ADS 468x60

23 February 2011

தேடுகிறேன்...












இறுக்கங்களுக்குள்
இடைவெளியை தேடுகிறேன்!
இளமை தொலைத்த
இன்பம் தேடுகிறேன்!

பலவீனத்தில்
பலம் தேடுகிறேன்!
பரோபகாரத்தில்
பாசத்தை தேடுகிறேன்!

உழைப்பிற்குள்
ஊக்கத்தை தேடுகிறேன்!
உலகத்தில்
நிம்மதி தேடுகிறேன்!

அராஜகத்தில்
அமைதி தேடுகிறேன்!
அரசியலில்
உரிமை தேடுகிறேன்!

கண்களில்
கருணை தேடுகிறேன்!
புன்னகைத்து
புண்ணியம் தேடுகிறேன்!

மதுவில்
மயக்கம் தேடுகிறேன்!
மாதில்
மனதை தேடுகிறேன்!

நாட்டிலே
வேலை தேடுகிறேன்!
நல்நெறியில்
பணம் தேடுகிறேன்!

காதலிற்குள்
நிஜத்தை தேடுகிறேன்!
கல்லிற்குள்
கடவுளைத் தேடுகிறேன்!

தேடுகிறேன்! தேடுகிறேன்!
உனக்குள்
உன்மை தேடுகிறேன்!
எனக்குள்
என்னைத் தேடுகிறேன்!

22 February 2011

அனர்த்தத்தின் பின்னரான மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் தேவை..

பிவிருத்திப்பாதைக்குள் விரிபுபட்ட பரிமானங்கள்,  தோற்றங்கள் பல நாடுகளில் அனர்த்தங்களுக்கு பின்னால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளன. அதன், பேரின பொருளாதார மாற்றங்கள், பொது நிதிச் சிதைவு, தகவல் பரிவர்தனம், சுற்றுச் சூழல் பாதிப்புகள் இன்னும் அதன் கலாசாரம், சமுகக் கட்டமைப்பு என அனர்த்தங்களால் மாற்றப்பட்ட வரலாற்றுப் பாடங்கள், அவர்களின் மீள் உருவாக்கத் தேடலில் முக்கிய பங்கு வகிக்க தூண்டியது எனல் பொருந்தும்.
க்கிய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பனவற்றின் அறிக்கைப்படி உலகலாவிய இயற்கை அனர்த்தத்தின் மொத்த இழப்பீட்டு மதிப்பு 185 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும், இது வருடா வருடம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றது. 

தில் அதிக பங்கு சிலி மற்றும் சீன பிரதேசத்தின் அனர்த்தங்களால் விளைந்தவைவே. குறிப்பாக சிலியில் 8.8 றிச்டரில் ஏற்ப்பட்ட பூமி அதிர்ச்சி 30 பில்லியன் அமெரிக்க டொலர்களெனவும், சீனாவில் ஏற்ப்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்ப்பட்டதுமே அதிகமான இழப்பு எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் அண்மையில் வடித்துச் சென்ற வெள்ளத்தின் செலவு அதற்க்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என நமது நாட்டின் அவசர வேண்டுகோளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதன் விபரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

ந்த செலவுகளின் பன்மைத்தன்மை அதன் காலநிலை மாற்றத்தின் பிரதிபலனாக விளைந்து கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனர்த்த முன்னெச்செரிக்கை நிலையங்கள், அனர்த்தம் பற்றிய தகவல் களஞ்சியம், பாதுகாப்பான பாதைகள், பாதுகாப்பான தங்குமிடங்கள் இன்னோரன்ன அரசாங்கத்தின் முனைப்புகள் இன்னும் பல நாடுகளில் கரிசனை கெட்டு கிடக்கிறது என்றும் அதன் பலாபலன்கள் அவர்களின் பெறுமதி மிக்க உயிர் உடமை இழப்புகளை பன்மைப்படுத்தி விடுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தப்பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை சரியான முறையில், யாருடன், எவ்வாறு, எதை மற்றும் யாருக்காக என்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரதேசங்களின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளது பங்கு அமையப்படவேண்டும்.

ங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட்ட பின்னர், ஆரம்ப மீள் உருவாக்கம் செய்யப்பட தொடங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் குறிப்புப்படி, ஆரம்ப மீள் உருவாக்கம் என்பது 'இயற்கையாகவோ, மனிதர்களாலோ ஏதாவது பாரிய அனர்த்தம் ஏற்ப்பட்ட பின்னர் உடனடியாக அந்த பிராந்திய அரச ஸ்த்தாபனங்கள் மற்றும் அந்தச்சமுகம் என்பனவற்றினை வலுவூட்டுதல்' எனக் கூறப்படுகிறது.

ந்த ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகள் உடநடியாக கொண்டிருக்க வேண்டியவை குறிப்பாக தற்க்காலிக வீடமைத்தல், பெண்களை வலுவூட்டல், சுற்றுச் சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு வழங்குதல், வாழ்வாதார உதவிகள், சட்டமும் ஓழுங்கும் வழங்கல், உட்கட்டுமான வசதியளித்தல், முரண்பாடுகளுக்கு தீர்வகாணல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை இங்கு வழங்கப்பட வேண்டும்.

வை சரியான முகாமைத்துவம் இல்லாமல் நடைபெற மாட்டாது. இவை அரச ஸ்த்தாபனங்களினால் தான் அதிக நாடுகளில் இந்த செயற்ப்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றது. இருப்பினும் சில இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அவற்றை செய்வதற்க்கான இயலுமை இழந்து காணப்படுவதனால், ஐக்கிய நாடுகளின் அமையத்தின் வழித்துணையுடன் இந்த தந்திரோபாயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

வை பல்வேறு துறையினரையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கிடையே ஒரு தொடர்பாடல், ஒருங்கிணைப்பு என்பனவற்றை ஏற்ப்படுத்தி பாதிக்கப்பட்ட சரியான மக்களை தெரிவு செய்வதில் இருந்து அவர்களுக்கான அபிவிருத்திப் பாதையினை காட்டிவிடுவது வரைக்கும் இச் செயற்ப்பாடுகள் நீண்டு செல்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு செயற்ப்பாட்டின் மூலம் இரட்டைப் பதிவுகள் நீக்கப் படுகின்றன, நிறுவனங்களின் இயலுமை, வளங்கள் அடையாளங் காணப்படுகின்றன, அத்துடன் சரியான திட்டமிடல் செய்யப்படுகின்றது. ஆகவே அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளில் துறை ரீதியான, நிறுவன ரீதியான ஒருங்கிணைப்புச் செயற்ப்பாடுகள் இன்றியமையாதவையே.

மிக அவசரமாக அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளினூடாக சொந்த காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கை, சுயாட்சி, மீழ் உருவாக்கம் அத்துடன் நலிவுறும் தன்மை, அனர்த்த ஆபத்து என்பனவற்றினை குறைத்தல் இவற்றை உடனடியாக அமுல்படுத்துவதற்க்காக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செயற்ப்பாட்டாளர்களினை அழைத்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்க்காக கலந்துரையாடல்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பினை முதலில் உறுதி செய்வது இவ் ஒருங்கிணைப்புச் செயற்ப்பாட்டில் முதல் படியாக இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கை அனர்த்த ஆபத்தில் இருப்பதனால் அவர்களது ஆபத்தைக் குறைத்து அவர்களை அங்கிருந்து மீண்டெடுத்தல் அவசியமாகின்றது.

னால் அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளிற்கு அப்பால் நீண்ட கால அபிவிருத்தி, மற்றும் பேண்தகு விருத்தி நோக்கிய திட்டமிடலை இந்த அவசரகால செயற்ப்பாடுகள், நிவாரண ஒழுங்கமைப்புக்கு வெளியில் நின்று தொடங்குவதற்க்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளுதல் வேண்டும். இவற்றினூடாக நாட்டின் அரசாங்கத்தினுடைய இயலுமையை கட்டியெழுப்புதல், அதன் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், வாழ்வாதாரங்களை மீழ் உருவாக்குதல், சேவைகளை வளங்குதல், அதனூடான அதன் எதிர்கால அபிவிருத்தியை செம்மையாக்குவதனையும் இந்த அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளினூடாக செயற்ப்படுத்தலாம்.

குறிப்பாக அனர்த்தங்களின் பின்னான ஆரம்ப மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் மூன்று முக்கிய நோக்கங்களைப் பார்க்கலாம்.
1. அவசரகாலங்களின் போதான உதவிகளை வழங்குதல்.
2. தொடர்ச்சியான மீழ் உருவாக்கச் செயற்பாடுகளை பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு செய்தல்.
3. நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான அத்திவாரத்தினை இட்டுக் கொள்ளல்.
லங்கையின் இந்த இலக்குகளை அடைவதற்க்கான தேவை 2004 சுனாமி அனர்த்தங்களின் பின்னரே உணரப்பட்டிருந்தது. இதன் பின் ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தினரின் உதவியுடன் பல விடயங்கள் அரச நிறுவன மற்றும் கொள்கை ரீதியான செயற்ப்பாடுகளில் வலுவூட்டப்பட்டது நினைவுகூர வேண்டியுள்ளது.

னர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அவசரகால அவதான நிலையம் என்பன ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தினரின் அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்டு வலுவூட்டப்பட்ட விடயங்களாகும். அத்துடன் இலங்கையின் முக்கியமான மயிற் கல்லாக 2005 இல் தயாரித்து வெளியிடப்பட்ட 'பாதுகாப்பான இலங்கையை நோக்கி' என்கின்ற கொள்கை ரீதியான பேருதவியும் இந்த அனர்த்தங்களின் பின்னரான ஆரம்ப கட்ட மீள் உருவாக்கச் செயற்ப்பாடுகளிற்கு அரச இயந்திரத்தினை வலுவூட்டும் செயற்ப்பாடுகளில் அடங்கும் ஒன்றாகும். இதற்கு பிறகுதான் அரசின் பாராளுமன்றத்தில் இந்த அனர்த்த முகாமைத்துவத்துக்கான சட்டமும் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

21 February 2011

நேசிக்கிறேன்..

celtic graphics

றுபடியும்
செட்டை முளைக்கத்
தொடங்கி விட்டதே!
என் பாலை வனத்தில்
மொட்டுகள்
மலருகின்றதே!...
என் இதயம்
களவு போகத்
காத்துக் கிடக்குதே!
உறவுகள் வரவு
வைக்கப் படுகின்றதே!
என் விழிச் சாரல்
கனாக் கூடை சுமக்கின்றதே!

