத்தம் மற்றும் ஆரவாரம் கேட்கத் தொடங்கியது. இந்த நேரத்தில் குதூகலமும், பெருமையும், உற்சாகமும் பொதிந்து கிடக்கும் அற்புதமான சந்தர்ப்பமாகக் கருதுவது மிகவும் சரியானது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒருபுறம் இலங்கை அணி மீண்டும் ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது. மறுபுறம் இலங்கை அணி ஆசியக் கிண்ண கிரிக்கெட் மகுடத்தை வென்றது. அந்த அணிகளுக்கு நாட்டில் உள்ள பலர் நம்மட பொடியணுகள், எங்கள் பெண்கள் என்று வாழ்த்தத் தொடங்கினர்.

சர்வதேச உறவுகளை நாம் வளர்துக்கொள்வது நாட்டு வளர்சிக்கு தூண்டுகோலாகும்.

  • இலங்கையின் வீழ்ச்சிக்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்தமையே பிரதான காரணம் 
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இலங்கைக்கு ஸ்வீப் டிக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன.
  • அமெரிக்கா சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதி சர்வதேச சமூகத்தின் முன்னேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது

நமக்கு முன்னேறக் கிடைத்த பல சந்தர்பங்களை சில அரசியல் முதலைகளின் நன்மைக்காகத் தட்டிக்கழித்த கதைகள் ஒன்றும் புதியதல்ல. இவற்றால், இந்நாட்டின் பொருளாதாரம் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் வேளையில் USAID அமைப்பின் தலைவராக இருந்த திருமதி சமந்தா பவர் இலங்கை வந்தடைந்தார். நல்ல காலம் இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை அதனால் நமது பொருளாதாரம் மூழ்கவில்லை. ஆனால் கிணற்றின் அடியில் மூழ்குவதற்குப் பதிலாக பொருளாதாரத்தின் பின்பகுதி கிணற்றில் விழுந்து உடைந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இந்த முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது உண்மை கதை. 

ஏன் எலிசபெத் மகாராணியின் மரணம் குறித்து இந்நாட்டு குடிமக்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்?

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் கிரேட் பிரிட்டன், பொதுநலவாய நாடுகளின் கவனத்தை மட்டுமல்ல, உலகத்தின் கவனத்தையும் ஈர்த்த ஒரு பரபரப்பான நிகழ்வாகும். வேகமாக மாறிவரும் உலகில், பிரிட்டிஸ் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், கிரீடத்தின் பங்கு கேள்விக்குள்ளாக்கப்படும், இருந்தாலும் பிரிட்டிஸ் ராணி கவனத்தை ஈர்க்கும் நபராக இருந்து வருகிறார். நெருக்கடியான சூழ்நிலைகளில் பிரித்தானிய மகுடத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றும் அவரது திறமையும் அங்கு அவர் காட்டிய திறமையும் தனித்துவமானது.

05 September 2022

இன்று பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பலரது கடைசி இலக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பாக மாறிவிட்டது

நாம் பல மாற்றங்களை கண்டும், எதிர்கொண்டும் வருகின்றோம். அந்த வகையில் ஒரு நாட்டில் ஒரு கிளர்ச்சி, போர், கடுமையான பொருளாதார மந்தநிலை அல்லது முடிவில்லாத பொது அமைதியின்மை ஏற்படும் போது, அந்த நாட்டு மக்கள் முதலில் நினைவில் கொள்வது, அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழ வேண்டும் என்பதுதான். இதை நமது வரலாற்றில் அதிகம் கடந்துவந்துள்ளோம். தொல்லை தரும், அசௌகரியமான சூழலில் இருந்து தப்பித்து, தொல்லை இல்லாத வசதியான சூழலில் வாழ வேண்டும் என்ற மனிதனின் உள்ளார்ந்த தேவையின் விளைவு இது. 

04 September 2022

ஊழல் இல்லாத நாடாகும் வரை உதவி கிடைக்காது!

