ADS 468x60

28 June 2018

டெங்கு ஆய்வு முடிவுகளின் தேசியக் கலந்துரையாடல்

ஆய்வு பற்றிய ஒரு தேசியக்கலந்துரையாடலின் இடையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பேராசான் மதிப்புக்குரிய டயஸ் அவர்களை கண்டு அளவளாவியதில் மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு! இன்னும் எமது நாடு ஆய்வுகளை ஊக்குவிப்பதில் பின்தங்கியே நிற்கின்றது, வருமுன் காப்பதற்கு பதிலாக வந்தபின் ஓடித்திரியும் ஒரு அரச நிர்வாகத்தை என்ன சொல்வது என கவலைப்பட்டுக்கொண்டதுடன், உங்களைப்போன்ற ஆய்வார்வம் கொண்டவர்கள் இந்தக் கருசனையினை எடுத்து இப்போந்த ஆய்வுகளை செய்ததனை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

27 June 2018

சமுகத்தில் முன்னிலை வகுப்பவர்கள் பின்னிற்க்கக்கூடாது


Image may contain: 2 people, people playing musical instruments and people sittingமாணவர்களிடையே கடமை, அறம், விழிப்புணர்வு மற்றும் ஆழுமைப்பண்பு ஆகியவற்றை வளப்படுத்த சமுகத்தில் முன்னிலை வகுப்பவர்கள் பின்னிற்க்கக்கூடாது. அவர்களுக்காக எமது நேரத்தினையும் உள்ள திறனையும் பகிர்ந்தளித்தல் எமக்கெல்லோருக்குமுள்ள தார்மீக பொறுப்பாகும். அதை நான் என்னால் முடிந்தவரை நெடுங்காலமாக செய்து கொண்டு இருக்கின்றேன். ஈதல் அறம், என்பதற்கிணங்க மற்றவர்களுக்காக எமது நேரத்தை, பணத்தினை, மற்றும் ஏதோ ஒரு வகையில் உதவ முன்வருவது எவ்வளவு அறம்பாற்பட்டது என்பதனையும் இன்னொருவருக்கு வழங்கிக்கொண்டிருப்பதே இன்பம் என்பதை வள்ளுவர் ஈதல் இன்பம் எனவும் கூறியிருப்பது, நாம் நமக்காக மாத்திரம் வாழாமல் பிறருக்காகவும் வாழ தலைப்படும்போதே நாம் அறவாழ்வுக்கும் நுழைகின்றோம்.

17 June 2018

'சூழலை பேணி இடர்தணிப்போம்' பிரதேச செயலமர்வு- வெல்லாவெளி.

செந்நெல்லும்  பாலும் தேனும், தீந்தமிழ் சுவையும் கலையும், வாவிமகள் போல் வற்றாது ஓடும் மீன்பாடும் தேநாடு, வளநாடு என்று போற்றுகின்றோம் எம் தென்தமிழீழ வளநாட்டை, மகிழ்ச்சிதான். இருந்தும் வயலை நம்பியே வாழ்க்கை என்ற மக்களின் வயிற்றிலடிக்கிறது இயற்கை, வெள்ளமாக, வறட்சியாக இன்னும் பலப்பல வடிவங்களில். காரணம், இயற்கைக்கு மனிதர்கள் செய்யும் இடர்தான் வேறில்லை. இந்த இடர் வரக்காரணங்கள் என்ன? இதனால் என்ன தீய விளைவுகளை எல்லாம் நாம் எதிர்கொள்ளுகின்றோம்? அவற்றை எவ்வாறு வெற்றிகொள்ளலாம்? ஏன்பன பற்றி எல்லாம் வெல்லாவெளி கலாசார மண்டபத்தினில் சங்கமித்த விவசாயிகள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், அனர்த்த முன்னாயத்த குழுக்களின் உறுப்பினர்கள், அபிவிருத்தி மற்றும் கிரா உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்பூட்டும் செயலமர்வினை 13.06.2018 அன்று பிரதேச செயலகததுடன் இணைந்து சக்தி உதவும் கரங்கள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

02 June 2018

நூலக பயன் பாட்டை ஒருவர் அறிந்துகொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப்பருவம் தான்.

'எனக்கு என்றால் சரியான விருப்பம் சேர் இந்த அணில், குரங்கு, சிங்கம் எல்லாம் இருக்கிற கதைப்புத்தகம் வாசிக்க, எங்கள டூறு கூட்டிப்போனாப்புல அந்தப் புத்தகதங்களை எல்லாம் பாத்த, அதுக்குப் பிறகு அப்பாட்ட சொன்ன அவருக்கு அதுகள் எங்க இருக்கிது என்றும் தெரியா என்றவர்' என்று ஒரு 3ம் தரத்தில் உள்ள மாணவன் சொன்னார். 'நாங்க இந்த 40ம் கொலனில இருந்து வருசத்துக்கு மட்டும்தான் களுவாஞ்சிக்குடி மாக்கட்டுக்கு உடுப்பெடுக்கவும், வருசத்துக்கு சாமான் வாங்கவும் டவுணுப்பக்கமா போவம், அங்கதான் புத்தகக்கடை இருக்கிதெண்டாங்க, ஆனா அதுக்கெல்லாம் காசு கூடவாம் என்றதால அப்பா அம்மாட்ட கேட்கிறதில்லை. பள்ளி புத்தகங்கள் மட்டும்தான் எங்களுக்கு தெரியும்' என்று இன்னொரு மாணவரும் கூறினார்கள் அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் முன்னே!