ன்ன விந்தை!!!
இந்த வேடனின்..
பாதையில் புள்ளி மான்!!
இந்த சூரிய குழம்புக்குள்
கிளிமாஞ்சாரோ பனிப் பாறை!
ஓ அதுவா??
உன்னை- நான்
நேசிக்கிறேன்......

.

20 February 2011

வேரறுந்து கிடக்கும் வெல்லாவெளிப் பிரதேசம்....

உலகலாவிய ரீதியில் புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்ப்பட்டு வெள்ள அனர்த்தம், புயல், காட்டுத் தீ என்றும் எல் நிலா மற்றும் லா நிலா என்றெல்லாம் வானிலை புதுசு புதுசாக கலியுகத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கிறது.

இது இலங்கையின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல உலகிலேயே அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலும் அதன் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் அந்நாட்டு சமுகம் எல்லாத்தினையும் ஆட்டங்காண வைத்துக் கொண்டிருக்கிறது. 'ஸ்ரேன்' அறிக்கையின் படி உலகிலேயே தற்போது அதிகமாக நலிவுறும் தன்மைக்குள் அகப்பட்டிருக்கும் இந்நிலை சுமார் 50 தொடக்கம் 100 வருடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு கரையோரம் வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பிரயாணத் துறையினர் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

ஆளானப்பட்ட அவுஸ்த்திரேலியாவுக்கே இத்தனை அச்சுறுத்தல் என்றால் அல்ப்ப இலங்கை என்னவாகும் என்று கடந்த வெள்ளம் பாடம் சொல்லி இருக்கிறது. இலங்கையின் அண்மைய வெள்ளத்தினில் பாதிக்கப்பட்ட பதின்மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே பட்டுத் தவித்திருக்கிறது. அதில் உள்ள பதின்நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் முற்றாகச் சேதமைந்த போதும், தற்போது அனைத்து பணியாளர்களது கண்ணும் கோலம் கெட்டுக்கிடக்கும் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பால் திரும்பி இருக்கிறது. இங்கு பொங்கிய வெள்ளத்தினில் 46,360 பேர் அதாவது 12,760 குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனேகமான கிராமங்கள் ஒருதொடர்பும் இல்லாமல் இருந்தமை இந்த பிரதேசத்தின் வெள்ள அனர்த்தத்துக்கான நலிவுறுந்தன்மையை புட்டுக் காட்டுகின்றது அல்லவா?????? குறிப்பாக ஆனைகட்டியவெளி, மலையுர்கட்டு, சின்னவத்தை, மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம், ராணமடு, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, கண்ணபுரம், நெல்லிக்காடு, காக்காச்சிவட்டை, விளாந்தோட்டம், நவகிரிநர் போன்ற 21 கிராமங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தது.

குறிப்பாக இங்கு வாழ்கின்ற மக்கள் சேனைப்பயிர் செய்கை, வேளான்மைச் செய்கை, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மற்றும் ஆடு மாடு, கோழி வளர்த்தல் அத்துடன் வீட்டுத்தோட்டம் என்பனவற்றினையே கிடைத்த வளங்களைக் கொண்டு சிறப்பான பயன்களைப் பெற்றுக்கொண்டு வந்தனர். கணக்கீட்டின்படி 10,214 குடும்பங்கள் அதாவது 36,197 மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை இழந்துள்ளனர். 22467 ஏக்கர் விவசாயம் அடிக்கடி அடித்து நாசமாக்கிய வெள்ளத்தில் களுவுண்டு போயுள்ளது, கழுவுண்டு போனது அவர்களின் வயல் நிலங்கள் மட்டுமல்ல அவர்களது அன்றாட வாழ்க்கையும் சேர்த்துத்தான். அவர்கள் வானம் பொழியும் மழை மாரியினையும், குளங்களில் கிடைக்கும் நீர் வளத்தினையும் நம்பியே விவசாயத்தினில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவையெல்லாம் வெள்ளத்தின் வீறாப்பில் பள்ளத்தில் இழுத்தெறியப்பட்டுள்ளன. இந்த உடைக்கப்பட்ட குளங்களின் விபரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் தரப்பட்டடுள்ளது.
(தகவல் பிரதேச செயலகம் போ.பற்று)
இம்மக்கள் வயற் செய்கைக்கு அப்பால் மேட்டுநிலப் பயிர் செய்கைபண்ணி வேறு பிரதேச செயலகப்பகுதிகளுக்கு சந்தைப்படுத்தும் ஏற்றுமதி வியாhபரத்திலும் ஈடுபட்டு வந்தனர். அதில் அதிக லாபம் ஈட்டி வந்தனர். பழுகாமம், மண்டுர் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றுக்க தனி மவுசே இருந்தது. இதற்க்கு மேலாக பயறு, குரக்கன், இறுங்கு, சோளம், எள்ளு என்பன போன்ற இன்னோரன்ன தானியப் பயிர்செய்கையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தன்னிறைவு ஏற்ப்படுத்திய பெருமை இவர்களுக்கே சாரும். இவ்வாறு இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 1665 விவசாயிகள் முற்றாக இப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துடன் 178 பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களது 41 ஏக்கர் பழச்செய்கை மண்ணோடு மண்ணாகி விட்டதை பிரதேச செயலக அறிக்கை பறை சாற்றுகின்றது. அதே போன்று 3310 வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.
(உடைந்து கிடக்கும் மண்டுர் பாலம்)
அபிவிருத்தி திட்டமிடலாளர்கள் அனர்த்தம் பற்றிய கரிசனையினை அபிவிருத்தி நடவடிக்கையில் கொள்ளத்  தவறிவிடுகின்றனர் என்பதற்கு வெல்லாவெளிப் பிரதேசம் சிறந்த உதாரணமாகும். இங்கு நான்கு பாலங்கள் (மண்டுர் பாலம், காக்காச்சிவட்டை மருதங்கடவைப் பாலம், ஆணைகட்டியவெளி கோஸ்வே, திக்கோடை கோஸ்வே) முற்றாக வெள்ளத்தில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதுபோன்று 124 சிறிய பெரிய அளவிலான வீதிகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன இவை வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை, மற்றும் நீர்ப்பாசன சபையினரின் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அளவிட முடியாத இளப்பினை இந்த இரண்டு தசாப்த கால யுத்த காயம் ஆறமுன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இந்த வெள்ளம் அடிமேல் அடித்து அந்த மக்களை மண்ணுக்குள் புகுத்தியுள்ளது. அவர்களை கட்டிக்காப்பதில் அல்லும் பகலும் சிரமம் பாராமல் தோழோடு தோழ்கொடுத்து உதவிய பெருமை அப்பிரதேச செயலாளர் உதயசிறி அவர்களையே சாரவேணும். இருப்பினும் இவர்களது சக்கிக்குமேல் இந்த இழப்பை உடன் நிவர்த்தி செய்ய முடியாது. இது நீண்ட காலத்தில் மீழ் கட்டமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்க்கு ஏனைய துறைசார்ந்த திணைக்களங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. மாத்திரமல்லாமல் நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்தி சார்ந்து, சமுகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளியல் நலன் கருதிய முன்னெடுப்புகள் தான் ஆரோக்கியமான பாதுகாப்பினை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் என்பது எனது கருத்தாகும். ஆகவே இம்மக்களின் அவல நிலை தொடரவிடாமல் உதவிபுரிய இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்பது எனது அவாவாகும்.
தகவலுக்கு நன்றி பிரதேச செயலர் போரதீவுப் பற்று...

19 February 2011

பாக்கு நீரிணையில் மீன் சண்டை...


இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழ் நாட்டுப்பகுதியில் கிரிக்கட் செய்திகளை விட பாக்கு நீரிணையை படகுகள் கடக்கும் செய்திகள் தான் கெட்லைன். இவற்றைப் பார்க்கும்போது நாடகம் ஒன்றை பார்ப்பது போன்றுதான் இருக்கிறது. எதுக்காகவோ, யாராலயோ யாரோ நடத்துகின்ற நாடகக் காட்சியில் அப்பாவிப் பொது மீனவர்கள் பந்தாடப்படுவதும், அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து உலை மூட்டும் இந்த மீனவர்களுக்கு கடல்தான் ஆபத்து என்றால் மனிதனாலுமா என்று ஆத்திரமாய் இருக்கிறது. 

இன்று இரு நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் விநோதம் என்ன என்றால் இரு நாட்டவரும் தமிழர்கள். செத்தாலும் பொளச்சாலும் தமிழன்தானே! ம்ம் 21 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட அதே போன்று 136 இந்திய மீனவர்கள் இலங்கை காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மக்களிடையே அரசியல்வாதிகள் தனவந்தர்களின் சூழ்சியால்தான் இவை இடம்பெறுவதாக பரவலாக குசுகுசுக்கப்படுகிறது. ஆகவே இந்த அபாயகரமான அரசியல் வியாபாரிகளை பகுத்தறிந்துகொள்வதும் அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்வதும் இன்று அவசியமானது.

மீன்பிடி வர்த்தகத்தின் உலகச் சந்தை வியாபாரிகள் இலங்கை இந்திய மீனவர்களை தமது பொருளாதாய ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவர்கள். கூலிக்கு வேலை செய்யும் மற்றும் வறிய மீனவர்களின் நாளாந்தத் உழைப்பு மூலதனத்தை சுரண்டும் இவர்கள் கடற்பரப்பை சந்தைக்கு உவந்த பிரதேசமாக மாற்ற முனையும் நடவடிக்கைக்கு இந்திய இலங்கை அரசுகள் துணை போகின்றன. தமிழக மீனவர்களின் கொலைகள் ஊடாகப் பய உணர்வை ஏற்படுத்தி அவர்களை அரச பின்பலம் கொண்ட பெரு முதலாளிகளிடம் சரணடையச் செய்கின்றது. ஏன ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது(http://inioru.com/).

நிற்க நமது ஆசிய நாடுகளை கைப்பொம்மையாக வைத்து நமது வளங்கள் மறைமுகமாகச் சுரண்டப்படுகின்றது, என்பது தெரியாமல் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அதன் வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் உற்ப்பத்தியை நிர்ணயிக்கும் காரணிகளாக நிலம், ஊழியம், மூலதனம் மற்றும் முயற்சியாண்மை நான்கும் முக்கியமானது. இதில் நிலம் இயற்கை வளமாகும் ஏனையவை மனித வளமெனக் கொள்ளப்படுகின்றது. ஆனால் அதிகரித்து வருகின்ற சனத்தொகைப் பெருக்கம், அருகிவரும் இயற்கை வளம் என்பனவற்றுக்கேற்ப்ப ஆசியாவின் மக்கள் இசற்றை கையாளவில்லை. அவற்றை அதிகளவாக நுகரவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். 

