ADS 468x60

06 January 2015

நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

கண்ணணப்பா கொஞ்சம் நில்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு
நீயுச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா
அறுபது ஆண்டாச்சு ஆராரோ ஆண்டாச்சு
தமிழரின் முன்னேற்றம் என்னாச்சு- அது
தேங்கிய நீராட்டம் நின்னாச்சு – அந்த
தமிழரின் பேர்சொல்லி கரிசனம் காட்டிய
வெகுசனம் முன்னேறிப் போயாச்சு -இந்த
ஒரு இனம் தனியாக காயாச்சி
கண்ணப்பா இது என்னப்பா!
சொல்லப்பா பதில் சொல்லப்பா!

சொல்லும் மொழி ரெண்டு உள்ள இனம் மூண்டு
ஒற்றுமை இன்நாட்டில் என்னாச்சு- பெரும்
வேற்றுமை வேரூன்றிப் போயாச்சு- இங்க
கிழக்கெண்டும் வடக்கெண்டும் மேற்கெண்டும் தெற்கெண்டும்
நல்ல மனிதரை பிரிச்சாச்சி- எமக்கு
உள்ள உரிமையை பறிச்சாச்சி
கண்ணப்பா இது என்னப்பா!
சொல்லப்பா பதில் சொல்லப்பா!

0 comments:

Post a Comment