ADS 468x60

09 March 2014

இரண்டாம் தரப்பு

நீ எதை செய்யவில்லை
நீ எதை அடையவில்லை
ஐக்கிய நாடுகள் கோடுபோட்டுக்காட்ட
நீ ஒன்றும் இரண்டாம் தரப்பல்ல


காற்றைக் கடந்து விண்ணிலும்
கருவை தரித்து மண்ணிலும்
புதுமை செய்த பெண்!

வாடியபேரைக் கண்டால் அழவும்
வதைப்போரைக் கொன்று எழவும்
படைக்கப்பட்டவள்!

புத்தியில்லாமலா படைத்தான் பிரம்மன்
சக்தியில்லாமலா சுழலும் உலகம்
படைப்பதால் நீயும் பிரம்மன்.

சமஉரிமை கேட்க்க ஆண்என்ன!
சமனா உனக்கு சொல்!!
எமனும் தொழுவான்! உன்னை.

இன்னும் செல்லாதே பின்னே!
எல்லாம் நீதானே பெண்ணே!-நீ
இரண்ணடாம் தரப்பல்ல கண்ணே கண்ணே!

0 comments:

Post a Comment