குறிப்பாக இயற்கை வளங்களுள் கடல் மீன்பிடி வளம் ஒரு பொதுவான எல்லோரதும் சொத்து ஆனால் இப்போது அது சில அதிகார வர்க்கத்தினரால் வெளிநாட்டு வல்லாதிக்கத்தின் தொழில் நுட்பத்தோடு அடியோடு அழித்தொழிக்கும் திட்டத்தின் பின்னணியில்தான் இந்த மீன்பிடிச் சண்டை நாடகம் நடக்கிறது.

கடலில் அந்தந்த நாட்டு எல்லைக்குள் யாரும் மீன்பிடிக்கலாம், எவளவும் பிடிக்கலாம், எப்படியும் பிடிக்கலாம் என்பதனால்தான் டைனமோ மற்றும் றோளர் போன்ற சாதனங்களின் துணையுடன் அவற்றை அள்ளிச் செல்லுகின்றனர், ஆனால் அப்பாவி ஏழை மீனவர்களின் நிலமையை இந்த பெரிய முதலைகள் நினைத்துப் பார்க்கத்தவறிவிடுகின்றனர்.

நலப் பொருளியலாளர்கள் இந்த அரசியலுக்கு அப்பால் இவ்வாறான சச்சரவுகள் இல்லாமல் பண்ணுவதற்க்கும், இயற்கை வளத்தின் சம நிலையைப் பேணுவதனூடாக ஒரு பேண்தகு அபிவிருத்தியை அந்த நாட்டு மக்களுக்கு அடையப் பெற மூன்று வகையான அணுகு முறையினைச் சொல்லுகின்றனர்.

1. மீன் பிடிப்பதற்க்கான இடங்களை வரையறை செய்தல்.
குறிப்பாக அரசாங்கங்கம் மீனவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் மீன்பிடிக்கும் எல்லைகளை நிர்ணயித்துக் கொடுப்பது.
குறித்த காலப்பகுதியில் மட்டும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அனுமதியளித்தல்.
ஏவ்வளவு மீன்பிடிப்பதற்க்கான வலை ஒருவர் வைத்திருக்க வேண்டும் என்பதை வரையறை செய்யதல்.
போன்றவற்றின் ஊடாக இந்த இயற்கை வளத்தை பராமரிப்பதோடு இந்த எல்லைச் சண்டையையும் தவிர்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

2. வரிகளை விதித்தல்
இந்த மீன்பிடித் தொழிலினால் வருகின்ற வெளிவாரி விளைவுகளையும் எல்லை மாறாட்டங்களையும் களைவதற்கு இந்த மீனவர் வரி விதிப்பு அவசியமானது. இது அவர்கள் கடல் வளத்தின் எதிர்காலத்துக்கு செய்யும் சிதைவுகளுக்கான சன்மானமாகப் பயன்படுத்தப்படவேண்டும். இது அவர்களின் நியாயமான மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் காரணியாகும்.

3. சொத்து மீதான உரிமையை உருவாக்குதல்.
இது சொல்லப்பட்டாலும் நடைமுறையில் கொண்டுவருவது கடினமானதே. குறிப்பாக ஆறுகள் வாவிகளில் மீன்பிடிப்பவர்களுக்கு அந்த அந்த குடும்பங்கள் அவர்களுக்கு வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளயே மீன்பிடிக்க வேணும் என்கின்ற ஒரு உரிமையை உருவாக்கலாம். அதுபோல் கடல்களிலும் நாட்டுக்கு நாடு வரை செய்யப்பட்டிருக்கும் எல்லைகள் சம்மந்தமான வரையறை மீனவர்களிடையேயும் தெழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இம்மூன்று அணுகு முறையூடாகவும், எதிர்காலத்தில் வளங்கள் நிலைத்து நின்று அது அடுத்த சந்ததிக்கும், இன்றய மீனவ சந்ததிக்கும் பயனுறுதி வாய்ந்த ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றே கூறலாம்.

18 February 2011

உலகில் உயர உயரப் போகும் வேலையின்மை விரக்தி


கூறுவார்கள் காய்ச்சலும் தலையிடியும் வந்தால்தான் தெரியும் என்று ஆமாம் அனுபவித்த இளம் பட்டதாரிகளிடம் காணப்படும் மன விரக்தி எங்கே போய் முடியும் என்று என்னால் கூறமுடியாமல் இருக்கிறது. இன்னும் ஒன்னு கூறுவார்கள் ' ஒரு மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஒன்று முயற்சி மற்றது அதிஸ்ட்டம்' இரண்டும் தேவை என்று. ஆனால் இரண்டுமே சரிவரமல் எத்தனையோ உள்ளங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன. சரி இப்போ விதிக்கு சலுட் அடிக்கும் நேரம் வந்திருக்கு அவர்களுக்கு...

நம்ம மட்டுமில்லை உலகிலயே 2009இல் 212 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் இருப்பது 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 34 மில்லியன் தொகையினால் அதிகரித்துள்ளது. இது அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் நேர்ந்துள்ளது என சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகம் (ILO) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தவிரவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகம் என்பன 2010 இற்கு பின் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறியிருந்தமை பலித்துவிட்டது. 2010 இல் மட்டும் 3 மில்லியன் வேலையற்ற மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றம் பிராந்தியங்கள், நாடுகளை பொறுத்து வேறுபட்டு நிற்கிறது என்றும் அவை குறிப்பிடுகின்றன. இந்த வேலையற்ற சமுகத்தின் சமுகப்பாதுகாப்பு, வேலையற்றோருக்கான நன்மைகள், என்பன கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்கப் பெறாமலேயே இருக்கின்றமை துரதிஸ்ட்டமானதே.

இங்கே ஒப்பீட்டளவிலான வேலையற்றோரின் சில தரவுகளை தருகிறேன். ஆசியாவில் குறிப்பிடத்தக்க நாடுகளின் தரவுகள் இங்கே...


ஐரோப்பிய நாடுகளில் வேலையற்றோரின் விகிதங்களை இங்கே காணலாம்.
சர்வதோச ஊழியர்களுக்கான நிறுவகத்தின் பணிப்பாளர் சோமாவியா குறிப்பிடுகையில் அரசியல்வாதிகள் வேலைவாய்ப்பை வளங்குவதில் தயக்கம் காட்டுவதாகம், இதற்கு பதிலாக வங்கித்துறைகள், தனியார் கம்பனிகள் அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டமை அரசின் தொழில் உருவாக்கத்தில் அண்மைக்காலமாக நிலவி வருகின்ற தொய்வினை படம் பிடித்துக் காட்டுகின்றதல்லவா?

இவரின் அறிக்கைப்படி இந்வேலையற்ற இளைஞ்ஞர் யுவதிகளிடையே இலகுவில் பாதிக்கக்கூடிய நலிவுற்றவர்களின் தொகை 2008 காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2009 இல் இது 1.5 பில்லியனாக அதிகரிததுள்ளது. இது மொத்த உலகலாவிய வேலையற்றோரில் அரைப்பங்காகும் என அதிர்சி தகவலை அந்நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். 

மேலும் கூறுகையில் உலகில் வேலை செய்தும் 633 மில்லியன்; குடும்பத்தினர் நாளாந்தம் 1.25 டொலர் வருமானத்தினைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றும் இவர்கள் மேலதிகமாக உள்ள 215 மில்லியன் ஊழியர்கள் 2009  இல் வறுமைக்கோட்டில் கால் பதித்து வறியவர்களாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை, எமது எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எப்படியாவது வேலை கிடைத்து விட்டதென்றால், அவர்கள் தங்களது சம்பளத்தினைப் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில் பராபட்சமாக நடத்தப்படுகின்றனர். வேலை செய்யும் இடத்தில் 100 மில்லியனுக்கும் மோலான மக்கள் இன்று பராபட்சம் காரணமாக ஒதுக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.. இது வெறுமனே ஒரு வன்முறை மாத்திரமல்ல அதற்கும் மேல் அவர்களது உரிமை மீறலாகும் என்றும் இவ்வமையத்தினால் கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 12.3 மில்லியன் மக்கள் கட்டாயத்தின் பேரில் வேலை வாங்கப்படுகின்றனர். இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கான வேதனங்கள் வழங்கப்படுவதும் இல்லை வேறு சலுகைகளும் இல்லை. அப்பாடா தப்பிச்சோம் நாம என்பதற்க்கில்லை ஏனெனில் நம்ம ஆசியாவில் இது அதிகமாக காணப்படுகிறது.

ஆகவே வேலை தேடி தேடி கிடைத்து விட்டாலும் நிறையவே தடை தாண்ட வேண்டி இருக்கிறது. ஏதோ வேலை என்பது குதிரைக் கொம்புபோல் அரிதாகும் அளவுக்கு நாடுகளின் பொருளாதார நெருக்கடி, அரசியல் இறுக்கம், பாரபட்சம், இயற்கை அனர்த்தம், வளப்பற்றாக்குறை, சனத்தொகை அதிகரிப்பு மற்றும் இன்னோரன்ன காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள், தனியார் கம்பனிகள் மற்றும் வங்கித்துறையினர் கைதேர்ந்த அறிவாளிகளின் துணையுடன் தொழில் உருவாக்கங்களை செம்மையாக உன்மையாக செய்ய மனசி வைத்தால் முடியும் இதைத்தான் சர்வதேச ஊழியர்களுக்கான நிறுவகமும் சுட்டிக்காட்டியுள்ளது.

கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு பூத்துப் போச்சுடா..


வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

ஓடி ஓடி படிச்சிப் படிச்சி
மூளையெல்லாம் தேஞ்சிபோச்சி
படிச்சிருந்தா மத்தவன் பாத்து
பகிடி பண்ணுறான் -நம்ம
வேல தேட அனுபவம் கேட்டு
மகிடி ஊதிறான்- தம்பி
பணத்தை கேட்கிறான்?