 நம்மால் வரவேற்கப்படும், நாமறிந்த ஒரு விடயம்தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு அண்மையில் இணக்கம் தெரிவித்துள்ளமை. இந்த உடன்படிக்கை தொடர்பான கடனைப் பெறுவதற்கு இலங்கை பல கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், இது அடுத்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு உதவும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவற்றுள் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு வலுவான, ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விதித்துள்ள நிபந்தனை அவற்றுள் முக்கியமானதாகும்.

03 September 2022

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர்.

நமது தலைவர்களின் ஆட்சியால், இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர். நாளை பிறக்கும் குழந்தையின் கடன் சுமை எவ்வளவு என்று சொல்ல முடியாது. நம்மைப் போன்ற எநத ஒரு நாடும் கடன் மற்றும் உதவி இல்லாமல் காலூன்றி நிற்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஆகவே இங்கு பிரச்சனை கடன் அல்ல. இது கடன் மூலம் கிடைக்கும்  நன்மையுடன் தொடர்புடையது. கடனுடன் மேற்கொள்ளப்படும் திட்டமானது வட்டி மற்றும் கடனை செலுத்தக்கூடியதாக இருக்கின்றமை பயனுள்ள நிதி மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது. இற்கு ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் முறையான நிதி கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கம் இருக்க வேண்டும். இல்லை என்றால், 'மண் சரிந்து, மலையின் கீழே விழுவது' போல, நாடு அதள பாதாளத்தில் விழுந்து நாசமாகிவிடும்.

நாட்டின் சில பொருளாதாரச் சீர்திருத்தம் மாற்றத்துக்கான பச்சை சமிக்ஞை!

அனைவரும் எதிர்பார்த்த வகையில் இன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கவுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால் இந்த கடன் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாம் பார்க்கலாம், பொருளாதார நெருக்கடியை கடன்களை பெற்றுக் கொண்டு முடிவுக்கு கொண்டுவர முடியாது பதிலாக ஏற்றுமதி பொருளாதாரத்தை உறுதியாக்கி தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். பேச்சளவிலும் செயலளவிலும் அரச தலைவரின் பொருளாதாரப் பார்வையும் கொள்கையும் மிகவும் சரியானது மற்றும் நம்பகமானது என்றே கூற வேண்டும். கடன் வாங்குவது நெருக்கடிக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். பொருளாதாரத்தை நிலையான நிலையில் பராமரிக்க, ஏற்றுமதி மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதனை நாம் மறந்துவிடமுடியாது.

01 September 2022

இடைக்கால வரவுசெலவுத்திட்டம் - மூன்று விடயம்தான் உள்ளது!

இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டபடி, கடன் கோரும் ஒரு நாடு அதற்குப் பொருத்தமான பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டும். 

மூன்று அடிப்படை பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்;. முதலாவது: அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை ஒரு சிறந்த இடத்திற்குக் கொண்டு வருதல். அரசின் செலவினங்களைக் குறைத்து வருவாயைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாவது: உலகப் பொருளாதார செயல்முறைக்கு இணங்கக்கூடிய தேசிய பொருளாதார திட்டத்தை தயாரிப்பதற்கான முயற்சி. இது நீண்ட காலப் பொருளாதாரச் செயல்பாட்டின் முதல் படியாக அறியப்படுகிறது. மூன்றாவது: பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும் ஏழை சமூகத்திற்கு நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் ஒன்று ஏழை சமூகத்திற்கு நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது.

30 August 2022

கடினமான சூழலிலும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களின் மனத் தைரியம்!

கடந்த பரீட்சை முடிவுகள், நாட்டின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையான ஒரு சமிக்ஞையை வெளியிடும் அதிஷ;டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது எதிர்காலம் நம் குழந்தைகள். குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மற்றும் கொடுக்க வேண்டிய மிக மதிப்புமிக்க சொத்து கல்வி என்பதனை நாம் அறிவோம். ஒரு சமுகத்தின் அறிவு என்பது அதன் மூலதனம். ஒரு நாட்டின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான காரணியாக தேசிய கல்வி அறியப்படுகிறது. கல்வியின் முன்னெடுப்பு தோல்வியுற்றால், எதிர்கால இலக்குகளை அடைவது கடினம். கல்வியின் இடையூறில்லாத செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால இலக்குகளை அடைவது எளிது.

