ADS 468x60

31 July 2022

எமது மக்கள் சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய சூழலை உடனடியாக உருவாக்க வேண்டும்.

இன்று பயங்கரமான ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளோம். வெளிநாட்டுக் கடனைப் பெற்ற வரலாறு நமது நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போது நமது வெளிநாட்டுக் கடன் 57 பில்லியன் டொலர்களாக உள்ளது. இதில் 47 வீதம் சர்வதேச நாணய நிதியத்திடம்; இருந்து பெறப்பட்டது. சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம். சீனா மற்றும் ஜப்பானில் இருந்து பெற்ற கடன் தொகை 20 வீதமாக உள்ளது. ஆனால் இயலாமை காரணமாக நாடு தற்போது, கடனை திருப்பச் செலுத்தத் தவறிவிட்டது, அதனால் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடன் தொகை 7 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டொலர் கடனை திரும்ப அடைக்க வேண்டும். இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடன் தொகையும் பெறப்பட்டு ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து குறுகிய கால கடன் வசதிகளும் பெறப்பட்டுள்ளன. இந்தக் கடன்கள் எதுவும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்பாட்டிற்கு பங்களித்ததாகத் தெரியவில்லை.

24 July 2022

நாட்டை மீட்டெடுக்க நல்ல மூன்று முன்மொழிவுகள்

இன்று நம்மில் பலர் புத்திஜீவிகள், படித்தவர்கள், அரசியல்வாதிகள் எனச் சொல்லிக்கொண்டாலும் ஒழுங்கான தெழிவான எந்த நல்ல கருத்துக்களையும் இந்த நாட்டை மீட்டெடுக்க அவர்களால் முன்வைக்கமுடியாத ஒரு நிலைமைதனை காணலாம். உண்மையில் அந்த வகையில் இன்றய நெருக்கடிக்கு பல ஆக்கபூர்வமாக கருத்துக்களை தொகுத்து தர விரும்புகின்றேன். இக்கட்டுரையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான சிறந்த வழிகளை இங்கு பரிந்துரைகளாகத் தர விரும்புகின்றேன். 

அறிமுகம்

இலங்கைத் இதுவரை கண்டிராத மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளது. அது சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, மேலும் நாட்டின் 22 மில்லியன் மக்கள் பல மணிநேர மின்வெட்டு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள்.

இன்று பேச்சால் அல்ல செயலால் வேலையை காட்ட வேண்டிய நேரம் இது.

நாம் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு அயல் நாடுகளுக்குக் கூட ஜீரணித்துக்கொள்ள முடியாமல் பலர் முன்வந்து உதவுகின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வெட்கப்படவேண்டியதே. அனைத்து இலங்கையர்களும் இப்போது மிருகத்தனமான ஆட்சியின் சகாப்தத்தின் கடைசி சில அத்தியாயங்களை கடந்து செல்கின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துன்பப்படும் இந்த நாட்டு மக்களை விடுவிக்க ஒரு புதிய அரசியல் நகர்வினை எடுக்க வேண்டும். இனி பாராளுமன்றத்தில் அது நடக்கும் என நம்புகிறோம்.

எமது தமிழ் தலைவர்கள் பலரிடம் வீண்பேச்சை அதிகம் பார்க்கின்றோம். செயற்பாட்டை பார்க்கவே முடிவதில்லை. எனக்குப் புரியவில்லை 13, 14, 20, 21 எந்த வகையில் பசிக்கிற வயிற்றுக்கு பால் வார்க்கும், தொழில் இல்லாதவர்க்கு தொழில் வழங்கும், ஆகவே அரசியல் செய்வதற்கு நடந்வற்றையே வைத்து எத்தனை நாளைக்கு நாடகம் நடத்துவது? நடக்கப்போவதை யாராவது சிந்திக்கின்றார்களா என்றால் தெரியவில்லை. எல்லோரும் சட்டம் பேசுகின்றார்கள், சட்டவாக்கம் பற்றிப் பேசுகின்றார்கள் அது எந்த வகையில் பொருளாதார, உற்பத்தி, தொழில்வாய்ப்பு, வர்த்தகம் பற்றிய நெருக்கடியில் ஊசலாடும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பதே மக்கள் வியப்போடு பார்க்கும் ஒன்று.

23 July 2022

பாசிசப்போக்குள்ள மக்களோ அரசோ எந்த நாட்டையும் முன்னேற்றிவிடமுடியாது.

நாட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, அன்றாட இலங்கையர்களின் பொருளாதார நிலைமைகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பொருட்கள் அதிகரித்த முறையில் விலை உயர்ந்தது மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்வதும் கடினமானது, அத்துடன் மேலும் பணவீக்கம் உயர்ந்தது. புதிய அரசாங்கத்தின் இறக்குமதி தடைகள் பல தேவையான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்காமற் போயுள்ளன.