அரச தொழிலை நம்பி நம்பி
அரை வயது போனதிப்போ
புருசலட்சணம் இதுவா என்றும்
கேட்கிறானுங்கோ –நீ
றோட்டில் இருந்து வேலைகேட்பது
தொழிலுக்காகாது –தம்பி
தொழிலுக்காகாது...

வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

13 February 2011

காலம் மாறலாம் காதல் மாறுமா?..













வேதம்
கீதை
சித்தாந்தம்
காதல் சொன்னது....

..காதல்
இரண்டு உள்ளம்
இணையும்
வித்தை சொன்னது..
கண்களை
தானமிடும்
கருணை சொன்னது...
எதிரியை
பலம் உடைக்கும்
வீரம் சொன்னது..

உன்னில் என்னை
என்னில் உன்னை
தொலைக்க சொன்னது
உயிர் ஒன்றை அன்றி
உடமைகளை
துச்சமெனச் சொன்னது...

மௌன மொழி -உன்
நாமம் சொன்னது
மலர் விழியோ- உன்
வருகை சொன்னது

ஆயிரம் சொல்லும்
காதல்...
அனுபவித்தால் -தூசி
சாதல்....


அனைத்து காதலருக்கும் எனது உளம் பூத்த காதலர் தின வாழ்துகள்..

இது முறையா?

இருட்டறையை நாடி பலபேர் சென்றனர் இன்று..என்ன விளங்கவில்லையா ??? ஆமாம் 'சட்டம் ஒரு இருட்டறை' என்று அண்ணா சொன்னவர்தானே! அந்தச் சட்டத்தினை பயிலுவதற்க்காக மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த நுழைவுக்கான பரீட்சை இன்று 13.02.2011 வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது நான் உட்பட நேற்றுவரை அநேகம் பேருக்கு தெரிந்திருக்க இல்லை. அதனால் யாரும் பரீட்சைக்காக படிக்க முடியாமல் போய்விட்டது.

இருப்பினும் பரிட்சைக்கு வந்தோம், இங்கு அவர்களால் தரப்பட்ட அனுமதி அட்டையில், பரிட்சைக்கு முன் அவர்களுடைய கையொப்ப உறுதிப்படுத்தல் செய்ய வேண.டி இருந்தது. கிட்டத்தட்ட 100க்கு மேற்ப்பட்ட பரீட்சாத்திகள் அந்த உறுதிப்படுத்தும் கையொப்பத்தினை பெற முண்டியடித்துக் கொண்டு நின்றனர். பரிட்சையும் நெருங்கிக் கொண்டு இருந்தது. அது காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
                                                             
ஒரே ஒரு அதிகாரியால் இத்தனை பேரையும் உறுதிப்படுத்த முடியுமா?? பரீட்சாத்திகளுக்கும் அந்த உயர் உத்தியோகஸ்த்தர்களுக்கும் காரசாரமான விவாதம் போய் கொண்டிருந்தது. அவர்களை பரீட்சை மண்டபத்திணுள் வந்து உறுதிப்படுத்த கோரியும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. நேரம் காலை 9.45 ஐ தாண்டியும் மாணவர்கள் சிலர் உறுதிப்படுத்தாமல் பரீட்சை மண்டபங்களான மகஜனக்கல்லூரி மற்றும் மட்ஃஇந்துக்கல்லூரி செல்ல ஆரம்பித்த பின்னர்தான் அவர்கள் பரிட்சை மண்டபத்தினுள் வந்து உறுதிப்படுத்த ஒத்துக் கொண்டனர்....

பல மேலதிகாரிகளும் கியூவில் காத்துக்கிடந்து இத்திறந்த பல்கலைக்கழக நிருவாகத்தின் அசமந்த போக்கினை வரிக்கு வரி திட்டித்தீர்த்தமையை காணக்கூடியதாக இருந்தது. இது யாருடைய பொறுப்பு என்பது அனைவரது கேள்வியாகவும் அங்கலாய்ப்பாகவும் இருந்தது.....

12 February 2011

சமூக மயப்படுத்தபடவேண்டி அனர்த்த முகாமைத்துவம்..

வங்களா விரிகுடாவிற்கு தும்மல் ஏற்படும் போது இலங்கைக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது என்று எமது சமூகத்தில் பரவலாக பேசப்பட்டுவரும் வாய்மொழியாக கேட்டிருக்கின்றோம்.இது ஒரு பேச்சு வழக்காக பேசப்பட்டுவருகின்ற போதும் இந்த வாய்மொழியில் ஒரு அர்த்தம் புதைந்து இருக்கின்றது. இந்த மகா சமுத்திரத்தில் சிறிய தீவாக விளங்கும் இலங்கைக்கு  வங்களா விரிகுடாவில் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இலங்கையின் சில பாகங்களுக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவது அவதானிக்ககூடியதாக உள்ளது.

அனர்த்தங்கள் உலகில் தற்போழுது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. மழையை நாம் எதிர்பார்த்திருந்தாலும் தற்போழுது எமக்கு தேவைப்படும் காலங்களில் மழைகிடைப்பதில்லை .மழை பெய்யும் போது அது எல்லை கடந்தும் சென்று விடுகின்றது. இது தொடர்பாக சாதாரண மக்கள் சில எண்;ண கருக்களை வைத்திருந்தாலும் காலநிலைவேறுபாடுகள் அவற்றை மாற்றிவிடுகின்றது. தற்கால உலகில் அனர்த்தங்கள் பற்றி மக்களுக்கு முன்னெச்சரிக்கை முறைமையினை அறியப்படுத்துவது மிக அவசியமானதாகும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டே காணப்படுகின்றது.

திட்டமிடாத அபிவிருத்தி நடவடிக்ககைகள் இயற்கையாக ஏற்படும் இடர்களை நீண்ட அனர்த்தங்களாகவும் மாற்றிவிடுகின்றன அதாவது அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்ககைகள் எடுக்கப்படும் பொழுது அநனர்த்தங்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு அனர்த்தங்களை குறைப்பதற்குரிய சில சில நடவடிக்ககைகளை மேற்காள்ளவேண்டும்.. இவ்வாறு மேற்கொள்ளும் போது அப் பிரதேசத்தின் பௌதீக தோற்றம் சுற்றாடல் வாழ்கின்ற மக்களின் சமூக பொருளாதார நிலைமை என்பன கவனத்தில் கொள்வது பிரதானமாகும்.இத்தகைய தரவுகளில் இருந்தே  அனர்த்தங்களை குறைப்பதற்கான  சாதகமான நடவடிக்ககைகள் பற்றி தீர்மானிக்க முடியும் .அனத்த முகாமைத்துவ நடவடிக்ககைகளில் முக்கிய கருப்பொருளாக  இருப்பவர்கள் அந்த பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் ஆவர்..

மேலதீகாரிகளினால் அனர்த்தமுகாமைத்துவம் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் சந்தர்பங்களில் அடிமட்ட மக்கள் பாதிப்படையாமல் இவ் அடிமட்ட மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு தீர்மானமேடுத்தல் இவ் அனர்த்தமுகாமைத்துவ நடவடிக்கைகளில் முக்கியமானதொன்றாகும்.

அனர்த்த முகாமைத்துவத்தின் போது உயிர் உடமைகள் மட்டுமல்ல மக்களின் வாழ்வாதார மூலங்களும் அவர்களின் பாதுகாப்பு விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் மக்கள் பல்வேறு வகையில் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்யும்போது அவர்களின் உளரீதியான பாதிப்புக்களையும் நீக்குவது ஒரு சவாலாக அமைந்துவிடுகின்றது வாழ்வாதாரங்கள் தொடர்பாக ஆராயும் போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய இன்னுமொரு விடயமும் உண்டு அதாவது குறிப்பிட்ட அனர்த்தங்களுக்கு ஏற்ப  அப்பிரதேசத்துக்கு பொருத்தமான வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.இயற்கை அனர்த்தங்களினால் தமது வாழ்வாதார மார்க்கங்கள் சேதமடைவது பற்றி அப்பிதேச மக்கள் அறிந்திராமையும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.அவ்வவ் பிரதேசத்திற்கு பொருத்தமான வாழ்வாதார மார்க்கங்களுக்கு அம்மக்களின் கவனத்தை செலுத்த செய்வது இந்த பிரச்சினைக்கு தீர்வாகின்றது.

இயற்கையான இடர்கள் அனர்தங்களாக மாறுவது என்பது அவ்வவ் பிரதேச மக்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் ஏற்படுவதாகும்.அனர்த்தங்களினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள்  அனர்த்தங்கள் தொடர்பாக எச்சரிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களின் பொருளாதார பலத்திற்கு ஏற்ப தீர்மானங்களை எடுப்பதற்குரிய சந்தர்பங்களை வழங்கு கின்றன.

தொகுப்பு
செ.ரமேஸ்வரன்
அனர்த்தமுகாமைத்துவ பயிற்றுனர்..

11 February 2011

கண்களும் கவிபாடுமே...

அதைரியம்...படபடப்பு....
இடையிடை மின் தாக்கம்...
கூச்சம்..... குழுகுழுப்பு....
இடையில்
நெஞ்சை அள்ளும்
பஞ்சாவியும்
நீழ் கூந்தல் வாசனையும்
ஆயிரம் சிருங்காரத்துடன்- நான்
அருகிருந்தும்
பார்க்க முடியாமல்...

பேருந்துப் பயணத்தில்
நாமிருவரும்....
கிலோ மீறறர்களைத் தாண்டியும்
கேள்வி கேட்க்க முடியாமல்..
உந்தி உதைத்த மனதின்
வாக்கில் மெதுவாகத் திரும்பி..
'நீங்க நாளைக்கும் வருவீங்களா' என்றேன்...

அவளின் கண்கள் மட்டும்..
மெதுவாக மூடித் திறந்து
ஆமாம் என்றது......
வாடிக்கையாக ...
அன்றுதான் விளங்கியது
கண்களும் கவிபாடுமோ! என்று....
.

10 February 2011

காதல் ஒரு கண்ணாடிக் குவளை..

இந்த நாட்களில் எந்நப் பூக்கடையைப் பார்த்தாலும் சன நெருசலாக இருக்கும், அதற்கு தனி மவுச இருக்கும். பூக்கடைக்காரன்கள் மூன்று மாதத்தில் உழைக்கிற உழைப்பை மூன்றே மாதத்தில் உழைத்து விடுகிறார்கள், பார்க்கலாம் அடுத்து உலகத்திலே இளம் பெண்கள் அனேகமாக விரும்பும் பண்டம் சொக்கலேற் அது அதி உன்னதமான நினைவுப் பொருளாக இருக்கிறது. 

