ADS 468x60

25 December 2017

"உங்களை ஆதரிப்பதில் வேலை இல்லை" இவை இல்லாவிடின்!


எம்முடைய ஊரில் பல படித்த அறிஞர்களும், அரசியல் நுட்பம் தெரிந்தவர்களும், மிகவும் நேர்மையானவர்களும், சமூக சேவகர்களும், எதிர்கால அபிவிருத்தி (நிலைத்திருக்கும்) பற்றித் திட்டமுள்ளவர்களும், நிருவாக ஆளுமை, தலைமைத்துவம், ஊழலை விரும்பாதவர்கள் என எல்லா திறமையுமுள்ளவர்கள் பல கட்சிகளில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக முகப்புத்தகம் மூலமும், முகம் தெரிந்தவர்கள் மூலமும் அறியக் கிடைத்தது மகிழ்ச்சி!





இந்தச் சந்தர்ப்பத்தில் முடியுமானால் இந்த புதுமுகங்களிடம் தேர்தலுக்கு முன் நிறைவேற்றவென சில வேண்டுகோள்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். வெறுமனே பூச்சியத்தில் இருந்து அரசியல் செய்ய முடியாது அதுபோல் இவை நமக்கொரு நல்ல சந்தர்ப்பம் எமது எமது பிரதேசத்தினை குறைந்தது அபிவிருத்தி நோக்கி திட்டமிட்டுக்கொள்ள பொருத்தமான தகவல்கள் தேவை. இவற்றை திரட்வது ஒன்றும் ரொக்கட் சயன்ஸ் அல்ல. ஆகவே ஒரு வேட்பாளர் ஊர் சார்ந்து அரசியலில் இறங்கும்போது குறைந்தது பின்வரும் அடிப்படைத் தகவல்கள் இல்லாமல் முடியவே முடியாது.

முடியுமானால் பின்வரும் தகவல்களை திரட்டி எல்லாருக்கும் தொியப்படுத்தினால் நீங்கள் மிக மிகப் பொருத்தமானவா் என்ற அங்கிகாரத்துக்கு உாியவராவீா். ஏனெனில் குறைந்தது இந்த அடிப்படைத் தகவல் தானும் இல்லாமல் உங்கள் வட்டார அபிவிருத்தியை ஒரு துளியும் நகா்த்த முடியாது.

1. 18-35 வயதிற்கிடைப்பட்ட தொழிலற்றோர் விபரம், அவர்களது வயது, கல்வித் தராதரம், அவர்கள் பெற்றுள்ள திறன்கள், கொண்டுள்ள அனுபவம் என்பனவற்றையும் அவர்கள் பெற விரும்பும் திறன், செய்ய விரும்பும் தொழில் ஆகியவற்றையும் படடியலிட்டுதல்.

2. எமது ஊரில் உள்ள ஓய்வு பெற்ற அரச, அரசசார்பற்றவர்களின் விபரங்களை வயது, செய்த தொழில், திணைக்களம்இ கிடைத்த விசேட அனுபவம், தற்போதைய உடல், மனநிலை, என்ன வகையான சேவையை யார் யார் தொண்டாண்மையில் செய்ய விரும்புகின்றனர் என்கின்ற தகவல்.

3. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல நாட்டமுள்ள மற்றும் சென்றுள்ளவர்களின் தகவல். அவர்களின் திறன் மட்டம், அவர்கள் விரும்பிச் செல்ல இருக்கும் துறை, அவர்களுக்குத் தேவையான திறன் என்பன பற்றிய சரியான தகவல்.

4. மேற்கத்தேய நாடுகளுக்குக் குடியுரிமை பெற்றுச் சென்ற ஆண்கள், பெண்களின் விபரம், அவர்கள் கொண்டுள்ள விஷேட திறமைகள்.

5. கிராமத்தில் உள்ள மொத்த வேளாண்மை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை நிலங்களின் மொத்த தகவல்கள். என்ன பயிர் எத்தனை ஏக்கரில் செய்கை பண்ணப்படுகின்றது? எந்த எந்த காலத்தில் செய்கை பண்ணப்படுகின்றது? அதன் விளைச்சல் ஆண்டுக்கு எவ்வளவு கிடைக்கின்றது? அதில் எத்தனை ஆண் பெண்கள் ஈடுபடுகின்றனர்? அதற்காக ஆண்டுக்கு பாவிக்கப்படும் பசளை மற்றும் கிருமிநாசினிகளின் அண்ணளவான அளவு என்ன? இவற்றுக்கும் அதற்கான உள்ளீட்டுக்கும் என வருடம் ஒன்றுக்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகின்றது? என்கின்ற தகவல்.