இந்தநிலையில் ஜூலை 9 அன்று ஜனாதிபதியின் மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்வதில் இருந்து பிரச்சினை தொடங்கியது. அரசாங்க பாதுகாப்புப்படையினர் அவர்களை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களைச் சுற்றி விரட்டியடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது மக்களை கொதிப்படையச் செய்தது. இதனைத்தொடர்ந்து பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி எpர்ப்பை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி வெளியேறினார்;. இதனைத்தொடர்ந்நு பிரதமர் மாளிகையும் கைப்பற்றப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டு மக்கள் ம்தியில் மாத்திரமல்ல உலகத்திலேயே ஒரு கலக்கத்தினை தோற்றுவித்தது.

22 July 2022

உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அரசியல் செய்ய நாடே இருக்காது

நாம் பணவீக்கம் பற்றி அதிகம் பேசக் கேட்டிருக்கிறோம். இன்று பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொருளாதார பணவீக்கம் பற்றிய பல தகவல்களை அடிக்கடி வெளியிடுகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களில் பொருளாதார பணவீக்கம் என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இந்த பணவீக்கம் எனும் சமுத்pரத்தில் மூழ்கும்போது அதன் கடுமையான விளைவுகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. அதுதான் இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பணவீக்கத்தின் யதார்த்தம்.

20 July 2022

புதிய ஜனாதிபதி இவற்றைக் கருத்தில் எடுப்பாரா?

பல நாள் இழுபறியில் இருந்து மீண்டு இப்போது ஒரு மாற்றத்தினை இந்த நாடு கண்டுள்ளது. அது வேறொன்றுமல்ல, இன்று இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நாள். முன்னதாக வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதி தெரிவு இன்று காலை இடம்பெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரில் ரணில் 134 பா.ம வாக்குகளால் வெற்றியீட்டி இன்று முதல் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருப்பார். ஆகவே இன்றிலிருந்து அவர் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் தலைவராக செயற்பட வேண்டும்.

17 July 2022

இன்று நமக்கு இருக்கும் ஒரு துரப்புச் சீட்டு! பயன்படுத்துவார்களா!

இலங்கையில் உருவான பாரிய நெருக்கடியை கையாள முடியாத அரசுக்கு எதிரான போராட்டம் படிப்படியாக வளர்ந்து கடந்த ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார். அத்தருணத்தில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்தனர். ஆதற்குப் பின்னர் ஜனாதிபதியும் இந்த நாட்டையே விட்டு ஓடிவிட்டார். அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் சிங்கப்பூர் சென்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவர் அவரது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறினார். ஆதன்பின்னர் கடந்த வியாழன் (14) திரு.கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்திருந்தார். கடிதத்தின் துல்லியத்தன்மையை மறுபரிசீலனை செய்த பிறகு அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என்று சபாநாயகர் அன்று தெரிவித்தார். 

15 July 2022

இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்!

ஓவ்வொரு பிரச்சினையினை எதிர்நோக்கும்போது ஒவ்வொரு நாட்டினை, நிறுவனத்தினை மற்றும் நபரினை நோக்கி பிச்சை எடுக்கும் நிலைக்கு இலங்கையை கொண்டு நிறுத்தியுள்ளனர். அதனால் நாம் அந்த நிபந்தனைகளைக்கேட்டு இந்த நாட்டில் வாழ்வது ஒரு அவமானமாகநே நினைக்கத் தோணுகின்றத. நாம் நம்பி வாக்களித்த தலைவர்கள். அந்த வகையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினை படுபாதாளத்தில்; இருந்து வெளிக்கொண்டுவர, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள பில்லியன் கணக்கான டொலர் கடன் நிவாரணம் தொடர்பில் இலங்கை பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. 

நாட்டின் சாமானிய மக்கள் இப்போது வேண்டுவது எது!

இன்று மக்கள் பல பிரச்சினைகளோடு வாழவில்லை, இறந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த மக்கள் நம்பி வாக்களித்த தலைவன் கைவிட்டு சென்றதால் அனாதரவாக நிற்கின்றனர். இதனை இன்னும் சிலரது இராஜபோக வாழ்க்கைக்காக அரசியல் செய்ய முற்படுகின்றனரே தவிர, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு யாரும் முடிவுகட்டுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

அடுத்ததாக அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் போரில் நாட்டின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது மும்முனைப் போராக உள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் வேட்புமனுக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

13 July 2022

அரசியலமைப்பா மக்கள் தீர்ப்பா

அனைவருக்கும் தெரிந்தவரையில்;, இந்த நாடு மிகவும் நெருக்கடியான தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இந்த ஒரு நெருக்கடியான, புரட்சிகரமான ஒரு இறுதித் தருணத்தில் அனைத்துத் தரப்பினரும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். நமது அக்கறை மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பொது சட்டம் மற்றும் அரசியலமைப்பு பற்றியதாக இருக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்றத் தவறியதால்தான் தற்போதைய மக்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியது என்பது மறுப்பதற்கில்லை அதை ஒப்புக்கொள்ள வேண்டும். எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் எரிபொருள் வரிசை காணப்பட்டது. இதற்கிடையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை கிட்டத்தட்ட முற்றிலுமாக முடங்கியது.