இன்னும் ஒன்னு பாத்தீங்கண்ணா ரெஸ்டோரண்டுகளில் ஒரே நெருசல் அதற்கு அநியாயமாக பணத்தைச் செலவளித்து உன்னை நானும், என்னை நீயும் என கண்கள் கவ்விக் கொண்டு இருக்கும், ஆனால் பக்கத்தில் இதே போன்று 20 காதல் ஜோடிகள் இருந்து இதே வேலையைச் செய்தாலும் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்களாம். ஏன் தெரியுமா இது காதலர் வாரம், காதலர் தினம் என்றால் இப்படித்தான உலகம் எங்கும் நடக்கிறது. ஆதனால் தான் சொன்னார்கள் 'உலகில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரே மயக்கம் காதல் மயக்கம் மட்டும்தான்' என்று...

அது சரி காதலுக்கு அழகு தேவையா? ... நமக்கெல்லாம் அது கிடையாதே! என்பது எல்லாம் முட்டாள் தனம். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவற்றைப் பார்தீர்களானால் பொருத்தமே இல்லாமல் போகுங்கள்.. கோப்பியும் பாலும் போல வேறு வேந கலரில...அடேய் இவனைப் போய் இவளா?.... என்று வாயைப் பிழந்திருக்கிறேன். சொல்லுவார்கள் 'தூக்கம் வந்து விட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை' என்று உண்மை தான் போலும். நம்மவரிடையே கல்யாணம் பேசி முடிக்கக் காண்கிறோம், ஆனால் அவர்கள் கல்யாணம் பண்ணமுன் காதலிப்பதில்லையே ஆனால் ஒரு முதுமொழி இருக்கிறது 'காதல் இல்லாமல் ஒரு திருமணம், திருமணம் இல்லாத ஒரு காதல் இரண்டிலும் கிடைப்பது தோல்லிதான்' என்கிறார்கள். ஆனால் இப்படியும் சொல்லுகிறார்கள் ' காதல் சோம்பலாய் இருப்பவர்களின் வேலை, வேலையாய் இருப்பவர்களின் சோம்பேறித்தனம்' உன்மைதான்.

சிலர் காதலை சொல்ல மாட்டார்கள் ஆனால் அதை சொல்ல வேண்டியதில்லையாம் ஏனெனில் ' காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது அரிது'.. இருப்பினும் காதலில் வெற்றி பெறுபவர்கள் அரிதாகவே காணப்படுகிறது ஏனென்றால் 'காதல் ஒரு கண்ணாடி குவளை, அதை மிக இறுக்கமாய் பிடித்தால் உடைந்து விடும். மெதுவாகப் பிடித்தாலோ கை நழுவிப் போகும்'. ஆகவே உங்க பிடியில் தான் அவள் மடி இருக்கிறது. இப்படி ஏகப்பட்ட காதல் வசனங்கள் புத்தியாகவும் காதலருக்கு சக்தியாகவும் இருக்கும் என நினைத்து இதனை திரட்டியிருந்தேன்.

காதல் வசப்பட்டாலும் சில காதலர்கள் தொடர்ந்து சந்தோசமாக இருப்பதில்லை ஏனென்றால் சில பெண்கள் காதனை திருடன், வஞ்சகன், மோசக்காரன் இன்னும் என்னவோ எல்லாம் சொல்லி சிறைகூடம் மட்டும் கொண்டு விடுகின்றனர் காதலர் தினப் பரிசாக. சிலர் ஒருவனுக்கு வாலையும் இன்னொருவனுக்கு தலையையும் காட்டி காதலர் தினத்திலே வேறு ஒருவனுடன் உறவாடி மகிழுகின்றனர். அதனால் தான் சொன்னார்கள் 'ஆவிகளைப் போலதான் உண்மையான காதலும் எல்லாரும் அதைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் கண்டவர்கள் இல்லை' என்று. இருப்பினும் காதலில் ஏமாற்றப் பட்டவர்கள் அதனை ஒரு பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்கை சிறப்பாகும். காதல் அனுபவம் வெற்றியோ தோல்வியோ ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டும் அப்போது ஒரு மனிதன் நிறை வடைகிறான் என்று சொல்லுவதும் உண்டு. ஆகவே காதல் சுழுக்கு போன்றதல்லவா அது ஒரு முறை வந்தால் மறு முறை இலகுவாக வந்தவிடும்.....
'காதல் இன்பத்தைச் சொல்லும்
இன்பம் காதலைச் சொல்லும்'

ஆழ ஊடுருவும் அல்ககோல்....

ஒழுக்கமும் உணர்வும் அழியும் பொருட்டு; பரத்தையர்(வேசியர்) உறவுடன் ஒத்த தீங்கினை உடையது 'கள் உண்ணல்' எனும் மது அருந்தும் பழக்கம். இப்பழக்கம், சங்க காலத் தமிழரிடம் மிகவாகப் பரவியிருந்தது. சங்ககாலத்தை அடுத்து தமிழ் அரசரும், மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒருபெரும் காரணம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுகின்றனர். அவர், உடல் நலமும் கெடுகிறது. உள்ள நலமும் கெடுகிறது. அவர் வைத்திருக்கும் பொருள் நலமும் கெடுகிறது. இவ்வனைத்தும் கெடுவதனால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது. இதனை சமுக மேதையாகிய திருவள்ளுவர் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தினைக் கண்டித்துக் கூறியுள்ளார்.

'உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்
குள்காதல் கொண்டுஒழுகு வார்'
இரவு பகல் என்று பாராமல' எந்த நேரத்திலும் மது அருந்துவதையே காதலிப்பவன், விலங்கிற்கு நிகரானவன். புதவி, பணம் ஆகியன கள் குடிப்பவனிடம் இருந்தும் கூட மற்றவர்கள் அவனைப்பார்த்து உரிய மரியாதை கொடுக்க மாட்டார்கள். காலப்போக்கில் கள் குடியையே பழக்கமாகக் கொண்டிருப்பவன் தான் பெற்றிருந்த எல்லாச் சிறப்புகளையும் இழந்து விடுவான். என்று 'கள் உண்ணாமை' எனும் அதிகாரத்தில் இருந்து அழகாக புகட்டியிருக்கிறார்...

இனி இந்த மது மயக்கம் எதுவரைக்கும் என்கின்ற பொது விடயங்களை ஒரு தனிமனித வாழ்கையோடு ஒப்பிட்டு பார்க்கவேணும் என்ற ஆர்வம் மேலெழ இதை பிடியாக எழுத ஆரம்பித்தேன்..

இளமையில் தொடரும் மது பழக்கம் பற்றி....
இன்றய அநாகரிக உலகில் நாகரிகம் என்ற போர்வையில் செய்யக்கூடததை எல்லாம் செய்யத்தொடங்கி விட்டனர். இளம் பராயத்தினர் சும்மா என்று சொல்லி பாடசாலை மட்டங்களில் பழகுவது கல்லுரி பல்கலைக்கழகம் என்று தொடர்ந்து கடத்தப்படுகிறது இப்பழக்கம். இப்பழக்கம் இந்த வயதினரிடையேதான் அதிகமாகக் காணப்படுகிறது, இவர்கள் தொடர்ச்சியாக குடிப்பதனால் பெரும் குடிமகனாக மாறி குடியழிந்தே போகின்றனர். இந்த பழக்கத்துக்கு பரிட்சயமான நண்பர்கள் வட்டம் இதனால் அதிகரித்த வண்ணமுள்ளன. இவ்வாறான குடி அடிமை, எதிர்ப்பால் கவர்ச்சியை சிறுவயதிலே தூண்டி அவர்களை சமுகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் அளவுக்கு மோசமாக்கி விடுகிறது.

ஏன் மதுவக்கு அடிமையாகிறான்...
கவிஞ்ஞர் கண்ணதாசன் கூறுவார் ' இந்த மது அருந்துவதில் உள்ள துயரம், நாம் எதை நினைக்கிறோமோ அதை வளர்த்து விடும்' என்று. இதை நாளடவில் அருந்த அருந்த அதன்பால் வயப்படுத்திவிடுகின்றதாம். இந்த குடிப்பழக்கம் அநேகமான கால அவகாசம் எடுப்பதில்லை, குடிப்பவர்கள் தங்களை எல்லோருக்கும் முன் குடிப்பதற்கு.. அதாகவே அவர்களை கொண்டு வந்து விடுகின்றது. இருப்பினும் குடி பேதைக்கு அடிமையானவன் தனது குடியை மறந்த பழய நிலைக்கு வருவதற்கு சாத்தியங்கள் இல்லையாம். இது அவனை ஒரு உதவியற்ற, கட்டுப்பாடிழந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.

விபத்தாக மாறும் சந்தர்ப்பங்கள்...
மது அருந்துதல் மத்திய நரம்பு மண்டலங்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றது. இதனால் எங்கள் சாதாரண செயற்ப்பாடுகளில் இயல்பு பலகீனப்படுவதுடன் கலங்களை களைப்படைய வைக்கிறது, அத்துடன் நாங்கள் பிரதிபல்க்க இருக்கும் விடயங்களை தாமதப்படுத்தி விடுகின்றது. இவை தான் விபத்துகள் நடைபெறுவதற்க்கான ஆபத்தினை விரைவுபடுத்தி விடுகின்றது. குறிப்பாக வாகனங்கள் ஓடும்போது, வீதியில் வீட்டுக்குள் கூட விபத்துகளை அது வரவளைத்து விடுகின்றது. இரத்தத்துடன் மது கலப்பதனால் 0.05 வீதமான நிதானத்தினை வாகனம் செலுத்துபவர்களிடையே அது இழக்க வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகலாவிய ரீதியில் ஆட்டங்காணும் பலரது வாழ்கை குடித்து வாகனத்தை ஓட்டுவதனால்தான் என்று ஆய்வகள் கூறுகின்றது.

இதயத்தில் குடிகொள்ளும் மது..
குடிப்பழக்கம் இதயத்தின் பிடிப்புகளை சிதைவுபடுத்துவதுடன், இருதய இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. அதனால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை கொண்டு வரகிறது. இதயத்தில் விரைவான மாற்றத்தினை ஏற்ப்படுத்துகின்றது. இதயத்தின் அனைத்துவிதமான நோய்களுக்கான ஆரம்ப படிக்கட்டாக இந்த குடிப்பழக்கம் காணப்படுகின்றது இதனை இன்னும் விரைவுபடுத்தும் காரணியான புகைத்தல் அமைந்த விடுகின்றது....

