ADS 468x60

25 April 2024

இலங்கையில் ICT துறையிலும் அரசியல் தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு

இன்று இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தல்கள் பற்றியே கவனம் செலுத்துகின்றனர். எந்த தேர்தல், எப்போது நடக்கும் அல்லது நடக்காதா என்பது பற்றியே விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பாலின சமத்துவம் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதனை மறந்துவிடுகின்றோம். குறிப்பாக, வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்தக்காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் வளர்ச்சியில் இது மிக முக்கிய பங்கு வகிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து 'தலைமைத்துவம்' (Leadership) ஆகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் வலுவான பெண் முன்னோடி மாதிரிகள் அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது.

23 April 2024

கடன் மறுசீரமைப்புடன் சேர்த்து அரசியல் மறுசீரமைப்பும் அவசியம்.

இன்றயளவில் நலன்புரி அல்லது பிற மானியங்களை நம்பியிருக்கும் 40 வீத மக்கள் வாழும் நாடு இலங்கையாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, வறுமை 24 வீதமாக ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச கடன் வழங்குபவர்கள் அத்தகைய நாட்டிலிருந்து 9.75 வீத வட்டி விகிதத்தை எதிர்பார்க்கிறார்கள். 9.5 வீத வட்டி தர அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாம் திட்டமிடுவதற்கும் அவர்கள் கேட்பதற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி உள்ளது. ஆனால் இன்னும் கடன் கொடுத்தவர்களுடன் அந்த உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்க அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அறிக்கைகளை இரண்டரை வருடங்களாகக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அந்தத் தொகை இறையாண்மைப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட வேண்டும். இருதரப்புக் கடன்களுடன் சேர்த்து, நிலுவையில் உள்ள கடனின் மொத்தத் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.

21 April 2024

நாட்டில் சிறைச்சாலைகள் இல்லாதொழிக்க என்னவழி?

ஒருவன் குற்றம் செய்தால், அவன் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனையின் இறுதி இலக்கு குற்றவாளியை சமூகத்தில் சரியாக மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டு அதிகாரிகள் அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தினார்கள் என்பதில் திருப்தி அடைய முடியாது. சில சமயங்களில், தவறு செய்தவர்கள் இந்த சூழ்நிலையால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஒரு நாடாகிய நாம் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் பார்த்தால், சிறைச்சாலைகளில் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்க முடியாது. சிறைகள் நாளுக்கு நாள் ஒரு நாட்டில் மூடப்பட வேண்டும்.

யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக சிறைக்குச் செல்கிறார். ஆனால் நம் நாட்டில் குற்றம் சுமத்தப்படாமல் தவறு செய்பவர்கள் எண்ணற்றவர்கள். அரசியல்வாதிகளால் இன்று நமது நாடு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது;. நமது நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையடித்தார்கள். நாடு பெற்ற வெளிநாட்டு திட்டங்களில் இருந்து கமிஷன் பெற்றனர். கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பாலம்ஈ பாதைகள் மற்றும் மற்றும் மதகுகளை கூட சுரண்டினார்கள். 

18 April 2024

பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை.

இன்றைய உலகில், சமூகத்தின் வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கியத்துவம் எப்போதையும் விட அதிகமாக உள்ளது. வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவை அறிவு படைப்பு, திறன் வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு, சமூக நீதிக்கான போராட்டம் மற்றும் கலாச்சார வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய சக்திகளாகும்.

எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்தின் அடிப்படை நோக்கமும் வெறும் தகவல்களைப் பரப்புவது மட்டுமல்ல, ஒன்றை ஆய்ந்து கேள்விகேட்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதும், நடைமுறையில் உள்ள சித்தாந்தங்களை சவால் செய்வதும், சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் ஆகும். ஆயினும்கூட, நாம் சுற்றிப் பார்க்கும்போது, ஆராய்ச்சி மற்றும் கற்றுக்கொள்ளுதலின் திசையை சந்தைப்படுத்தும் ஒனற்hக மாறி வருவதனைக் காண்கிறோம், இதனால் நமது பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கத்தினையே சிதைக்கிறோம்.

