ADS 468x60

06 March 2011

இலங்கையில் ஓங்கத் தொடங்கும் உரிமைக்குரல்கள்....

                   (ம.உ.ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளுரின்(R.மனோகரன்) மக்கள் விழிப்பூட்டல்-கல்முனை)
இன்று அபிவிருத்தியடையாத நாடுகளை மட்டுமல்ல , அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகளையும் அடிக்கடி இயற்கை விட்டுவைக்கவில்லை, அது புயலாகவும், பூகம்பமாகவும், வெள்ளமாகவும் பேரபாயங்களை ஏற்படுத்திச் செல்வதை நாம் கத்தரினா என்றும் ரீட்டா என்றும் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான பேர் அனர்த்தங்களிலிருந்து மிகவும் குறைந்த அழிவுகளை அல்லது அதை தவிர்ப்பதற்க்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்த நிவாரண கண்காணிப்பு பற்றிய தேவை எமக்கு வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிலும் சுனாமியின் போது மீழ் உருவாக்கச் செயலாற்றுகைகளில் அனர்த்தத்திற்கான நிவாரணங்கள் மீதான கண்காணிப்பு, அவர்களது அடிப்படை உரிமைகள் சார்பான பாதுகாப்பு என்பன அம்பாரை மக்களது மீள் உருவாக்கத்தினில் எத்தகைய பங்கினை செலுத்தி இருக்கின்றது என்பதையே நான் இக்கட்டுரை மூலம் விளக்க உள்ளேன். 

ஆழிப் பேரலையின் அழிவுகள்.
சுமத்திராவில் 2004 டிசம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆசிய நாடுகளின் பல பாகங்களையும் பலமாக சுனாமி என்ற பேரலையாக மாறி உயிர்களையும், உடமைகளையும் அழித்துச் சென்றுள்ளது. அரசியல் ஸ்த்திரமின்னை, முகாமைத்துவ அறிவின்மை, போர்சூழல் என்பன காரணமாக வருடங்கள் பல கழிந்தும் பாதிக்கப்பட்டவாக்;கும் இனிமேல் இவ்வாறான அனர்த்தம் ஏற்படமல் காப்பதற்கும் எதுவித சரியான திட்டமும் இல்லையென்றே எண்ணத் தோணுகிறது இதனால்தான் இன்றும்கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் மழையிலும், வெயிலிலும் ஓலையாலும், தகரங்களாலும் கட்டப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் வாழும் நிலை இருந்து வருகிறது. 

சுனாமியின் காரணமாக இலங்கையில் 31,229 பேர் இறந்துள்ளனர். 4100 பேர்வரை இதுவரை காணாமல் போயுள்ளனர் தவிர 5,16,150 பேர் வரை இடம்பெயர்ந்து வாழ்ந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர 28,449ம் ஏக்கர் பயிர்செய்கை, நிலம் என்பன முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 9,000 ஏக்கர் நெற் செய்கையும் 645 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை நிலமுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12,928 வீட்டுத்தோட்டங்கள், 559 மரக்கறித்தோட்டங்கள் மற்றும் 317 பழத்தோட்டங்கள் என்பனவும் முற்றாக அழிந்தன.

இவைதவிர கிட்டத்தட்ட 16479 மீன்பிடி வள்ளங்கள் பாதிக்கப்பட்டும் முற்றாக அழிவுற்றும் உள்ளன. இவைபோன்று 86 மருத்துவ வசதி நிலையமும் 195 கல்வி நிலையங்களும் (பாடசாலைகள், பல்கலைக்கழகம், கல்விக்கல்லூரி) என்பன முற்றாகவும் பகுதியாகவும் அழிவடைந்துள்ளன. இவற்றை விட மேலான 275,000 பேர் தங்கள் வேலை வாய்ப்பினை இச்சுனாமி பேரலையால் இழந்துள்ளனர். 

இவ்வாறு ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் சாதி, இனம், மதம், ஏழை, பணக்காரன் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இது இலங்கையின் உள்நாட்டு தேசிய உற்ப்பத்தியில் 4.5 சதவீத அளவு நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1500-1600 மில்லியன் ரூபாவாகும். இது அநேககமாக கரையோரங்களி;ல் வாழும் மீனவர்களினதும், சிறிய தொழில் உற்ப்பத்தியில் ஈடுபடுவோரினதும் மற்றும் விவசாயிகளினதும் வாழ்வாதாரப் பாதிப்பினை மதிப்பிட்டுக்காட்டுகின்றது.   

அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகும் (Disaster Relief Monitoring Unit) அதன் அடைவுகளும்.
சுனாமிப் பேர் அனர்த்தத்தின் பின்னர் பல நிறுவனந்கள், அன்றை அயல் நாடுகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் முண்டியடித்து இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது இதன் பின் இவ் உதவிகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் இருக்கும் போது நிவாரண உதவிகளை எதிர் பார்த்து இருக்கவில்லை என்பதும் ஒரு பொதுவான கருத்தாக இருந்தது. இவ்வாறான குறையை நிவர்த்திக்க உதித்த ஒரு ஸ்த்தாபனம்தான் அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகு ஆகும. இது சமூகம் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நிறைவேற்றும் வேலையை அல்லது நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் மற்றும் கண்காணிக்கும் ஒரு நிறுவனக செயற்ப்பட்டது. எனவே இது நிதி மற்றும் பொருள் உதவி வழங்கும் ஒரு நிறுவனமல்ல. 
                     (திருமலை கிண்ணியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் மக்கள் விழிப்பூட்டல்)
இவ்வமைப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் உருவாக்கப்பட்டு விசேடமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண, புணர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமாக உருவாக்கப்பட்ட அமைப்பாக இருந்தது. இதன் நோக்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமை மீறல்களை கண்காணிப்பதும் பரிசீலனை செய்வதுமாகும்.

1996 ஆண்டின் 21ம் இலக்கச் சட்டத்தில் விரிவாக கூறப்பட்டதற்கு இணங்க நாட்டில் உள்ள அனைத்து மக்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்க்காகவும், மேம்படுத்துவதற்க்காவும் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகும். இவ்வமைப்பினது கொள்கைகளையும், திட்டங்களையும் தழுவியவாறே செவ்வனே செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பே இவ்வனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகாகும்.

கள கண்காணிப்பில் DRMU இதனுடைய பணிகள்.

DRMU சுனாமிக்கு பிந்திய நிவாரணம், கீழ் கட்டமைப்பு மற்றும் புனர் நிர்மான வேலைகளில் மக்களின் கருத்துகககைத் தெரிவிப்பதற்கு முன்னுரிமைகளை மாவட்ட ரீதியில் வழங்கி அடிப்படை அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றது. இதன் கள அலுவலகங்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநோச்சி தவிர்ந்த ஏனைய சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உருவாக்கப்பட்டிருந்தது. கள உத்தியோகஸ்த்தர்களாக ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் தொண்டர்கள்  உட்பட பலர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள், கிராம உத்தியோகத்தக்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமுக அமைப்பின் தலைவர்களுடன் தொடர்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு சிறப்பாக செயற்ப்பட்டு வந்தமை குறிப்பிடலாம்.

DRMU இன் பிரதான பணிகள். 

1. அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிவாரண மற்றும்   புனருத்தாபன வேலைகளை மேற்பார்வை செய்வதுடன் கண்காணித்தல்.
2. மீள் கட்டமைப்பு, நிவாரண பணிகளின் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தல்.
3. அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் மனித உரிமைகள் பிரச்சினைகள் சம்மந்தமாக இணைந்து செயற்படல்.
4. மனித உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகள், அவற்றை பாதுகாப்பது சம்பந்தமான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசாங்கத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குதல்.
5. மீள் கட்டமைப்பு, புனருத்தாபன நடவடிக்கைகளின் போது சுனாமியால் பாதிக்கப்பட்ட நபர்களின் மனித உரிமைகள் நிலமையை சமுக கலந்துரையாடல்களின் மூலம் கண்காணித்தல்.
6. பாதிக்கப்பட்ட மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய கடமை புரிபவர்களுடன்  விழிப்புனர்வு நிகழ்சிகள், தகவல் பரிமாற்றம், மற்றும் கல்வியை வழங்குதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டல்.
7. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் சமுக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் உதவுதல்.
8. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, உரித்துடமை மீறல் சம்மந்தமான முறைப்பாடுகளை அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகிற்கு சமர்ப்பிக்க முடியும். பின்னர் இம்முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படும்.ம்

சுனாமி இழப்பீட்டு சம்பந்தமான உரிமை மீறல்களின் போது DRMU இன் செயற்பாடுகள்.