6. எமது கிராமத்தில் செய்கை பண்ணப்படாமல் கிடக்கும் தரிசு நிலங்கள் எத்தனை ஏக்கர்? ஏன் அவை செய்யப்படவில்லை? அவை யாருடைய பெயரில் இருக்கின்றது? இவற்றை செய்கை பண்ணுவதானால் என்ன வகையான பயிரிடலாம், அல்லது வேறு என்ன தேவைக்கு பாவிக்கலாம்? அப்படியாயின் என்ன பயனை தொழில் வாய்ப்பு, நிலப்பயன்பாடு, வருமான அதிகரிப்பு என்பனவற்றில் பாவிக்கலாம்? என்பனபற்றிய துல்லியமான தரவு.

7. பாடசாலை மொத்த மாணவர்களின் தொகை, பத்து வருடங்களில் எமது பாடசாலைகளின் ஐந்தாம் தர, சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர் தேர்ச்சி அறிக்கை, மாணவர்களின் இடைவிலகல், பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கை, தொழில்நுட்ப துறை நுழைவு, ஏனையோரின் நிலை என்பன போன்ற துல்லியமான தகவல்.

8. ஆலயங்களில் வருடமொன்றுக்கு லெவிடும் பணம், எவை எவற்றுக்காக அவை செலவிடப்படுகின்றன, அவற்றின் மூலம் தனி மனிதருக்கு மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு அல்லது ஈடேற்றத்துக்கு கிடைத்துள்ள பொதுப்பயன்கள், ஆலய தர்ம கர்த்தாக்களின் பெயர்கள், கல்விஇ திறன், சேவை விபரப் பட்டியல். ஒவ்வொரு ஆலயத்துக்கும் உரிய சொத்துக்களின் வெளிப்படையான பண சொத்து விபரங்கள், அவை மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகின்றது என்பன பற்றிய தகவல்.

9. நன்நீர், கடல் மீன்பிடி தொழிலாளர் விபரம்: எத்தனை தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர், அவர்களின் மாத வருமானம், அவர்கள் இவை சார்ந்து பெற்றுக் கொண்ட திறன்கள், பயிற்சிகள், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளின் விபரம். ஒரு வருடத்துக்கு எவ்வளவு மீன் பிடிபடுகின்றது, அதில் எவ்வளவு எமது கடலில், ஆற்றில் பிடிபடும் மீன்கள் எமது மக்களுக்கு நுகர்வுக்காக வழங்கப்படுகின்றது? எவ்வளவு ஏற்றுமதி நோக்கில் பிறருக்கு வழங்கப்படுகின்றது? மாதாந்த மீன் நுகர்வுத் தேவை அண்ணளவாக எவ்வளவு? அதில் எவ்வளவு உள்ளுர் உற்பத்திகளில் இருந்து கிடைக்கின்றது என்பன பற்றிய தகவல்.


10. கலைஞர்களின் தரவு:  எத்தனை கலைஞர்கள் இருக்கின்றனர், என்ன என்ன துறையில் உள்ளனர், எத்தனை வருடமாக சேவை செய்கின்றனர், என்ன வகையான மேலதிக திறன்களைப் பெற்றுள்ளனர், அவர்களுக்கு தேவையான வசதிகள் என்ன என்ன என தனிப்பட்ட கலைஞர்களின் பரிபூரணத்தரவினைப் பெற்றுக்கொள்ளல்.

11. எமது ஊரில் உள்ள பொது வசதிகள் பற்றிய தரவு: வாசிகசாலையில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? எந்த துறை சார்ந்த புத்தகங்கள் இருக்கின்றன? இன்னும் என்ன என்ன புத்தகங்கள் தேவைப்படுகின்றன என்ற பட்டியல்? புத்தகங்களை பராமரிப்பதற்காக உள்ள வசதிகள் பற்றிய தரவுகள், அத்துடன் மாதம் ஒன்றுக்கு வாசிகசாலை வருகின்றவர்களின் எண்ணிக்கை? எந்த வயதுக்குட்பட்டவர்கள்? எந்த நேரத்தில் வருகின்றனர் என்கின்ற தகவல்?