28 August 2022

வரலாறு சொல்லித்தரும் எமக்கு முன்னுள்ள ஆபத்து! ஊட்டச்சத்து கூட்டப்படுமா?

'கொரோனாவால் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 7 பேர் உயிரிழக்கின்றனர். பட்டினியால் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கின்றனர். உலக அளவில் கடந்த ஆண்டு பட்டினி, உணவுப் பாதுகாப்பின்மைஇ பஞ்சம் போன்ற காரணிகளால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது அது உலக அளவில் 15.5 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள் உலக அளவில் வறுமையையும், பட்டினியையும்இ பஞ்சத்தையும் எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் முக்கியக் காரணமாக இருக்கிறது' அந்தப்போரை இலங்கையில் நாம் இன்னும் செய்யத் துங்கவில்லை. இது இந்து தமிழ் சொல்லும் செய்தி.

இன்று எமது நாடு எது எதிலெல்லாம் முன்னிலை அடைந்து வருகின்றது. முக்கியமாக உலகில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மைப் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. 

இலங்கை உணவுப்பாதுகாப்பில் இருந்து மீண்டுவருவதற்கான பரிந்துரைகள்! அரசு கவனம் செலுத்துமா?

இலங்கையின் மனித அபிவிருத்தி மற்றும் சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகள் அதன் தெற்காசிய அண்டை நாடுகளை விட எப்பொழுதும் முன்னணியில் உள்ளன. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, மனித வளர்ச்சிக் குறியீடு, எழுத்தறிவு விகிதம் மற்றும் சுகாதாரம் தொடர்பான குறிகாட்டிகள் போன்ற இந்த குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம். உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் கணிசமான குறைந்த வறுமை விகிதத்தை கொண்டுள்ளது. அதில் இலங்கை 0.77 வீதமாகவும், இந்தியா 13.42 வீதமாகவும், பங்களாதேஷ; 15.16 வீதமாகவும், பாக்கிஸ்தான் 5.23 வீதமாகவும் உள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை அடைவதே இலங்கையின் இலக்காகும். 

24 August 2022

மண்ணெண்ணை விலை மக்களின் வாழ்வாதாரத்தை தீயில் கொழுத்தியுள்ளது! ஒரு ஆய்வுக் கட்டுரை.

பல ஆண்டுகளாக ரூ.87 க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஓரிரு நாளுக்கு முன்னர் ரூ.340 ஆக உயர்த்தப்பட்டது. இந்த விலை அதிகரிப்பு இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கனிம எண்ணெயின் விலை அதிகம் அதிகரித்து இடம்பிடித்துள்ளது. 

அன்று 1970 களில் மண்ணெண்ணெய் போத்தலின் விலை ஒரு ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. அந்த நேரத்தில், இந்த நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்ததால், வீடுகளுக்கு மண்ணெண்ணெய் போத்தல்கள் அல்லது கலன்கள் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது.

23 August 2022

பாடசாலை மாணவர்களை வேலையில் இணைத்தல் என்ன மாற்றத்தினை நாட்டிற்குள் கொண்டுவரும்?

எமது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பாடசாலை மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடுவதற்கு தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார எடுத்த தீர்மானம் இன்றய சூழலில் உயரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இந்த இக்கட்டான காலங்களில் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் உதவமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நெயற்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தால், கூடுதல் வருமானம் மாணவர்களின் கைக்கு வரும் அதே வேளையில் கல்வி கற்க்க  நிறைய செலவுகள் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பாக்கெட் மணியையும் இந்த முயற்சி ஏற்படுத்திக்கொடுக்கும். 

22 August 2022

அரசசேவையில் உள்ள மூன்று குழுக்களும் யார்? ஜனாதிபதியின் காட்டம் நியாயமானதா?

