ADS 468x60

29 May 2022

நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப்போச்சுங்க

 குடியிருப்பு என்பது தேத்தாத்தீவின் ஜீவநாடி. மட்டக்களப்புக்கே உரிய வனப்பினையும், இதன் அருகே வளைந்தோடும் மட்டு வாவி வளம்சேர்க்க அதனருகே மருத மண்ணையும், தமிழ் பண்பாடையும் பறைசாற்றும் பண்புடைய கிராமம். தேத்தாத்தீவின் தாய் எனச் சொல்லுமளவுக்கு அதன் வயது பழமைவாய்தது. அங்கு கிட்டத்தட்ட 50 க்கும் மேல் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் அதிகம்பேர் வயல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தினை நடாத்தி வருகின்றனர். இவர்கள் பாடசாலைகள், ஆலயங்கள், ஏனைய அரச சேவைகளைப் பெற இக்கிராமம் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ பயணம் செய்து பிரதான வீதியை அடைய ஒரே பாதையினையே பயன்படுத்துகின்றனர். இப்பாதையூடாகவே சிறியவர் தொடங்கி முதியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். 

இலங்கை உணவு இல்லாத நாடுகளின் பட்டியலில் - தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இன்றய அரச முகாமைத்துவத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளை உருவாக்கி நெருக்கடிகளை உருவாக்கி நாட்டை ஒரு ஆபத்தான நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. உலகளாவிய கொரோணா தொற்றுநோய் சூறாவளியாக வீசியதை அடுத்து, சரியான எந்தவித மதிப்பீடும் இல்லாமல் இயற்கை, கரிம உரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இன்னும் அந்த நெருக்கடி எல்லை மீறியுள்ளது. அது தவறான முடிவு என ஜனாதிபதியும் அண்மையில் ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குள் அழிவு ஆரம்பித்துவிட்டது. ஒரு காலத்தழில் கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கபபட்ட நம் நாடு அரிசியை இறக்குமதி செய்தமை இந்நாட்டின் பாரதூரமான தவறு.

26 May 2022

இன்று நாட்டில் அவசரத் தேவைக்கு 50 காசு கூட மிச்சமில்லை

எரிபொருளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தேங்காய் எண்ணெய் விலையும் உயரும் நிலை தோன்றியுள்ளது. ஆரம்பத்தில்; இது சற்று நடைமுறைக்கு மாறானது என்று தோன்றலாம். அதாவது மத்திய கிழக்கிலிருந்து தேங்காய் எண்ணெய் வருவதில்லை. அது பெட்ரோலியமும் அல்ல. ஆனால் எரிபொருள் விலை உயரும் போது அனைத்து போக்குவரத்து செலவுகளும் உயரும். இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. 

நம் நாட்டில் பண்டங்களின் விலை உயர்வுக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு காரணம் உண்டு. மழையால் காய்கறிகள் விலை உயரும். அல்லது வெயிலின் காரணமாக பயிர்கள் கருகி, காய்கறிகளின் விலை உயரும். ஒன்று ரசாயன உரம் இல்லாததால் அரிசி விலை உயரும். அல்லது உலகச் சந்தை விலை உயர்வு எண்ணெய் விலையை உயர்த்தும். இதனால் பெட்ரோலியத்திற்கும் தேங்காய் எண்ணெய்க்கும் பெட்ரோலியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது எளிது. 

22 May 2022

இன்றய தேவை தேர்தலல்ல

பொருளாதாரக் கோட்பாட்டின் படி, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு நாடு அந்த நாட்டு மக்களுக்கு உதவி வழங்குவது முடியாத காரியம், அது தவறானதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் குறைக்கப்பட வேண்டும், அத்துடன் வரிகளை உயர்த்துவதன் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் உலக நிதி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. ஆனால், மக்கள் உணர்வுடன் செயல்படும் அரசால் உலக வங்கியின் அறிவுரையை முழுமையாக ஏற்க முடியாது. அத்தகைய அரசாங்கம் பொருளாதாரக் கோட்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களை வாழ வைக்க நிபந்தனையின்றி முன்வர வேண்டும். 

18 May 2022

நீதியும், நியாயமும் இருந்தால் மட்டுமே, சுற்றுலாத்துறை மீட்சிபெறும்!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு டொலர்வருவாயை ஈட்டித்தரும் பல நாடுகள் அந்நாட்டு மக்களை இலங்கை குறித்து கவனமாகச் செயற்படும்படி அறிவுறுத்தியுள்ளனர். நியூசிலாந்து அரசாங்கமும் அவுஸ்திரேலியா அரசாங்கமும் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளதுடன், அவசர தேவைக்கு தவிர இலங்கைக்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் தாக்கப்படக்கூடிய பொது இடங்கள் என்பனவும் நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை முழுவதும் பதிவாகியுள்ள அதிகளவான வன்முறைகள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன் இதேபோல் எச்சரிக்கை பயண வழிகாட்டிகளை அந்த மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

