ADS 468x60

12 May 2012

மட்டக்களப்பில் பிள்ளைகளை பெற்றோர்கள் சுமையாக நினைக்கின்ற நிலை

'எம்  எதிர்காலம் கல்வியின் எதிர்காலத்தினைப் பொறுத்தே அமையும்' என நாம் அடிக்கடி சொல்லி வருகின்றோம்;. இந்நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தினை இட்டு பெருமையடைகிறார்கள், இருந்தபோதும் எம்மக்கள் கல்வியறிவின்மையால் ஆண்டுதோறும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது பெரும்பாலும் புரிவதில்லை. காலம் செய்த கோலத்தால், குறிப்பாக தமிழ் இனம் கல்வியை துலைத்து விட்ட நிலையில் இன்று சமுக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மிகப் பின்னடைந்து இருக்கின்றமை வேதனையே. இருப்பினும் இன்று படிப் படியாக இவற்றை உணரத் தொடங்கி இருக்கும் எமது உறவுகள் கை கொடுக்க தொடங்கியிருப்பது வரவேற்க்கத்தக்கதே! 

மட்டக்களப்பு ஒரு இருண்ட யுகம் போல், மாவட்டத்தின் மேற்கு புறங்களின் எல்லை கிராமங்கள் இன்னும் பின்தங்கி காணப்படுகிறது. அதிகஸ்ட பிரதேசமாக வரையறுக்கப்பட்ட படுவான்கரை  பிரதேசத்தில் அவர்களுடைய பொருளாதாரத்தை போல் கல்வியும் நலிவடைந்தே காணப்படுகிறது. இற்றைக்கு மூன்று தசாப்தத்திற்கு முன் களைகட்டியிருந்த மக்களுடைய வாழ்க்கை இன்று பல காரணங்களால் பின்னடைந்து காணப்படுகிறது. இவ்வாறான தேவை நிறைந்த கிராமங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு உரிய நேரத்தில் உதவிகளை வழங்கி ஈடேற்றம் செய்வது எமது மண்ணில் பிறந்த அணைவரதும் கடமையல்லவா!
வவுனதீவு பிரதேசம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினுள் காணப்படுகின்றது. இது இம் மாவட்டத்துக்குள்ளேயே கல்வியில் மிகவும் பின்தங்கிய இடமாகும். இங்கு காணப்படுகின்ற அநேகம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் மந்தமாகக் காணப்படுவதுடன் இங்குள்ள மக்களும் மாணவர்களும் கல்வியில் அக்கறையற்றவர்களாகவும், நாட்டம் குறைந்தவர்களாகவுமே காணப்படுகின்றமையை உணர்ந்து, இருநூறுவில் பாடசாலையில் கல்விகற்க்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பான சப்பாத்துக்களை கனடா வாழ் எம் உறவுகளின் சிடாஸ் அமைப்பின் நிதி உதவியுடன் 03.03.2013 அன்று வழங்கி அவர்களை ஊக்குவித்து உதவினோம்.. 

இக்கிராமங்களில் காணப்படுகின்ற இன்னும் பல பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மையாகும், இப் பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்ற அநேகம்பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்றனர்.  இதனால் இவர்களது பெற்றோர்கள் இந்த குழந்தைகளை கல்வி கற்க்க வைக்க முடியாமல் போய்விடுகின்றது. அத்துடன்; அவர்களது பிள்ளைகளை பெற்றோர்கள் பெரும் சுமையாக நினைக்கின்ற நிலை இங்கு உருவாகி வருகிறது.