கவனமாக வெல்ல வேண்டிய ஒரு அரசியல் போர்.

எது எவ்வாறு நடந்தாலும், உணர்சி அரசியலுக்கு அப்பால் சிந்திக்கவேண்டிய தருணம் இது. அந்தவகையில் இந்த இக்கட்டான நேரத்தில் நமக்கு மிக முக்கியமான காரணியாக கருதப்படவேண்டியது அரசியலமைப்பு. அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படை சட்டம். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்றால்; அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் தற்கால நாகரீகத்திலிருந்து பின்னோக்கி நகர்வோம். அரசியலமைப்பை கிழிக்க வேண்டும், ஜனநாயகத்தை நசுக்க வேண்டும் என்று யாராவது கூச்சலிட்டால்; அதை எப்படி ஏற்பது. இறுதியாக அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் பரிமாறப்பட்டு அதிகாரம் கைவிடப்பட வேண்டும் என்பதை நாம் நன்கு விளங்காமல், கல்லாதவர்போல் இல்லாதவற்றை சமுகவலைத்தளங்களில் பதிவிடுவது வேடிக்கை.

முதலாளித்துவம் சோசலிசம் இவற்றுக்கப்பால் ஜனநாயகம் என்று ஒரு சக்தி உள்ளது அது மிகவும் ஆபத்தானது.

மிக மிக ஆபத்தான முறையில் கையாளக்கூடிய இரண்டு மாபெரும் சக்தி உலகில் உள்ளது. ஒன்று மக்கள் சக்தி மற்றது குடிநீர் இவை இரண்டும்தான் மிகவும் ஆபத்தான முறையில் கையாளக்கூடியவை. ஜனநாயகம் பலவீனமாக இருக்கும் இடங்களில் மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தை கவிழ்க்கிறது. 

அவ்வாறு ஆட்சி மாற்றத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், நூறு இருநுர்று அல்லது இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பேர் கூட கொல்லப்பட வாய்ப்புள்ளது. அதேபோல குடிநீர் விநியோகத்தில் விஷம் கலந்தாலும் இதேதான் நடக்கும். அப்போது ஆட்சி மாறாமல் விஷம் கலந்த தண்ணீரைக் குடித்து ஏழாயிரம், எட்டாயிரம் பேர் இறக்கலாம். நாட்டில்; தற்போதய அரசியல் ஒரு குழப்பமாக உள்ளது. 

10 July 2022

இத்துடன் முடியவில்லை, இது அரசியலின் அடுத்தபடி!

எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக அறியப்படும் ஜூலை 09 போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அன்றிரவே ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை ஜூலை 13 பதவி விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக பதவியை இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

07 July 2022

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள நாம் இன்று கருத்தில்கொள்ளவேண்டியவை!

நம்மில் பலர் இன்று நெருக்கடியென்றால் என்ன என சொல்லாமலே அனுபவித்து அறிந்துகொண்டிருக்கின்றார்கள். நான் உட்பட யாரும் கண்டிராத பதிய ஒரு இறுக்கத்துள் வாழ இன்று எமத மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றார்கள். அதனால் இன்று எமது தேசத்தில் பொருளாதார நெருக்கடி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதி உச்சத்துக்கு வந்துள்ளது. அதிலிருந்து விடுபடுவது ஒரு சாதாரண விடயமல்ல. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒருபுறம். மறுபுறம், எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணி நம்மிடம் இல்லாத நிலை. இவ்வாறான இந்த அபாய சூழ்நிலையிலிருந்து வெளியேற வழி இல்லை. அதற்கு என்ன செய்யலாம்? இதை ஒரு பொருளாதார ஆய்வாளன் என்ற நிலையில் இருந்து நோக்க விரும்புகின்றேன்.

06 July 2022

இன்பமே சூழும் இன்பா நீ எங்கே!