யார் DRMU க்கு முறைப்பாட்டை செய்ய முடியும்?

1. சுனாமியால் பாதிக்கப்பட்ட எவரேனும் சுனாமியுடன் தொடர்புடைய மனித உரிமை முறைப்பாடுகளை னுசுஆரு க்கு செய்ய முடியும்.
2. முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட தனிநபர் சார்பாகவோ குடும்பம் சார்பாகவோ அல்லது பாதிக்கப்பட்ட தனிநபர் சார்பாகவோ செய்ய முடியும்.
3. பாதிக்கப்பட்ட நபர் சார்பாக வருபவரினால் செய்யப்படும் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
4. சுனாமி தவிர்ந்த ஏனைய மனித உரிமை முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

முறைப்பாடுகள் கிடைக்காமல் DRMU க்கு பரிசீலனை செய்ய முடியுமா?

ஆம், அத்தியாவசியமான அடிப்படை உரிமைகள் மீறல்களை பரிசீலனை மற்றும் விசாரணை செய்ய முடியும்.

எங்கே நான் எனது முறைப்பாட்டினை செய்ய முடியும்?
கிராமசேவகர், பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபர் போன்ற அரசாங்க அதிகாரிகளினூடாக அரசினால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கப் பெறாவிடின் பாதிக்கப்பட்ட நபர் னுசுஆரு க்கு முறைப்பாடுகளை செய்ய முடியும்

முறைப்பாடுகளை நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ, தொலைபேசி ஊடாகவோ அல்லது பெக்ஸ் மூலமாகவோ மேற்கொள்ள முடியும்.

முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட வேண்டியவை.

1. என்ன உரிமை மீறப்பட்டுள்ளது?
2. யாருடைய உரிமை மீறப்பட்டுள்ளது?
3. உரிமை மீறலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நபர் அல்லது நிறுவனம்.
4. எப்படி உரிமை மீறப்பட்டுள்ளது?
5. எங்கே, எப்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளது?
6. எதிர்பார்க்கும் உதவி.

எப்படி முறைப்பாடுகள் கையாளப்படுகின்றன.

1. DRMU வின் விதிகளுக்கு உட்படாத முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.

2. DRMU வினால் ஏற்றுக்கொள்ளப்படும் முறைப்பாடுகள் DRMU வின் கள உத்தியோகஸ்த்தர்களினால் மேலதிக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரனையை தொடர்வதற்க்கான ஆதாரங்கள் கண்டறியப்படுமிடத்து அம்முறைப்பாடு முன்னெடுத்துச் செல்லப்படும்.

3. பின்னர் பொறுப்பு கூறுபவரிடமிருந்து அறிக்கை கோரப்படும்.

4. அவ்வறிக்கைகளின் மூலம் தீர்க்கப்படாத முறைப்பாடுகள் அழைப்பானை விடுவதன் மூலம் அல்லது விசாரனை மூலம் தீர்க்கப்படும்.
                                                          (களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன்- மூதூர்)
இவ்வாறு இன்னலுறும் மக்களுக்கு அவர்கள் தமது உரிமைகள், உரித்துடமைகள் என்பன சார்ந்த சாத்தியமான பெறுபேறுகளை எமது கல்முனை கள உத்தியோகஸ்த்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து அவர்களது உரிமைகளை ஓரளவாவது பாதுகாத்துள்ளோம் என்று புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது. கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாகங்களிலும் இப்பணி செய்ய கிடைத்த வாய்பை எண்ணி இப்போதும் பெருமிதம் அடைகிறேன். தற்போதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் வாழ்விடங்கள் இழந்த நிலையில் அதற்க்கான நிவாரணங்களைப் பெறுவதனில் பல புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றவர்கள் அவர்களது முறைப்பாடுகளை அவர்களது மாவட்டங்களில் இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். 

0 comments:

Post a Comment