17 May 2022

ஆரோக்கியமான நாடளுமன்றத்துக்கு ஐந்து பரிந்துரைகள்

ஒரு தடைவை நாடாளுமன்றத்தினைக் கூட்ட 90 இலட்சம் ரூபாய்களை இலங்கை செலவிடுகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் இது மிக முக்கியமானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. இந்த செலவினை வைத்து எந்தவித நல்ல முடிவுகளையும் எடுக்கமுடியவில்லை எனில் அதனால் மக்களுக்கு என்ன பயன்?. ஆதனால், இன்று நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால் அவ்வாறு நினைப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன என்பது பெரும்பான்மையான கருத்து. இது நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. ஆட்சியில் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஆட்சியாளர்களை நியமிப்பதற்கும் ஆட்சியாளர்களை அகற்றுவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர். அது புறந்தள்ள முடியாத ஒரு வாதம்.

15 May 2022

பங்களாதேசிடம் இருந்து இலங்கை கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது மற்றும் இந்த மோசமான படுகுழியில் இருந்து வெளியேறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதல்களை நாடு எடுத்துள்ள அதே வேளையில், மூன்றாம் உலக நாடுகளின் மறுமலர்ச்சி (third world resurgent Nation) அனுபவம் மிகவும் பொருந்தக்கூடிய மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பதால், இந்த அண்டைய பிராந்தியத்திலிருந்து தீர்வுகளைப் பார்ப்பது பயனுள்ளது.

14 May 2022

சஜித்துக்கு வாக்கு அடித்தளம் உள்ளது. ரணிலுக்கு சர்வதேச அடித்தளம் உள்ளது.

இன்று, நம் அனைவருக்கும் தெரியும் இலங்கையின் 26 வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே யாரும் எதிர்பார்க்காத வகையில் பதவியேற்றார். எமக்குத் தெரிந்த வரையில், ஜனாதிபதி கோட்டாபய முதலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவி ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். கோத்தபாய பிரதமரானால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என சஜித் தெரிவித்துள்ளார். 

11 May 2022

வன்முறைகள் நெருக்கடியின் ஆழத்தையும் சிக்கலையும் மட்டுமே மேலும் உருவாக்கும்.

காலி முகத்திடலில் இளைஞர்களின் போராட்டம் காதலுக்கான போராட்டம் என்று அழைக்கப்பட்டது. அதுதவிர கட்சி சார்பற்ற சுதந்திர இளைஞர் போராட்டம் என்றும் பலராலும் பேசப்பட்டது. சரியாக ஒரு மாதத்தில் எந்த வித வன்முறையும் இல்லாமல் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. போராட்டத்தின் வடிவமும் சுறுசுறுப்பும் புத்திஜீவிகளால் பாராட்டப்பட்டது. இத்தகைய மனிதாபிமானப் போராட்டத்திற்கு வன்முறையாக பதிலடி கொடுப்பது காட்டுமிராண்டித்தனமான மற்றும் பிற்போக்கான முயற்சி என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 

10 May 2022

உண்மையான மக்கள் புரட்சியும் பொய்யான அரசியல்வாதிகளும்

நாம் அனைவருக்கும் தெரிந்தவகையில் கோல்பேஸ் போராட்டமும், அலரிமாளிகை போராட்டமும் நசுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். 

இதேபேரவலம் உலகில் இன்னொரு நாட்டிற்கு நேர்ந்த கதையினை சொல்ல விரும்புகின்றேன். இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 17, 2010 அன்று, ஒரு காய்கறி விற்பனையாளர் ஆபிரிக்கக் கண்டத்தில் வடக்கே உள்ள டியூனிசியா சந்தையில் தீக்குளித்தார். காரணம், நடைபாதையில் காய்கறிகளை விற்க அனுமதிக்க டியூனிசியா போலீசார் அவரிடம் லஞ்சம் கேட்டனர். ஆந்த நேரத்தில் டியூனிசியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. டொலரின் மதிப்பு கடுமையாக சரிந்தது, அதன்போது டியூனிசியாவை 23 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த அதிபர் பென் அலி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக, டியூனிசிய மக்கள் அரசாங்கத்தை வெறுத்தனர். 

08 May 2022

இலங்கையின் இன்றய நெருக்கடியும் அதில் இருந்து மீளுவதற்கான பரிந்துரைகளும்!

இன்று முழு நாடும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. அதிலும் முதன்மையாக, பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குச் பின்சென்று வீழ்ந்துள்ளது. இதனால் உருவாகும் சமூக அழுத்தம் மற்றும பிரச்சினைகள் தற்போது நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களாக வெடித்து வருகிறது. 

இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு கடன் சுமை. இலங்கை அதன் அபிவிருத்தி அடைந்துவரும் காலத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய நாடுகளின் விசேட உதவிகளைப் பெற்றது. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலகுவான முறைகளின் கீழ் இலங்கைக்கு கடன்களை வழங்கியது. குறைந்த வட்டி விகிதத்தில் திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை உயர் நடுத்தர வருமான நாடாக மாறியதால் அனைத்து சலுகைக் கடன்களும் இழந்தன. பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகளில் அதுவும் ஒன்று.

07 May 2022

யதார்த்தத்தினை புரிந்துகொண்டுள்ள அரசு

இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ஆற்றிய உரை நம் அனைவரின் கண்களையும் திறக்கிறது என்றே கூற வேண்டும். நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இந்தக் கதை உருவாக்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கதை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி நமது பொருளாதாரத்தின் உண்மைக் கதையைச் சொல்கிறது. பொருளாதாரத்தைப் பற்றி தற்பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய விஷயங்களை மறைக்கும் போது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. இரண்டாம் பாகத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.

04 May 2022

பிரச்சினையை பற்றி சிந்திப்பதனைவிட்டு தீர்வினை நோக்கிச் சிந்திக்கவேண்டும்- மின்வெட்டுக்கு என்ன தீர்வு!

நம் நாட்டில் மட்டும்தான் மின்வெட்டு இடம்பெறுகின்றதா? இல்லை. அண்டைய நாடான இந்தியாவிலும் மின்சார விநியோகத்தை அடிக்கடி துண்டிக்கிறது. பாகிஸ்தான் தொடர்சியாக மின்சார விநியோகத்தை துண்டித்தது. நேபாளம் நீண்டகால மின் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது தவிர பல ஆசிய நாடுகளில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சிக்கல நிலவி வருகின்றது. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகியவை இந்த நாடுகளில் சில. தாய்லாந்தின் முக்கிய வருமான ஆதாரமாக சுற்றுலாத் துறை உள்ளது. தாய்லாந்தில் அந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளம். மின்வெட்டால் நாட்டின் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் இப்போது எரிசக்தி பிரச்சனை உள்ளது. அதற்கு ரஸயா-உக்ரைன் போர்தான் காரணம்.

03 May 2022

இன்று இஸ்லாமிய மக்கள் மாத்திரமல்ல நாம் அனைரும் நோன்பிருக்கின்றோம்

இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் மிகுந்த பக்தியுடனும் களிப்புடனும்; ஈத்-உல்-பித்ர கொண்டாடப்படுகின்றது;;. புனித ரம்ஜான் மாதம் என்று அழைக்கப்படும் ரமலான் நேற்றுடன் நிறைவடைந்தது. இது அநேகமாக ரமலான் நோன்பு காலமாக மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அந்தக் காலத்தில் நோன்பைத் தாண்டிய பல ஈகைகள் நடக்கின்றன, சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இங்குதான் ஒரு மனிதன் பசியின் நடைமுறை பற்றி அதன் முக்கியம் பற்றி ஒவ்வொருவரும் உணரும் வகையில் இந்த நோன்புகாலத்தில் கற்பிக்கப்படுகிறது. 

01 May 2022

உழைப்பைத் தேடி ஓடும் சாமானியர்கள் நாங்கள்

உதிரத்தையே வியர்வாகச் சிந்தி இந்த நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்காகவும் தியாகம் செய்து உழைத்தவர்கள் போற்றுதற்குரியவர்கள். உழைப்புக்கு ஜாதி, மத ஆண் பெண் பிரதேசம் என்ற எந்தவித பேதமும் இல்லை. குடும்பத்திற்காக ஆண்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர் என்றால் அந்த அச்சாணி முறிந்து விடாமல் காப்பதற்காக பெண்களும் வேலைசெய்து கைகொடுத்து கரைசேர்க்கின்றனர். ஆணும் பெண்ணுமாக வேலை பார்க்கும் வீட்டில் விடுமுறை என்பது இருவருக்குமே கிடையாது தான்.

தொழிலாளர்களின் தேவையைப் புரிந்துகொள்ளக்கூடிய தலைமையே தேவை

உலகம் இருக்கும் வரை உழைக்கும் மக்களைப் பற்றிய பேச்சு தொடரும். ஆவ்வாறான பேச்சுக்கள்; பல்வேறு வடிவங்களை எடுத்து முன்னேறும். ஏனெனில்; உழைக்கும் மக்கள் இல்லாமல் உலகம் இல்லை. இன்று தொழிலாளி என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது. தொழிலாளி என்பதன அர்த்தம், அன்று உடல் ரீதியாக வியர்த்து, உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுபவர் எனக்கொள்ளப்பட. இன்று, உடல் ரீதியாக வியர்வை சிந்துபவர்களை விட, தமது மூளையினை மற்றும் திறனைப் பயன்படுத்தி வேலைசெய்பவர்களே உற்பத்திச் செயல்பாட்டில் அதிகம் உள்ளனர். அவர்கள் தொழில் வல்லுநர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.