இலங்கை நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அநுராதபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் முக்கியமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன் அடிப்படையில் அரச உத்தியோக்தர்கள் இந்தச் சந்தர்பத்தில் கள்ளமில்லாமல் பணியாற்ற வேண்டும். அவ்வாறு நீங்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் அதற்கான வழி திறந்தே உள்ளது. நீங்கள் மாத்திரமல்ல வேலை செய்யவில்லை எனில் நானும் வீட்டுக்கு அனுபபப்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வேலைசெய்யாதவர்களுக்கு சும்மா சம்பளம் மற்றும் பிற வசதிகளை வழங்க அரசு தயாராக இல்லை. இந்தப்பேச்சை அரசு ஊழியர்கள் நன்றாக நினைவி;ல் இருத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த நாட்டில் இராணுவம் பொலிஸ் உட்பட மொத்த அரச சேவையாளர்களையும் எடுத்துக் கொண்டால் பதினெட்டு லட்சத்துக்கும் அதிகம் என்பது தரவு. இந்த பதினெட்டு இலட்சம் பேரில் பெரும்பாலானோர் வேலை செய்யாமல் நேரத்தை வீணடிப்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். இந்த நிலை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் எதிர்மறையாக பாதிக்கிறது ன்பதனை மறுக்க முடியாது.

21 August 2022

ஆதாரம் இல்லாமல்போகிறது மக்களின் சுகாதாரம்!

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் அண்மைக்கால வரலாற்றில் அனுபவித்திராத சோகமான சாபத்தினை அல்லது விதியை எதிர்கொண்டுள்ளோம். முதலில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. பசி, உறக்கமின்றி, எரிவாயு எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்காத மனிதனைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு குவிய் நெல்லுக்குள் கடுகினைத் தேடுவதற்கு ஒப்பாகும்.

20 August 2022

இன்று ஒரு துண்டு மீன்சாப்பிடுவது முடியாதுபோயுள்ளது.

காலி முகத்திடல்; உட்பட நிரந்தரப் போராட்டத் தளங்கள் இருந்த இடங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் மீண்டும் உருவாகி வருகின்றன. வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்களுக்கு காரணம் எரிபொருளும் மண்ணெண்ணையும்தான்.

இன்று பல மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து மீன்பிடி போராட்டம் நடத்தப்பட்டதாக பல பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தில் மண்ணெண்ணெய்க்கு மானிய விலை வழங்க வேண்டும், மீனவர்களுக்கு தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க வேண்டும், எரிபொருள் நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக வேலை இழந்த மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

14 August 2022

எம்மை ஆக்கிரமித்துள்ள சமுக நெருக்கடிகளும் ஆபத்துக்களும்.

இன்று நாம் கவனம் செலுத்தாத பல சமுக நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் வேர்விடத் துவங்கியுள்ளன. அதிகரித்துவரும் களவு, பாலியல் துஸ்பிரயோகம், கறுப்புச்சந்தைகள், ஏமாற்று வித்தைகள், இலஞ்சம், பதுக்கல்கள், போலிகளின் அனுமதி, போதைவஸ்த்து என பல சமுக நெருக்கடி முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக விரோத நடத்தை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதைப்பொருளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து காப்பாற்ற அரசு கடுமையாக உழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தகாலத்தில் கூட நாம் கல்வியைக் கட்டிக்காத்தோம்!