அதேபோன்று குடிப்பவர்களின் ஈரலில் பல நோயினை கொண்டு வருகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. குடிப்பதனால் ஒருவனது ஈரல் சிவந்து இரத்த கசிவை ஏற்ப்படுத்துவதுடன் இது பல வேறு நோய்கும் கால்கோலாகிறது.

'நல்லவங்க சாராயத்தை தொட்டதும் இல்லை- அதை
தொட்டவங்க லேசிலதான் விட்டதுமில்லை' “மது உள்ளே போனால் உண்மை வெளியே வரும்’’கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்ன வரிகள் ஏனோ சரிதான் என்று என் வாழ்வின் அனுபவத்தில் இருந்து சிலரைப் பார்த்திருக்கிறேன். ஆதனை விடததால் நீரழிவு நோயும் வருதாம். குடிப்பதனால் இரத்தத்தில் தங்கும் சீனியின் கலோரி அளவு அதிகரிக்கின்றது. இதனால் இலகுவில் நீரழிவு நோய் தொடர்கிறது.அது மாத்திரமில்லை எலும்புகளை உருக்கி அதனை சிறிதாக்கி அதை வலுவிழக்கச் செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் எலும்புகளில் காணப்படும் கல்சியத்தினை உறிஞ்சி இல்லாமல் செய்து விடுகின்றது. 

இன்னும் ஒரு விடயம் குடிப்பவர்கள் பாலியல், உடலியல் இன்பத்தில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டே போவார்களாம் இதனால் ஏற்ப்படக்கூடாத இழப்புகள் எல்லாம் குடும்பத்துக்குள் ஏற்ப்படுகின்றது. மாயோ கிளினிக் தகவல்படி இந்த குடிப்பழக்கத்தினால் வாய், தொண்டை, மார்புகளில், இதயத்தில் எல்லாம் புற்றுநோய் ஏற்ப்படும் வாய்ப்புள்ளதெனவும் எச்சரித்துள்ளனர்.

ஆண்கள் மட்டும் குடிப்பதில்லை பெண்களும் நாங்கள் சளைத்தவர்கள் அல்லர், ஆண்களும் பெண்களும் சமம் என்பதனால் என்னவோ குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர். கற்ப்ப காலங்களில் பெண்கள் குடிப்பது பாரிய ஆபத்தினை ஏறப்படுத்தி விடுகின்றது. இவர்கள் இக்காலப்பகுதியில் குடிப்பதனால் அங்கவீனமான, மன, உடல் வலிமை குன்றிய, உள் ஆற்றல் குறைந்த ஒரு சமுகத்தை ஆக்கிவிடுகின்றனர்..

தவிரவும் மது அருந்துவது அவனின் மூழைப்பகுதியை அதிகமாகப் பாதித்து விடுகின்றது என்று கூறுகின்றனர். இது ஒருவனை மன நோயாளியாக்குவதுடன், உழவியல் அழுத்தங்கள், தாக்கங்களுக்கும் இட்டுச் செல்கின்றது. இது அவனை வேலையற்றவனாக்கி, குடும்பத்தில் இருந்து பிரிய வைத்து, தீய நண்பர்களின் சகவாசத்தை தூண்டி விட்டு சுகமாக வாழவேண்டியவனை சுடுகாட்டுக்கே கொண்டு சென்று விடுகின்றது.

வளியென்ன குடி நீங்கவே...
ஆகவே இத்தனை மோசமான விளைவுகளைத் தரவல்ல முத தேவைதானா என்று கேட்கும் அவர்களிடம், சரி பழகித்தன் தெரியல என்ன வழி இதனை விடுவதற்கு என்று நீங்கள் கேட்கலாம் சரி...நிறையவே இருக்கு, நல்ல வைத்தியரிடம் சென்று ஆலோசனை கேட்க்கலாம், பொது தொண்டுகளில் ஈடுபடலாம், அவ்வாற குடிப்பதை மெது மெதுவாக குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பம், வருமானம், எதிர்காலம் என்பனவற்றை நினைத்துப்பாருங்கள் இது தேவைதானா என்பது புலனாகும், அதவும் சரிவர இல்லை எனில், வள்ளுவர் சொல்வதை கேளுங்கள்....
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால், என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?

அதாவது எப்பிளை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் தாய் கூட கள் குடித்து வருவது வரும் மகனை ஏற்க்க தகாதாம். ஏனெனில் பாவணர் கூறுகிறார் இதனை விரித்து, மெய் முதலான ஐம்புல உணர்வை இழத்தல், உளரல், பைத்தியம் போல் பிதற்றல், ஆடை அவிழ்தல் கூட தெரியாதிருத்தல், தீய வாடை வீசுதல், வாய் நுரை தள்ளுதல், வழியில் மண் மேல் கிடத்தல், வழிப்போக்கர் பழித்தல், ஈ மொய்த்தல், சின்னஞ் சிறுமியர் கேலி செய்து சிரித்தல் நேரும்... இந்த குடிகாரர்களுக்கு என்று உன்மையை அப்பட்டமாய் கூறி எங்களை திருந்தச் சொல்லுரார் புரிந்தால் சரி....

இதில் மேலதிக விடயம் உங்களுக்காக  http://www.natpu.in/Pakudhikal/Nam%20Samookam/alcohol.php


-----இது எனது நண்புர் ஒருவுரின் வேண்டுகேளுக்காக எழுதப்பட்டது...

08 February 2011

பெண்ணுக்கு இரண்டு மனமா???????

சின்ன கதை ஆனால் பெரிய உண்மை..பொறுமையாய் வாசித்தால் புரியும். 
அரசனை ஆண்டியாக்கினாய், புரிசனை போகியாக்கினாய், பாவியாக்கினாய். அணுகுண்டு தயாரிக்கும் வல்லரசு நாடுகள் இன்னும் புத்தி கெட்டுக் கிடக்கின்றது போலும், ஏனென்றால் அணுவை விட மோசமான சக்தி பெண்களிடம் இருக்கிறது. ஆமாம் புரியாமல் இருக்கும் நகைப்பாய் இருக்கும் புரிய வைக்கிறேன்.

ஒரு துறவி உட்ஜயனி நகரத்தினிடையே ஆச்சிரமம் நோக்கி நடந்துகொண்டிருந்தார். அப்போது மக்கள் அனைவரும் விலகி இடம் விட்டனர், ஒதுங்கி கைகூப்பி நின்றனர், சிறிது நேரத்தில் விலகுங்கள் விலகுங்கள் மகாராஜா வருகிறார் என்றனர், துறவி விலகவில்லை.. மன்னனின் காவலர்கள் விலகச் சொல்லியும் விலகவில்லை கண்டு கொண்டார் மகாராஜா...

அவரைப்பார்த்து மன்னன் கேட்டான்: 'யார் நீ?'
துறவி சொன்னார் 'மனித உயிர்கள் தங்களை தாங்களே கேட்டுக் கொள்கிற கேள்வி!'
எங்கிருந்து வருகிறாய்?
'கருப்பையில் இருந்து'

எங்கே போகிறாய்?
'இடுகாட்டுக்கு'

இங்கென்ன வேலை?
'இடையில் ஒரு நாடகம்'

தங்குவது எங்கே?
'வானத்தின் கீழே'
திமிரா உனக்கு என்று காவலர்கள் நெருங்க 'அவனை விட்டுவிடுங்கள்' என்று மன்னன் சென்றான்....

ஆச்சிரமம் சென்றடைந்தார் துறவி...இரவானதும் ஏடு பாடிக்கொண்டிருந்தார் துறவி..
ஆனால் இன்னொரு துறவியோ பெண்களைப்பற்றி பெருமையாய் பாடத் தொடங்கினார்...
'மூடிய ஆடை முற்றத் களைந்து முகம் தழுவி
சூடிய கொங்கை சுற்றிப் பிடித்து சுடர் பரப்பி
வாடிய ரோமக் கால்களை மெல்ல வருடி விட்டு
நாடிய இன்பம் மாந்தருக் குண்டு நமக்கில்லையே'

துறவி கோபத்தில் பார்த்தார் இன்னும் ஒரு பாட்டை மற்ற துறவி பாடினார்...

'செப்பளவு கொங்கை சேயிழை யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டு
கொப்புளந் தொட்டு குளத்தினில் மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!'

இவர் யாருமில்லை இந்நாட்டு மகாராஜாதான் மாறுவேடத்தில் வந்திருந்தார்...
அதற்கு துறவி பாடினார்...
'சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே- நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்'

 என்று பதிலிறுக்க கோபம் கொண்ட மன்னன் பெண்களைப் பற்றி அசிங்கமாய் பேசும் நீ என் பட்டத்து ராணியையும் அப்படியா கூறுகிறாய் என்று கேட்க....
துறவி கூறினார் 'எந்த ஒரு பெண்ணுக்கும் இரண்டு மனம் உண்டு!' என்றார்.
மன்னர் குலத்தை இகழ்ந்தமைக்கு மன்னிப்பு கேள் என்றார்....முடியாது என்ற துறவியை சிறைப்படுத்தினான் மன்னன்...

அரன் மனையில் மன்னன் சென்று மேல் மாடத்தில் உலாத்தும் போது..அவனது மனம்.....
எனது பட்டத்து ராணி ஒரு தெய்வத்திருமகள், 
அவளுக்கு ஒரே மனம்....அது முற்றிலும் என்மீதே!
இரவுக்கு ஒரே நிலவு; பகலுக்கு ஒரே ஆதவன்.
எனக்கு அவள்; அவளுக்கு நான்......
அப்பொழுது 'பிரபு' என்றாள் ராணி
'தேவி' என்றான் மன்னன்

அவள் அவனை முத்தமிட்டாள். தௌளிய தடாகத்தில் சுவாமிகள் கிளப்பி விட்டிருந்த அலை ஓய்ந்து விட்டது. 'என் தெய்வமே' என்றாள்...மதுவினை ஊற்றிக் கொடுத்தாள்..அதிகம் பருகினான் மன்னன்..உள்ளத்து ரகசியம் வெளிவரத்தொடங்கியது...

