ADS 468x60

11 October 2016

நீர் ஓடிடும் தேனாட்டில்

அ) மீன்பாடுற நம்ம நாட்டில நம்மட நாட்டு வளம் கலை கலாசாரம் பற்றி ஏன் நம்ம ஒரு பாட்டு பாடக்கூடாது? 
ஆ) அது தானே

நீர் ஓடிடும் தேனாட்டில்
மீன் பாடுது கேளுங்களேன்
ஏர் பாய்ந்திடும் வளநாட்டில்
நெல் ஆடுது பாருங்களேன்

கூத்து கும்பி கரகம் வசந்தன்
பூத்துக் குலுங்கும் கலையிடும்
சேத்து காவியம் காதில் ஒலிக்க
உடுக்கை முழங்கும் தமிழ் நிலம்

அ.) என்பா இவ்வளவுதானா நம்ம நாட்டினுடைய அரும பெரும நான் என்னவோ பெரிசா நெனச்சிட்டன்
ஆ) ஆகா இப்படி கேட்பிங்க என்று தெரியும் இன்னும் நெறய இருக்குப்பா சொல்றன் கேளு!!

விபுலா நந்தன் பிறந்த இடம் -மண்டூர்
புலவர் மணியும் வாழ்ந் நாடு
நீலா வணனின் கவிதை கொஞ்சும்- நம்ம
வாகரை வாணனின் தமிழும் மிஞ்சும்

பல் இனங்கள் வாழும் நிலம்- ஒன்றாய்
பழகும் மக்கள் கூடும் தலம்
நல்ல தமிழை காக்கும் பாரு- இது
நம்பி வந்தால் உதவும் வீடு

அ) என்னங்க நம்ம நாட்டில பெருமையாச் செல்றண்டா கலை பண்பாடு, வயல் ஆறு மட்டுந்தானா இருக்கு?
ஆ) ஆகா இது என்ன கேள்வி கொஞ்சி விளையாடும் கடல் கொடி படந்த பூ எத்தனை எத்தனை பாடுகிறோம் கேளுங்க

அலைகள் வந்து சலசலக்குது
அருவியோடு கலகலக்குது
கடல்கள் கொஞ்சும் கரைகளைப் பார் மச்சானே- அங்கு
கயித்து மீனும் கரைவலையும் வச்சானே

தென்னங் கீற்று தலையசைக்குது
தேன் நிலவு குளிரெழுப்புது
கரையில் தவழும் மீனிருக்குது மச்சானே- இங்கு
கறிக்கு நிறைய வளங்களைத்தான் வச்சானே

அ) எல்லாம் இருக்கு ஒத்துக் கொள்ளுறன் நம்ம ஒததுமையா ஒத்தாசையா இருக்காட்டி வேல இல்லப்பா என்ன நான் சொல்ற சரியா
ஆ) ஆமா ஆமா

எல்லோரும் நாம் ஒன்றாகுவேம் -இங்கு
ஏற்றத் தாழ்வை ஒளித்திடுவோம்
ஏரைப் பூட்டி உழைத்திடுவோம் -ஒரு
ஏழை இல்லாத உலகம் செய்வோம்
நாம் ஏழை இல்லாத உலகம் செய்வோம்

0 comments:

Post a Comment