12. பெரிய சிறிய பாதைகள் பற்றிய விபரம், எத்தனை பாதை சீராக உள்ளது எத்தனை பாதைகள் சீராக இல்லாமல் இருக்கின்றது? எத்தனை கி.மீ. மொத்தத்தில், அதில் எத்தனை மீனவர் பாதை? எத்தனை விவசாயப்பாதை மற்றும் பாடசாலைக்கான பாதைகள் என முன்னுரிமைப்படுத்தவும்.

13. எமது சேமக்காலையின் நில அளவு, அவற்றை அடாத்தாக பிடித்துள்ளவர்களது விவரம், எவ்வளவு மீற்றர் எப்பொழுது என்கின்ற தகவலுடன் அவற்றை நிரந்தரமாக புனரமைத்து பாதுகாப்பதற்கான செலவு விபரம் அதை செய்வதற்கான திணைக்களங்களின் விபரம்.

14. ஊரில் உள்ள பொதுக்கட்டிடங்களின் விபரம், அவை எவற்றுக்காகப் பாவிக்கப்படுகின்றன, யார் அதை பாவித்து வருகின்றனர் அதனால் என்ன பயன்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்?

12. தற்பொழுது அரச மற்றும் தனியார் துறையில் வேலை புரிவோர் விபரம். செய்யும் தொழில், திணைக்களம், சேவைக்காலம் அவர்களுக்கு உள்ள விஷேட திறன் என்ன?

13. ஊரில் உள்ள சங்கங்கள் கழகங்களின் பொதுத்தகவல்கள்

குறைந்தது இந்த சிறிய வட்டாரத் தரவுகளை  நீங்கள் திரட்டுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை  ஆனால் இவற்றை திரட்டாவிட்டால் உங்களை ஆதரிப்பதில் வேலை இல்லை எமக்கு! ஒரு ஊரின் அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றம் சார்ந்து திட்டமிட, அல்லது பொது இடங்களில் கதைக்க வேண்டுமானால் இவற்றை கட்டாயம் நீங்கள் அறிக்கையாக தயாரித்து வெளியிடுங்கள்! ஊரில் உள்ள ஏணைய அனுபவமுள்ளவர்களை அறிவாளிகளை, மூத்தவர்களை, இளைஞர்களை இந்த செயற்பாட்டில் இணைத்துக்கொள்ளலாம். இதை யார் செய்து காட்டுகின்றாரோ அவரே என்னைப் பொறுத்தளவில் ஓரளவு பொருத்தமானவராக இருப்பார். இல்லாவிடில் இவருக்கு கிராம சேவகர் பதவிகூட கொடுக்க முடியாது!

உங்கள் ஆழுமையை, தலைமைத்துவத்தை எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் இவை இலட்சனுக்கு முன்னராக இருக்கவேண்டும். பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்படவேண்டும்.

உள்ளூராட்சி சமன்றங்களால் சமக்களுக்கு சவழங்ககூடிய சசேவைகள்

01 .பொதுச் சுகாதாரம்
02 .திண்மக் கழிவகற்றல்
03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரிதலும்
04. வடிகானமைத்தல் பராமரித்தல்
05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல் 
06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால்
08. இடுகாடுகள்இசுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்
09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்இபராமரித்தலும்.
11. கிராமியா நீர் வினியோகம்
12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்
13. தீயணைப்பு சேவைகள்
14. முன் பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும்
15. தாய் சேய் நலப்பணி
16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
17. தொற்று நோய் தடுத்தால்
18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும் 
19. தொல்லைகளைத் தவிர்த்தல்
20. பெண்கள் அபிவிருத்தி
21. கிராமிய மின்சாரம் வழங்கல்
22. வீடமைப்புத் திட்டம்
23. கல்வித் தளபாடங்கள்
24.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்
25. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்
26. அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தல்.
27. சமய விழாக்களை ஏற்பாடு செய்தல்
28. கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தலும வழிநடத்தலும்
29. வறியோருக்கு நிவாரணம் வழங்கல்

0 comments:

Post a Comment