சிறு வயதினிலேயே இச்சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதாலும், வெளிநாடுகளுக்கு போலி வீசா முடித்து உழைப்புக்காக அனுப்புவதனாலும் அல்லது அவர்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பதன் மூலமும் பெற்றோர்கள் தங்களது சுமையை இறைக்கி வைக்க நினைக்கின்றனர். இவற்றால் இங்குள்ள குழந்தைகளின் கற்றல் செயற்ப்பாடு பாதியினிலேயே இடைநிறுத்தப்படும் பரிதாபம் கூடுதலாகக் காணப்படுகின்றது என ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

இன்னும் ஒன்று, அநேக பாடசாலைகள் இம்மகள் வாழுகின்ற இடங்களில் இருந்து தூரத்தில் அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 5ம் ஆண்டுகளுக்கு மேல் மாணவர்கள் கல்வி கற்ப்பதற்க்காக இன்னும் தொலைவில் செல்ல வேண்டி இருப்பதனால் தங்களது கல்வியை அநேகம்பேர் பாதியில் இடைநிறுத்தும் துர்ப்பாக்கியம் அதிகமாக் காணப்படுகிறது.

இதனால் இவர்கள் பாடசாலைக்கு செல்லுதல் என்பது மிகவும் கஸ்ட்டமான விடயமாகவே உள்ளது. பெரும்பான்மையான பெற்றோரிடம் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க்கவேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லை. கல்வி என்பது பிள்ளைகளின் அடிப்படை உரிமை என்பதனை பெற்றோர்கள் அறிய மறுக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் குறிப்பாக பெண் வர்க்கத்தினர் எல்லா வகையிலும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன்  மட்டக்களப்பின் நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கை முறைக்கும் கிராமப்புற வாழ்க்கை முறைக்கும் நிறையவே இடைவெளி காணப்படுகிறது. இதற்க்கு பிரதான காரணம் அவர்களுடைய கல்வி மற்றும் பொருளாதாரமாகும்.

எனவே எமது சொந்தங்களை அறிவு ரீதியாக பலப்படுத்துவதற்க்கான ஏற்ப்பாடுகளைச் செய்வதும், இதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதுமே நாம் ஒன்று கூடிச் செய்யவேண்டிய உதவியாகும்.
இந்த நிலையினை எங்கள் குழுமத்தினர் நன்கு எடுத்துரைத்ததற்கு இணங்க கனடா வாழ் எம் தமிழ் உறவுகளின் கூட்டு முயயற்ச்சியில்; சிடாஸ் அமைப்பினூடாக இரண்டாம் கட்டமாக இருநூறுவில் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பைகளும் சப்பாத்துக்களும் கொடுத்து உதவினோம். 

உண்மையில் இந்த அமைப்பினர் சரியான நேரத்தில் இவ்வாறான உதவியை சரியான தேவை அறிந்து வழங்குவது, எமது மாணவச் செல்வங்களின் கல்வியில் மற்றும் அவர்களது மனோநிலையில் முன்னேற்றத்தினை ஏற்ப்படுத்தும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. எனவே கனடா வாழ் எம் உறவுகள் இந்த மாணவச் செல்வங்களின் மறுமலர்ச்சிக்காக சிடாஸ் அமைப்பினூடாக வழங்குகின்ற சிறு உதவிகூட இங்குள்ள ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வியில் பாரிய படிக்கல்லாக இருக்கும் என்பதனை குறிப்பிட விரும்புகிறேன்.