'உனக்கு இரண்டு மனம் என்று ஆண்டி சொன்னான்' என்றதும் ராணி அழுதாள்
'உங்களைத்தவிர ஒருவரை நான் மனத்தாலும் நினைத்திருந்தால் அந்த நெருப்பு என்னைத் தீண்டட்டும்' என்றாள்

கோபம் கொண்ட மன்னவன் மறுநாள் இரவு துறவியை சிறையில் சந்தித்து.... ராணிக்கு இரண்டு மனம் என்றதுக்கு ஏய் ஆண்டி ராணியிடம் மன்னிப்புக்கேள் என்றான்...அதற்து மறுப்பு தெரிவிக்க நாளை சாவதற்து தயாராய் இரு என்று மன்னன் கூற...அதற்கு நான் தயார் நீ போய் நிம்மதியாய் தூங்கு என்றார் துறவி......
மன்னவன் அரன்மனைக்கு திரும்பினான், மாடத்தில் உலாத்தினான், காலையில் துறவியை களுவேற்ற உள்ள செய்தியை ராணிக்கு சொல்ல விரும்பினான்.

பள்ளியறையில் தேடினான்; அவளில்லை
அந்தப்புரத்தில் தேடினான்; அவளில்லை
அந்த நள் இரவில் ஏதோ ஒரு சக்தி அவனை குதிரை லாயத்தின் பக்கம் இழுத்ததுச் சென்றது. அங்கே அவன் கண்ட காட்சி....

அதை விவரிக்க முடியவில்லை....
அஸ்வபாலன் என்ற குதிரைக்காரன் மடியில் அவனது பட்டத்து ராணி படுத்திருந்தாள்....குதிரைக்காரணிடம் ராணி கூறிக்கொண்டிருந்தாள்' நீண்ட நாட்கள் வாளக்கூடிய ஒரு கனியை, ஒரு முனிவர் என் கணவருக்குக் கொடுத்தார். என் கணவர் அதை என்னிடம் கொடுத்தார்; நான் உங்களிடம் கொடுத்தேன், நீங்கள் சாப்பிட்டீர்களா?' என்று

அதற்கு அவன் சொன்னான்' இல்லை; அதை என் ஆசை நாயகி காமினியிடம் கொடுத்தேன்' என்றான்.

அப்போதுதான் மன்னவனுக்கு புரிந்தது 'பெண்களுக்கு இரண்டு மனம் என்று' சுவாமி சொன்னது சரியென்று.........

தீண்டக் கூடாததை தீண்டிவிட்டால், கையைக் களுவி துடைத்து விட வேண்டுமே தவிர, அடிக்கடி வாசனை பார்க்கக் கூடாது....
இதைத்தான் மன்னவனும் செய்தான் ராணியை நிர்வானமாக குதிரையில் ஏற்றி மக்களால் கல் எறிந்து கொலல வைத்தான் மன்னவன்..

கோபிகள், பாவிகள், இழிமகள் இவர்களின் தொடர்பிலேதான் ஞானம் பிறக்கிறது என்று கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார்... அப்படித்தான் இந்த உட்ஜயனி மன்னனுக்கும் ஞானம் பிறந்தது.....பெண்களை மட்டுமல்ல அவனது நாட்டையே துறந்து துறவியுடன் துறவு பூண்டது பெண்ணால் தானே?

மன்னவன் துறந்த பின்னர் பாடிய சில பாடல்கள் இங்கே;
'கால் காட்டி கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கயரை மறந்திருப்ப தெக்காலம்'

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையே காணாமல்
தேடித் தவிப்பவள்போல் சிந்தை வைப்பதெக்காலம்'

எனக்கும் பிடித்த இந்த கதையை உங்களிடம் சொல்லாமல் இருக்க என் பேனா விடவில்லை அதனால் எழுதினேன்... இதில் வரும் துறவி வேறு யாரும் இல்லை நம்ம பட்டினத்தார் தான்....

07 February 2011

பழகத் தெரிந்தும் விலகத்தெரியாமல்..

பயம்.. பார்வை
தொடுகை... இனிமை
ஈர்ப்பு... உயிர்ப்பு
நீ.. நான்
ஒன்றான நாட்கள்
ஓடி மறைந்தன
உன்னைப் போல்....

உதறல்... கதறல்
உட்காயம்... வெளிக்காயம்
சொல்லெறி... கல்லெறி
அழுகை... விழுகை
கண்ணீர்... கலக்கங்கள்
ஏக்கம்.. ஏமாற்றம்
இத்தனையும் -என்
உயிரை வெடித்தும்....

கருப்புப் பெட்டிபோல்-என்
ஞாபகப் புதருக்குள்
உன் நினைவுத்துளிகள்
ஒட்டிக்கொண்டு
பழகத் தெரிந்தும்
விலகத்தெரியாமல்
இன்னும்
எத்தனை நாட்கள்தான்?????

மழை நின்றும் வாழ்வில்லை..

இன்னும் விடவில்லை –மழை
நின்றும் வாழ்வில்லை,
பென்னம் பெரிய அடப்பு - இங்கே
பேய்போல் அழிந்து கிடக்கு
தின்ன வழி ஏது -இனிமேல்
தேறும் வகை யாதோ...
           
தேறும் வழியின்றி மக்கள் தெருவில் திரிய வைத்த வெள்ளம் வடிந்தபாடும் இல்லை, மழை முடிந்த பாடும் இல்லை. மட்டக்களப்பு மக்களின் வாழ்வில் தாங்கள் செல்வமாய் வாழ்ந்ததெல்லாம் விவசாயத்தினால்தான், அதனால்தான் 'ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை, என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லை' என்று பாடியிருக்காங்கள். அந்த ஏரின் முனையே கொடிய வெள்ளத்தால் முறித்தெறியப்பட்டுள்ளதே!. அப்புறம் ஏதப்பா பஞ்சமில்லாத வாழ்கை? கிட்டத்தட்ட 48,000 கெக்டேயர் நிலப்பரப்பில் மேட்டு நில விவசாயம் பண்ணும் இம்மக்கள் அந்தோ கெதியென நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மன்முனை தென் எருவில் பற்றுப்பிரதேசம் இவற்றுக்கு பேர்போன இடமாகும். இம்மக்களின் அனேகமானவர்கள் தங்கள் நாளாந்த வாழ்கைக்காக இந்த பயிர்ச்செய்கை தனையே நம்பி இருக்கின்றனர். இவர்கள், விசேடமாக தேற்றாத்தீவு, களுதாவளை, மாங்காடு, செட்டிபாளையம் மற்றும் குருக்கள்மடம் போன்ற கிராமங்களில் வெற்றிலைச் செய்கை, மிளகாய், கத்தரி, பயற்றை, வெண்டி மற்றும் இன்னோரன்ன பயிர்செய்கையில் நன்கு ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

தேற்றாத்தீவு கிராமத்தின் நிலவரம் இவற்றுள் மோசமானதாக இருப்பதனை மேட்டு நிலப்பயிர் செய்கையாளர் சங்கச் செயலாளர் திரு.அ.விமலேஸ்வரன் கூறுகையில் குறிப்பிட்டார். இங்கு மேட்டு நில விவசாயம் மாத்திரமில்லை சுமார் 195 ஏக்கர் வயல் செய்கையும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இவரின் அறிக்கைப்படி, வெற்றிலைத்தோட்டங்கள் வெள்ளத்தினால் மொத்தமாக 325 பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 75 முற்றாகச் சேதப்பட்டுள்ளதுடன், 250 தோட்டங்கள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அது தவிர 496 மேட்டு நிலப்பயிர்ச் செய்கையாளர்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளனர் என்றும் அதனால் 1500 குடும்பங்களுக்கு மேல் தங்களது தொழிலை இழந்து நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.

'யாரிடம் எதைப்போய்ச் சொல்வது என்று யாருக்கு தெரியும'; என்று மக்கள் அங்கலாய்த்து கொள்வதனை பார்க்கும்போது இனி வாழ்வதற்கு என்ன மிச்சம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளும் மக்களுக்கு, யாரும் தெம்பூட்டவில்லையே... பாவம் என்று சொல்லி பார்த்திருப்பதனை விட இந்த சமுகத்தின் பணத்தில் படித்து பெயிய இடங்களில் வாழும் நாம், நன்றி மறந்தவர்களாக மாறிவிடக் கூடாதல்லவா? நமக்கெல்லாம் ஆண்டவன் தந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, இது போன்ற பாதிக்கப்பட்ட எம் லெட்சோப லெட்சம் மக்களையும் மீட்டெடுப்பதற்கான தந்திரோபாயத்திட்டத்தினை அறிவுசார் சமுகம் என்ற வகையில் நாங்கள் திட்டமிட்டு இவர்களை முன்னே கொண்டுவரவேண்டும். அப்படியே கைவிட்டு விட்டால் எதிர்காலத்தில் நம்பெயர் சொல்ல ஒரு சமுகம் இல்லாத அநாதைகளாக்கப்படுவதே திண்ணம்.

06 February 2011

அதிசயம் ஆனால் உண்மை..

கலியுகத்தில் இருக்கிறோம் அல்லவா, யானையின் தும்பிக்கையால் நீர் இறைப்பதுபோல் மழைபொழியுமாம், இப்படியெல்லாம் நம்ம பழயவங்க சந்திக்கு சந்திப பந்தி வைத்து பேசுதுகள்.. அது என்னவோ உன்மைதான் என்பதுபோல் நடந்து கொண்டிருக்கிறது நம்ம நாட்டில மட்டுமல்ல உலகமெங்குமே.

நம்ம நாட்டில ஆகாயத்தில் ஒரு அழகான குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள்ளயே இரண்டாம் தடவையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் கொரவப்பொத்தான என்ற இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வெல் 212 கெலிக்கொப்டரில் நான்கு கற்ப்பினித்தாய்மார்கள் அவசர அவசரமாக எடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது, இடை நடுவில் அதிசயக் குழந்தை ஒன்று அதில் ஒரு முஸ்லிம் தாய் பிரசவித்துள்ளார்.

விமானப்படைப் போச்சாளர் ஜனக நாணயக்கார கூறுகையில் தாயும் சேயும் எதவித பாதிப்பும் இல்லாமல் நலத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதுதான் விமானப்படையில் வரலாற்றில் நடந்த பிரசவ நிகழ்வென்று வியந்தார். இது தவிர அநாதரவாக இப்பகுதியில் வெள்ளத்தில் அகப்பட்டுக்கிடந்த 20 மக்களையும் இவர்கள் மீட்டெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பெய்துவரும் அடைமழையில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஆங்காங்கே பாதை மறிபட்ட நிலையில் தத்தளித்து வருகின்றனர். அவர்கள் மேட்டுப்பகுதிகளிலும், மரங்களிலும் தஞ்சமடைந்து அவதியுற்று வருகின்றனர் என்றும், அவர்களைக் காப்பாற்ற இலங்கை விமானப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குறுப் கப்டன் ஜனக நாணயக்கார கூறுகையில், இலங்கை விமானப் படையினரின் 7 கெலிபக்கப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இன்று 22இ000 கி.கிறாம் உணவுகள் இலங்கை எங்கும் வெள்ளத்தில் அகப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இயற்கை யாரைத்தான் விட்டுவைத்தது?