17 April 2024

அரசாங்கம் எதற்குத் தேவை

இரு நாட்கள் முன்; ஒரு நாளில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த ஆண்டின் முதல் 100 நாட்களில் மட்டும் 600 பேர் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், இந்த நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக அகால மரணங்களின் எண்ணிக்கை சுமார் 6 ஆகும். இந்த சராசரி எண்ணிக்கை கடந்த ஆண்டு 11 ஆக அதிகரித்து இருந்தது. இந்நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவை இவ்விடயத்தில் சில பொறுப்பை ஏற்க வேண்டும். முறையான போக்குவரத்து வசதிகள் இருந்தால், தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொது வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் இருப்பார்கள் இல்லையா. ஆனால், பேருந்துகள் மற்றும் ரயில்களில் தேவையில்லாமல் அடைத்து அவதிப்படுவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்?

பாலித்த தேவரப்பெரும அரசியலில் ஒரு எடுத்துக்காட்டு

நம் நாட்டு மக்கள் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது பெரிய வெறுப்போடு இருக்கின்றனர். அந்தளவுக்கு நம் நாட்டு அரசியல் சீரழிந்து விட்டது. கடனில் மூழ்கியிருந்த சாமானிய மக்கள் மீள முடியாத அளவிற்கு எமது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்சென்றவர்கள் இந்நாட்டு அரசியல்வாதிகள். இவ்வாறான பின்னணியில் தான் கடந்த காலங்களில் பெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று பாராளுமன்றத்தில் 225 பேரையும் நிராகரிக்க வேண்டும் என்ற கருத்து மக்களிடையே நிலவியது. 

12 April 2024

நுகர்வோருக்கு எச்சரிக்கை! 90% உணவுப் பொருட்கள் பாவனைக்கு தகுதியற்றவை

இலங்கை சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் 90% க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் பாவனைக்கு தகுதியற்றவை என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க.

அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட நாம் தினமும் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனங்களை கலப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், வெண்ணெய் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்குகளில் வெண்ணெய் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

09 April 2024

எதை நாம் புத்தாண்டில் விட்டுவிடுகின்றோம்?

தமிழ்ப் புத்தாண்டு சம்பிரதாயங்கள் எந்தவொரு அரசாங்கத்தாலும் விதிக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஒன்று அல்ல, மாறாக அந்த சமூகத்தால் பேணப்படும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சுற்றுச்சூழலை விட்டும், சடங்குகளை விட்டும், உறவுகளை விட்டும் விலகி வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் உச்ச நிலைக்கு நம் சமூகம் இன்று வந்துவிட்டது. இன்று நெருக்கடி பொருளாதாரத்தில் மாத்திரம் இல்லை நமது சிந்தனையில் உள்ளது.

கடந்துவந்த நமது வாழ்க்கையின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களைத் திரும்பிப் பார்ப்பது, கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டதா என்று சிந்திப்பது, அதுபோல இன்னும் முன்னே உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்குத் தயாராக ஆசிகளைப் பெறுவதையும்; புத்தாண்டின் சாராம்சம் என்று அழைக்கலாம். 

05 April 2024

களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுமா?

 அறிமுகம்

முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.

தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல

சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!

03 April 2024

சித்திரை வருட வோணஸ்: மூன்றுவேளை உணவு

பல விடயங்கள் நமக்கு பழக்கப்படுத்த வேண்டியிருக்கு. இலங்கை வரலாற்றில் ஒரு கிலோ பம்பாய் வெங்காயம் ரூ. 600க்கு விற்கும் முதல் சித்திரை வருடம் இதுவாகும். அத்துடன் இலங்கை வரலாற்றில் இலங்கையர்கள் அதிகளவு மின்சாரக் கட்டணம் செலுத்தும் வருடம் இதுவாகும். இதுதவிர, இலங்கை வரலாற்றில் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட முதலாவது சித்திரை வருடம் இதுவாகும், அடுத்த தமிழ் சிங்களப் புத்தாண்டு வரை மக்கள் தங்கள் வாழ்வை இழுத்துச் செல்லும் வலிமை இருந்தால், அது மிகவும் அதிர்ஷ்டமானதுதான்.

வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்துவிட்டது என்று மீண்டும் சொல்கிறோம். எப்படி சாப்பிட்டோம் என்பதை நமது அடுப்பு அறியும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அடுப்பில் வைக்கப்படும் உணவுப் சமையல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. 

02 April 2024

தேத்தாத்தீவின் அழகு தனி அழகு

தேத்தாத்தீவின் அழகு தனி அழகு- அங்கு

தெள்ளு தமிழ் கலைகள் வந்து பழகு


கரை சூழ்ந்த கிழக்கெல்லாம்
கடலலை முழங்கும்
விரைந்தோடும் மீனவர்க்கு
முத்தள்ளி வழங்கும்

ஆதவன் வருகை கண்டு
அடம்பன் கொடி பூக்கும்
அயல் எல்லாம் வெற்றிலை
செல்வங்கள் சேர்க்கும்




மட்டுநகர் வாவி மகள்
மேற்கே வளைந்தோடும்
மணல் வயலில் வெள்ளாமை
செழிப்பாய் விளைந்தாடும்

செல்வமாய் குடியிருப்பில்
சேர்ந்தோங்கும் உழவு
சில்லென்ற குளங்களிலே விளையாடும் நிலவு

பாதாளத்தில் செல்லும் நாட்டின் நிலமை: பொருளாதார எழுச்சிக்கு வழியாகுமா?

வாழ்வினை கொண்டு நடாத்த முடியாமல் இன்று எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் துன்பப்பட வேண்டியுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்களின் வருமானம் போதாது. சொந்தப் பணத்தைக் கூடக் கொண்டு வாழ்க்கைப் போரில் கடைசி ஆட்டத்தை ஆடும் மக்கள், இனி வரும் காலங்களில் எப்படி சுகம் காணப்போகின்றார்கள். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் உணவு வழங்க முடியாத காரணத்தினால் விஷம் அருந்தியதாக பத்திரிகை செய்தியொன்று அண்மையில் வெளியாகியுள்ளதனைப் பார்த்தேன்.

பல நாட்களாக தனது குடும்பம் தினமும் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வருவதாக இந்த தந்தை கூறுகிறார். மேலும் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால், தனக்குத் தானே விஷம் கொடுத்து இறக்க முடிவு செய்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியின் மூலம் நமது நாடு விழுந்துள்ள பொருளாதாரக் குழியின் மிகவும் சோகமான நிலை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த நிலை திஸ்ஸமஹாராம தந்தைக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றார்கள் நம் நாட்டில் என்பதனையே காட்டுகின்றது.

கலைந்த பல்கலைக்கழக கனவு!

இலங்கையின் கிழக்கில்; அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தான் கார்த்திக்.  சிறு வயதிலிருந்தே கல்வியில் ஆர்வம் அதிகம். பாடசாலைப் படிப்பை முடித்ததும், உயர்கல்வி கனவுடன் கொழும்பில் உள்ள ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான்.  பல்கலைக்கழக வாழ்க்கை அவனுக்கு புதிய அனுபவங்களை வழங்கியது.  புதிய நண்பர்கள், புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள் என அவன் உலகம் விரிந்தது.

பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்ட கல்வி அவனை ஒரு புதிய மனிதனாக மாற்றியது. ஆதன் மூலம் சமூக பிரச்சனைகள் குறித்து அவனுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.  சமூக நீதிக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வளர்ந்தது.  பல்கலைக்கழகத்தில் கற்ற அறிவை சமூகத்திற்கு பங்களிக்க பயன்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டான்.