பணிப்பாளர் திரு பாஸ்க்கரன் அவர்கள்
ஆகவே மேலே குறிப்பிட்ட பின்னடைவுகளில் இருந்து மீட்சி பெறச் செய்யும் உபாயமாகவே நாங்கள் இந்த உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளோம். 'நம் சந்ததிக்கு இருக்கும் ஒரே வழி கல்வியைக் கட்டிக் காப்பதுதான், இது கை நழவிப் போனதனால் தான் பல சீர்கேடுகளுக்கு எம் சமுகம் முகம் கொடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளது. இது போன்ற அதி கஸ்ட்டப் பிரதேசத்தினில் வாழுகின்ற மாணவர்களுக்கு சிரமம் பாராமல் சேவை செய்யும் ஆசிரியர்களை நான் மனமாரப் பாரட்டுகிறேன். அது போல் இவ்வாறு இக்கட்டான நிலையை உணர்ந்து சரியான இடத்தினை தெரிவு செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு இந்த நல்ல காரியம் செய்துகொண்டு வரும், உறுப்பினர்கள் எல்லோரையும் இந்த மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். அது போல் சிடாஸ் அமைப்பினர் உண்மையில் நல்ல ஒரு வேலைத்திட்டத்தினை இந்த சுறுசுறுப்பான குழுமத்துடன் சேர்ந்து உதவுவது பாராட்டத்தக்கது. இவர்களிடம் என்னையும் ஒரு உறுப்பினராக சேருங்கள் என்று வேண்டுகிறேன்' என அல்லும் பகலும் பாராமல் இந்த மக்களின் மாற்றத்தில் ஏற்றங்காணத் துடிக்கும் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு பாஸ்க்கரன் அவர்கள் கருத்துரைத்தார்.

வைத்தியக் கலாநிதி திரு சுகுணன் அவர்கள் 
'நீங்கள் எல்லோரும் பெரிய அதிகாரிகளாக வரவேண்டும். வந்து இந்தப் பகுதியில் வைத்தியராக, விரிவுரையாளராக, அதிபராக எல்லாம் நீங்கள் இன்னும் உங்களைப் போன்றவர்களை உருவாக்க வேண்டும். உங்களை இத்தனை தொலைவில் இருந்து ஏன் பார்க்க வந்துள்ளோம்! நீங்கள் தான் நாளைய தலைவர்கள் உங்களை நாங்கள் எடுத்தேத்த வேண்டிய பொறுப்பு எமதாகும். அத்துடன் நீங்கள் ஒவ்வொருவரும் சுகாதாரமான பழக்கவழக்கங்களை கைக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த உதவியினை கனடாவின் சிடாஸ் அமைபினர் தந்துதவியுள்ளனர். அதனை சிரமம் பாராமல் உங்களிடம் எமது குழுமத்தினர் கொண்டு சேர்த்துள்ளனர். நீங்கள் இங்கு தந்துதவிய சப்பாத்துக்கள் மற்றும் பாடசாலைப் பைகளை நன்கு உபயோகித்து பயன் பெறவேண்டும்' என அனேகம் பேருக்கு உயிர்கொடுக்கும் தோழனாக எமது பிரதேசத்துக்கு வாய்க்கப்பெற்ற, சிரமம் பாராமல் சேவை செய்யும் வைத்தியக் கலாநிதி திரு சுகுணன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் 
இங்கு இந்நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்த பாடசாலையின் அதிபர் அவர்கள் கூறுகையில் 'இந்த மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் வறுமையாகவும் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை எப்பொழுதும் தொடர்பில் வைத்திருப்பது மிகவும் சிரமமானது. இவர்களுக்கென்று குடை, நல்ல சப்பாத்துக்கள், புத்தகப் பைகள் இதர கற்ப்பதற்க்கான பொருட்கள் கிடைப்பது இல்லை. இதனால் கற்பிக்கின்ற எங்களுக்கும் சில வேளைகளில் சிரமமாக இருக்கும். இவற்றை நன்குணர்ந்து உங்கள் குழுமம் கனடா வாழ் எம் உறவுகளின் உதவியில் இந்த மாணவர்களுக்கு உதவுவது. இந்த மாணவச் சமுகத்தின்மீது நிச்சயமாக நேர்முகமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை' என்றார். அத்துடன் இந்நிகழ்வில் சுரேஸ் அவர்கள் கலந்துகொண்டு புத்திமதிகளையும் இந்த மாணவச் செல்வங்களுடன் பகிந்துகொண்டதுடன், இந்நிகழ்வினை முழுமூச்சாக நின்று நல்ல முறையில் ஒழுங்கு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
( மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..  )
நிகழ்வுகளின்  நிழல்கள் 



0 comments:

Post a Comment