13.01.2011 அன்று ஏற்ப்பட்ட கபறனயில் உள்ள கல்லோயா ஆற்று வெள்ளப் பெருக்கில் 5.5 மீற்றர் உயரத்துக்கு ஒரு மரத்தில் பரிதாபமாக அடித்து தூக்கி வைக்கப்பட்ட யானைக் குட்டியொன்று இங்கே காணப்படுகிறது. இந்த ஆறு கொழும்பு இருந்து வடகிழக்கே 88 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்றை யாரைத்தான் விட்டுவைத்தது? ஆறறிவுள்ள மனிதனுக்கே இந்தக் கெதி என்றால் ஐந்தறிவுள்ள வனஜீவராசிகள்???? பாவம்... அடித்துச் செல்லும் வெள்ளத்தில் இலங்கையில் நிலவமைப்பே மாறியுள்ளது. குளங்கள்:; காடுகள்>; மலைகளை அண்டியே கட்டப்பட்டுள்ளது. இந்தக் குளங்களையும் காடுகளையும் சரணாலயமாகக் கொண்டுதான் அங்கு அருகிப்போகும் ஜீவராசிகள் பெருகிவந்தன.  மனிதன் மனிதனை மட்டுமா வேட்டையாடினான் மிருகங்களையும்தான் கொன்றளித்தான். யானைகளுக்கும் மனிதர்களுக்கும்தான் சண்டை இருந்த வந்தது> ஆனால் அவற்றோடு இயற்கையும் சண்டைபோடத்தொடங்கினால் அவை என்ன செய்யும்??????

வெள்ளத்தில் அடையும் ஆடும், மாடும்...

'பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை
அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை'
'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர், சிறப்பு'
போன்ற பொன் மொழிகள் ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கு பொருள் எவ்வாறு அவசியம் என்பதனை எடுத்துக்காட்டுகின்றதல்லவா. அவ்வாறான பொருள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள், வேளான்மைச் செய்கை, பசு வளர்த்தல், மீன் பிடித்தல், ஆடு, மாடு, கோழி போன்ற இன்னோரன்ன ஆதாரங்கள் மூலமே ஈட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                   (கோடைமேட்டில் உணவுக்காக வெள்ளத்தில் சண்டை போடும் மாடுகள்)
மனிதர்கள் தங்கள் உயிர்களைக்காப்பாற்றவே அவகாசம் இல்லாத அளவுக்கு வெள்ளம் மாசக்கணக்கில் பரவிச் செல்லும்வேளையில் எவ்வாறு ஏனையவற்றை பாதுகாத்துக் கொள்வது?. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரான திரு தொண்டமான் தெரிவித்த கருத்தில் பசுக்கள், கோழி, ஆடுகள் அடித்த வெள்ளத்தில் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி தங்க இடமின்றி வகை தொகையில்லாமல் வீதிகளில் பிணமாகக் கிடந்து நாற்றமெடுப்பதை பாதைகள் நெடுகிலும் காணக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

கால் நடை உத்தியோகஸ்த்தர்களின் கருத்துப்படி இந்த உயிர்கள் எல்லாம் குடிநீர், உணவு, மற்றும் தொடர்மழை காரணமாக நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன எனக் குறிப்பிட்டார். ஆவர்கள் மேலும் குருத்துத்தெரிவிக்கையில் இவ்வாறான நோய்த்தொற்றுக்களில் இருந்து எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற கால்நடை மருத்துவ முகாங்களை நடத்தவேண்டும் என்றும் அமைச்சர் குலாம் ஆலோசித்துள்ளதாம். இருப்பினும் இவ் மருத்துவ முகாங்களை மாகாண அமைச்சி மட்டத்தில் நடத்த வேண்டப்பட்டவேளை அவர்களிடம் தற்போது இதற்க்காக போதிய மருந்துகள் இல்லை என்றும், அவற்றைக் கொள்வனவு செய்வதற்க்கான நிதியும் கழடையாது என கையை விரிக்கின்றமை, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் அல்லவா உள்ளது.
                         (நெடுஞ்சேனையில் எங்களது உணவுக்காக பால் கரக்கும் ஒருவர்)
குறிப்பாக இலங்கையில் 48,000 பசுக்கள் இறந்துள்ளதென்றும் அதில் அநேகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அவை 6000 மேல் இறந்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் றொசான் நிர்மல் கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும் இவை இன்னும் அதிகமாகவே இருக்கும் என அஞ்சப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் அநேகமாக தங்களது வாழ்கைக்கான ஆதாரத்தினை பசுக்களில் பெறும் பாலில் இருந்தும், அதனை தயிராக்குவதன்மூலமும் பெற்றுவந்தனர். இதன் காரரணமாக மட்டக்களப்பின் பால் பதனிடும் நிலையங்களும் அதிகரித்திருந்தன. 10 பால் பதனிடும் நிலையங்கள் பாதிப்படைந்துள்ள இந்நிலையில் அமைச்சின் ஊடகச் செயலாளர் கூறுகையில் புலிபாஞ்சகல்லில் ஒரு புதிய பால் பதனிடும் நிலையம் அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இந்த இளப்புகள் குறித்த மதிப்பீடுகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், அவைகுறித்த இளப்புக்கான விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

எது எப்படியுள்ளபோதும் நம்மக்களுக்கு பெய்த பேய் மழையாலும், அடித்த பெரு வெள்ளத்தினாலும் இருந்த பொருளும் இல்லை, வாழ அருளும் இல்லை.

05 February 2011

தாண்டு கொண்டிருக்கும் கிழக்கிலங்கை...

                                                          (வந்தாறுமூலையில் வந்திறங்கும் வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள்)
ஆட வைத்திருக்கும் ஓடும் வெள்ளத்தில் பாடுமீன் வாவி பரவி பரிதவிக்கும் மக்கள் லெட்சோப லெட்சம். இரண்டாம் தடவையும் பெய்து வரும் அடைமழையில் மாவட்டச் செயலாளர் அறிக்கைப்படி 58,000 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 177 நலன்புரி முகாங்களில் 21,000 குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. குறிப்பாக கோடைமேடு, சித்தாண்டி, செங்கலடி, தன்னாமுனை, கல்லாறு, ஏறாவூர், வாகரை, பிள்ளையாரடி போன்ற எழுவான்கரைப்பிரதேசங்கள் மற்றும் படுவான்கரைப் பிரதேசத்தின் அனைத்துப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை கடற்ப்படையின் உதவியுடன் இவர்களுக்கான படகு சேவை நடைபெற்று வருவதுடன், பொதுமக்களின் தோணிகள் மூலமான சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றது.
                             (தடைப்பட்ட பாதையில் உழவு இயந்திரத்தில் வரும் மக்கள்)
இவைதவிர நான் சித்தாண்டி பக்கம் 03.02.2011 அன்று செய்தி சேகரிக்க சென்றபோது இந்தப்பக்கம் பிரயாணம் செய்ய முடியாமல் கிழக்குப் பல்கலைக்கழகத்தினில் இருந்து நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. அங்கு அநேகமான மக்கள் நடையிலும், உழவு இயந்நிரங்களிலும், வகை தொகையில்லாமல் வந்திறங்கினர். அவர்களில் குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என பலர் மிகவும் சிரமப்பட்டு வருவதை காணும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இவர்கள் அநேகமாக தீவுப் பகுதி, வந்தாறுமூலை வடக்கு, மற்றும் மேற்கு அதேபோல் கொம்மாதுறை மேற்கு மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து வருகை தந்தனர். 03.02.2011 அன்று இரவு வரைக்குமான கணக்கெடுப்பின்படி சுமார் 211 குடும்பம் தற்க்காலிகமாக தஞ்சம் புகுந்திருந்தனர். அநேகமான மக்கள் நாளாந்தம் கூலிவேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களாகவே இருந்தனர். இவர்கள் குறித்த நேரம் வரைக்கும் அநாதரவாகவே விடப்பட்டிருந்தனர்.
                                                     (மூழ்கிகொண்டிருக்கும் கிழக்குப் பல்கலைக்களகம்)
இருப்பினும் கி.ப.கழகத்தின் சமுகவியல் துறையில் மூத்த விரிவுரையாளரும், சமூக சேவகருமான தில்லைநாதன் அவர்களின் பரோபகார சிந்தையில் இந்த பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உடனடி உணவு உறைவிட வசதிகள் அங்கு கடமைபுரியும் சக ஊழியர்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டமையை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்துடன் இன்னும் உதவக்கூடிய பெரியவர்களிடமும் உதவிகள் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களும் சிறியளவில் கொடுத்து உதவியதுடன். பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்களும் அம்மக்களின் அவல நிலையை பார்த்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                                       (கி.ப.கழகத்துள் நுழையும் இடம் பெயுர்ந்த மக்கள்)
இம்மக்கள் போன்று மாவட்டம் பூராகவும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிலமையும் மிக மோசமாகவே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. சுமார் நான்கு அடி அளவில் வெள்ளம் வேகமாக பரவி ஓடுவதனை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அநேகமான சொத்துக்கள் சிதைவடைந்துள்ளது. குறிப்பாக அவர்களது விவசாயப்பண்ணைகள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி இருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. அது போன்று இன்னும் நிறைய இழப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கிடையில் இங்கு மாணவர்கள் அனைவரும் வீடு சென்றுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கற்பித்தல் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
                                           (ஓடும் வெள்ளத்தில் ஆட்டம் காணும் கலை கலாசார பீடம்)
ஆகவே திரும்ப திரும்ப அடிக்கும் வெள்ளம் மக்களை அடியோடு குன்றவைத்துள்ளது. அவர்களது வாழ்வாதாரம், வாழ்விடம், கல்வி, வீடுகள் என அனைத்தையும் அழித்துள்ளது. சுனாமி அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இது பன்மடங்கு அழிவினை மக்களுக்கு ஏற்ப்படுத்தியுள்ளது.