ஒரு மாசத்தின் முன் நண்பர் இன்பராசனை சந்திக்கக் கிடைத்தது.
'சீலா எல்லாம் கடவுள் செயல், அவருடைய கையில் ஒப்படைத்துள்ளேன் என் பாரத்தை' என கவலையுடன் தெரிவித்தார். இருப்பினும் பழய நினைவுகளை நான் அவனுடன் இருந்து மீட்டும்போது அவன் அகமகிழ்ந்து, முகம் மலரக் கண்டேன். இறுதியாக ஒன்று சொன்னான், 'மற்றவர்கள் என்னைப் பார்த்து கஷ;டப்படுவதை நான் அனுமதிப்பதில்லை' என என்னிடம் கூறினான் அதனால் இவன் இவ்வாறு நோய்பட்டிருப்பதனைக்கூட பலர் அறிந்திருக்கவில்லை. வித்தியாசமான ஒரு மனிதன். பிறந்த ஒவ்வொருவரும் இறக்கவேண்டும் என்கின்ற சித்தாந்தத்தினை நன்குணர்ந்த இவர், தற்பெருமை இல்லாமல் பிறருடன் சகஜமாகப் பழகும் பாங்குதான் பலரை கவர்ந்த ஒரு முக்கிய விடயம்.

03 July 2022

உணவு நெருக்கடிக்கு உகந்த தீர்பபு

பொதுவாக ஒரு நாட்டில் உணவு கிடைப்பது பற்றிய பிரச்சினை பரந்த அளவில்; பேசப்பட்டால், உணவுப் பாதுகாப்பை அடைவதை நாம் இரண்டு முக்கிய வழிகளின் மூலம் நோக்க முடியும். ஒன்று, நாட்டின் விவசாயத்திற்கான பங்களிப்பை அதிகபட்ச நிலைக்கு கொண்டு வந்து நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பது. அடுத்தது போதிய விளைச்சல்; இல்லை என்றால் வெளிநாட்டில் இருந்து மக்களுக்கு உணவு கொண்டு வருதல் அதாவது உணவை இறக்குமதி செய்வது.

ஆகவே நாட்டிற்குத் தேவையான உணவை விவசாயத்தின் மூலம் வழங்கக்கூடிய நிலையில் இருக்கின்றோமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் அரிசி உற்பத்தியை அதிகரித்து அரிசியில் நாட்டை தன்னிறைவு நிலைக்கு கொண்டு வருவதற்கு அதிக கவனத்தினைச் செலுத்தியது.

பொருட்களின் விலைகள் எவ்வளவோ உயர்ந்தாலும் மக்களின் சம்பளம் ஒரு சதம் கூட உயரவில்லை.

தேசிய நுகர்வோர் விலைச்; சுட்டெண் வெளியிட்ட மே மாதக் அறிக்கையில், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் மாதத்தில் 57.4% வீதத்தில் இலிருந்து 80.1% வீதமாக உயர்ந்துள்ளது. போக்குவரத்துக்கான பணவீக்கம் 128% வீதமாக உள்ளது. இது கடந்த மாதத்திற்கான இலங்கை மக்களின் நிலைமையையே மேற்கூறியவை குறிப்பிடுகின்றன.

இந்த மாதம் நிலைமை மிகவும் வித்தியாசமானது. ஆனால் தற்போது எதற்கும் விலைக் கட்டுப்பாடு இல்லை. பேருந்தின் முதல் பிரிவில் குறைந்தபட்ச பேருந்தின் கட்டணம் 40.00/= நாற்பது ரூபாய். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 9.00/= ஒன்பது ரூபாயாக இருந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இதன் விலை ரூபாய் 1.50/= ஒன்று ஐம்பது. 

அப்போது ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய். ஆதன் பின் 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம் இரண்டு வருடங்களின் பின்னர் வீழ்த்தப்பட்டு சந்திரிகா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். சிறிது காலம் கழித்து, அரிசி குறைந்தபட்சம் கிலோ அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் சந்திரிகாவின் அரசாங்கம் கவிழ்ந்திருக்கும். 

02 July 2022

பொதுப்போக்குவரத்தின் முக்கியம் இன்று உணரத்தொடங்கியுள்ளனர்.

 ஒரு கலகம் பிறக்கும்போதுதான் நியாயம் கிடைக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து. அந்தவகையில், நீண்ட வரிசைகள், காத்திருப்புக்கள், குழுக்கலவரங்கள், இறப்புக்கள் இன்னும் பல பாதிப்புக்கள் நாளாந்தம் நொடிக்கு நொடி நாட்டில் தலைதூக்கிவருகின்றன. இந்தப் பின்னணியில், இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியின் முக்கிய புள்ளி எரிசக்தி அல்லது எரிபொருள் தட்டுப்பாட்டினால்தான் என்பதை நாம் கடைசி வரை அறிந்திருக்கவில்லை. இன்று எரிபொருள் நெருக்கடியால் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பெறமுடியாத நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாள் எரிபொருள் தீர்ந்து விட்டால் இப்படி ஒரு விபரீதம் ஏற்படும் என்று நாங்கள் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை அன்று.