இன்று பல மாற்றங்கள் நிகழத் துவங்கியுள்ளன. எரிபொருள் நெருக்கடி மோசமடைந்ததால், இலங்கையின் வாழ்க்கை மாறியது. பேற்றோல் நிலையங்களில் வாகனங்கள் வரிசையாக நீண்டு செல்லத் தொடங்கியவுடன், அரசாங்கம் ஒரு முடிவை எடுத்தது. வாரத்துக்கு ஐந்து நாள் பாடசாலை வாரம் 2 அல்லது 3 நாட்கள் ஆனது, ஐந்து நாள் அலுவலக வேலை வாரம் 3 நாட்கள் ஆகச் சுருங்கியது.
வேலை இல்லாத நாட்களில் வீட்டில் இருந்தே விவசாயம் செய்யும்படி அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

அந்த கோரிக்கை காற்றில் மிதந்து அங்கு யாரும் விவசாயம் செய்யவில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நகர்ப்புற மக்களில் பெரும்பாலோர் எந்த அறுபடையினையும்; பற்றி அறியாத, விடுமுறை நாட்களில் மகிழ்வாக இருந்து டிவி பார்ப்பதை மட்டுமே விரும்பும் குழுவாக இருந்தனர். விளைச்சலுக்குத் தேவையான விதைகளோ உரங்களோ மக்களிடம் இல்லை என்பது அடுத்த பிரச்சினை. 

11 August 2022

பொருளாதார சிந்தனை இல்லாமல் அரசியல் பேசி நாட்டை காப்பாற்ற முடியாது

நாட்டின் பொருளாதாரம் குறித்து புதிய சிந்தனைகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் வெற்றுக் கோஷங்களினால் தாம் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றி இப்போது நாட்டுப் பொது மக்கள் ஓரளவு புரிந்துகொண்டிருப்பதை அங்கீகரிக்க முடியும். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக வங்கி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இரண்டு இன்றியமையாத நிறுவனங்களாக மாறிவிட்டதால், அந்த நிறுவனங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அதிக மதிப்பு உள்ளது. அந்த யோசனைகளை நிராகரிக்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பது தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

10 August 2022

ஓடி மறைந்த எந்த வீரருக்கும் தேசத்தின் மரியாதை கிடைப்பதில்லை.

 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இலங்கைக்கு பல விடயங்களில்; நற்பெயரைக் கொடுத்துள்ளன. மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் விருதுகளையும் சாதனைகளையும் பெறுவது அரிது. அந்த இரண்டு பிரிவுகளிலும் எங்களால் பதக்கம் வெல்ல முடிந்தது. குருநாகல் நெத்மி அஹிம்சா 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை எமக்கு வழங்கினார். 55 கிலோ பளு தூக்குதல் பிரிவில் திலங்க இசுரு குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். யுபுன் அபேகோன் மற்றும் பாலித பண்டார ஆகியோர் தடகளப் போட்டிகளில் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தினர். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுநலவாயத்தில் இலங்கை ஒரு சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றது.  

06 August 2022

நாம் உணவினை உற்பத்தி செய்தே ஆகணும்: நாலில் ஒருவர் ஒரு நேர உணவினை இழந்துள்ளோம்!

நாம் இந்தநாட்டில் இப்போது பன்முக நெருக்கடியினை எதிர்கொண்டு இருக்கிறோம். இது பார்ப்பதற்கு ஒரு பொருளாதார நெருக்கடி போல் தெரிகிறது, ஆனால் அதனுடன் தொடர்புடைய அரசியல் நெருக்கடி உள்ளது. தொற்றுநோயுடன், பல ஆண்டுகளாக நடந்து வரும் சுகாதார நெருக்கடியும், அதிகம் விவாதிக்கப்படாத சுற்றுச்சூழல் நெருக்கடியும் உள்ளது. சமூக கட்டமைப்புகளிலும் ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சமூகத்தின் கீழ்மட்டத்தில் சில உடைவுகள் நடக்கின்றன. இந்த விவகாரங்களைப் போலவே, கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான பகுதி, நம் நாட்டின் வெளிநாட்டு உறவுகள் துறையில் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும். ஸ்லாவோய் ஷிசெக் தனது 'எபிடெமிக்' புத்தகத்தில் இந்த நிலைமையை 'முழுமையான புயல்' என்று விவரித்துள்ளார். பல சிறிய புயல்களால் உருவான ஒரு பெரிய புயல் என்று பொருள். இலங்கையில் நாமும் இப்போது அத்தகைய முழுமையான புயலை எதிர்கொண்டுள்ளோம்.