ADS 468x60

12 May 2019

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

இது காலத்துக்குப் பொருத்தமான ஒரு கூற்றாகும். அதாவது 'ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்' என்பது இதனது பொருள். இது தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறும் சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு சாராம்சம். நமக்கு தெரியாமல் அரசியலில் தவறு செய்தாலும் அதனை அறத்தின் வழியில் தண்டிக்கப்படும் அதனால் மன்னனும் மதுரையும் எரிந்து சாம்பராகியது. ஆனால் தெரிந்து, திட்டமிட்டு நமக்கெல்லாம் தெரியாமல் மக்களை மடையர்களாக்கி அரசியலை பாவித்து அடித்து நொறுக்குபவர்களும் இருக்கின்றனர். அவர்களை அவர்கள் செய்த ஊழ்வினை கைவிடாது. இந்த கண்ணகி விழாக்காலத்தில் இவற்றை தொடர்புபடுத்தி இந்த கட்டுரையை வரைகின்றேன்..

அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது.  உயிர்களைக் காப்பது.

மக்கள் தவறு செய்தால் அரசி தண்டிக்கும் அந்த அரசே தவறு செய்தால் அவர்களுக்கு மேல் இன்னோரு அரசு கிடையாதே. ஆனால் ஐனநாயகப் பரப்பில் இவர்கள் மக்களால் தண்டிக்கப்படலாம். ஆந்த ஆயுதம்தான் வாக்கு.

அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ?  அரசன் தவறு செய்தால் அவனை யார்   தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும்.  இதை எல்லா சட்ட சபையிலும், பார்லிமென்ட்டிலும், நிறுவனகளின் தலைமை இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை. என்பதனை இன்று பார்க்கின்றோம்.

நல்ல அரசு இன்னும் இருக்கின்றது, தான் பொறுப்பு வகித்த பதவிகளை பொறுப்புக்கூறத் தவறியமைக்காக தமது பதவிகளைத் துறந்த அரசியல்வாதிகளை இப்போதும் காணுகின்றோம்.

ஆனால் அரசியலில் மக்களுக்கான நல்லாட்சியினை வளங்கவேண்டுமே தவிர அதில் இருந்து விலகிவிடக்கூடாது. ஆனாலும் உலக வரலாற்றில் பல பல காரணங்களுக்காக பதவி விலகி இருக்கின்றனர்.

பல அரசியல்வாதிகள் கொலை, கொள்ளை, போதைவஸ்;த்து, பாலியல் பலாத்காரம், பெண்களுடனான தவறான தொடர்பு என்பன காரணமாக பதவி விலகி இருக்கின்றனர். சிலர் தமது அரசியல் தலைமையை கொண்டு நடாத்தமுடியாமல் பதவி துறந்துள்ளனர். இது அவர்களின் அரசியல், மனச்சாட்சிக்கு பயந்தான ஆட்சி.

அதேபோல் எத்தனை கோடிகளை கொள்ளையிட்டாலும், நேராகவும் மறைமுகமாகவும் எத்தனை உயிர்கள் இறந்துபோகக் காரணமாக இருந்தவர்கள் இன்னும் அரியாசனம் விட்டகலாத ஆசையுடையவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் இன்னும் நம்புகின்றோம், ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும். அதனால்தான் காலம் பதில் சொல்லும் என காத்துக்கிடக்கின்றோம்.

இன்றய அரசியல் பொருளாதார சமூக விழுமிய மாற்றங்களுக்கு ஏற்ப சிலம்பில் கூறப்பட்ட சில செய்திகள் பொருந்துகின்றதென்பதை நாம் மறந்து போகின்றோம்.

மக்களது பூர்வீக நிலங்களை பணத்திற்கும் சுய நலத்திற்கும் கையகப்படுத்தி அவற்றை நச்சுக்கொண்ட காடாக மாற்ற நினைக்கும் நாசகாரச் செயலின் பின்னால் உள்ள அரசியல் ஒருபோதுமே நன்மையைத் தராது.

அடிபட்ட சமுகத்தின் நலிவுறுதன்மையை பொருளாதார லாபமாக மாற்றும் செயல் அரசியல் பலத்தால் பலிதமாகலாம் ஆனால் ஆண்டவன் கட்டளை, நீதி பிழைக்காது.

தீர விசாரிக்காது தண்டனை கொடுத்த பாண்டியன் அவப்பெயரோடு அரியாசனத்திலேயே மாண்டுபோனான். அவனைக் கட்டிய குற்றத்திற்காக கோப்பெருந்தேவியும் உடன் மாண்டுபோனாள். அவன் அரசாண்ட குற்றத்திற்காக மதுரை நகரமும் பத்தினிப் பெண்ணின் சாபத்துக்கு இரையாகித் தீயில் கருகிப் போனது. இப்படித்தான் இனி பல சிறப்பான தரமான சம்பவங்களை நாம் பார்க்கப்போகின்றோம்.

அன்று தமிழர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டதும், இன்று அப்பாவிகள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டுவருவதும் துன்புறுத்தப்பட்டுவருவதும் சமீபத்திய மிக மோசமான அரசியல் பிழைகளாகும். அறம், இதற்கான பதிலை சார்ந்தோருக்கு உணர்த்தும் நாள்கள் வெகுதூரமில்லை!

0 comments:

Post a Comment