ADS 468x60

06 March 2011

இந்தியாவின் வறுமையைக் குறைப்பதில் மிலேனியம் இலக்கு தீர்வாகுமா?

லகில் ஒரு டொலருக்கு கீழ் வருமானம் உழைத்து வறுமைக் கோட்டின் கீழ் அநேகமாக வாழுகின்ற நாடுகளுள் இந்திய அதி உச்ச அளவில் வறுமையான எல்லைக் கோட்டின் கீழ் வாடிக்கிடக்கும் நாடுகளில் ஒன்று என புதுடில்லியில் அமைந்துள்ள உலக வங்கியின் சிரேஸ்ட பொருளியலாளர் ரிங்கு மூர்க்கை தெரிவித்துள்ளார்.

த்திய வங்கி சொல்லும் உண்மையான வறுமை என்பதற்கும், அரச அதிகாரிகள் சொல்லும் இதற்கான வரையறைக்கும் உள்ள வித்தியாசங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிடையே ஒரு விவாதமாகவே இருந்து வருகிறது. 

மத்திய வங்கியின்(Central Bank ) கணக்கீட்டின்படி 80 வீதமானோர் அதாவது 1.1 பில்லியன் மக்கள் இரண்டு டொலருக்கு குறைவாகவே பெறுகின்றனர். இதன் கருத்து உலகில் மூன்றில் ஒரு பங்கு வறியவர்களும் இந்தியாவிலே வசித்து வருகின்றனர். ஆனால் இது இந்தியாவில் 3ல் 1பங்கு மக்கள் 1 டொலருக்கு குறைவாகவே பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் குறிப்பிடுவதன் அடிப்படையில் இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழ்கின்றவர்கள் 9 டொலர் அதாவது மாதம் 356 தொடக்கம் 538 ரூபா மாத்திரமே பெறுகின்றனர் என்றும் ஆனால் நாட்டுக்கு நாடு இது வேறுபடுகின்றன என்றும் சொல்லப்படுகின்றது.     

அரச மற்றும் மத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பது ஜக்கிய நாடுகளின் மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை 2015ல் 1 நாளுக்கு 1டொலர் வருமானம் பெறுபவர்களின் அளவை அரைவாசியால் குறைக்கின்ற இலக்கு தவறுவிடப்படும் அபாயம் உள்ளதென  ஜக்கிய நாடுகளுடன்(UN) சேர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி(ADB) நடாத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. அதே போன்று பட்டினியால் வாடுகின்ற மொத்த மக்களின் தொகை அரைவாசிக்குக் குறைவான தொகையினையே அடையக்கூடியதாக இருக்கும் என அமெரிக்காவை தளமாகக்; கொண்ட சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்சி தெரிவித்துள்ளது. 

இருப்பினும் நாடுகளுக்கிடையில் இந்த வறுமையை நிர்ணயிப்பதனில் முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா ஒரு பல்வகைத்தன்மை கொண்ட நாடு. இதன் சராசரி மற்றும் மொத்த வருமான பரம்பலைக் கொண்டு அந்த நாட்டின் வறுமையின் ஆழத்தை அளவிட முடியாது என பிரதம பொருளியளாளர் அபுசெஸ் சரீப் கூறுகின்றார். மேலும் அவர் கூறுகையில் இந்த வறுமை இன்னும் பல வழிகளில் கணிப்பிடப்படினும் அவை ஒரு செயற்கையான சுவரில் எழுதப்படுவன போல் ஆகும். உதாரணமாக 1-2 டொலர்களுக்கிடையில் வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத்தரம் தான் என்ன? இதில் என்ன கோடு வறுமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது? என்பது போன்ற கேள்விகள் இருக்கின்றன அல்லவா!

மிக மோசமான வறுமை என்பதனை மிக நுணுக்கமாக அவதானிப்போமானால், இதில் அநேகமாகனவர்கள் ஓரங்கட்டப்பட்ட சமுகங்களாகவே இருப்பதனைக் காணலாம். அதிலும் குறிப்பாக பின்தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள், இங்கு வாழுகின்ற முஸ்லிம்கள் அத்துடன் கல்வி அறிவில் பின்தங்கியவர்கள் இவர்கள் வறுமைப்பிடியில் இருந்து சிறியளவிலேயே மீட்சி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் குறிப்பாக இந்த வறிய சமுகத்தின் வாழ்க்கைத் தரம், அவர்கள் வாழ்கின்ற வாழிடம், அவர்கள் சேந்திருக்கும் சமுகம் என்பனவற்றில் மிக மிகத் தங்கி இருக்கிறது. குறிப்பாக இது பெண்கள், முஸ்லிம்கள், ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சாதிய ஒழுங்குபடுத்தல்களில் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் இருப்பதனைக் காணலாம்.

பொதுவாக இந்தியா அடிப்படைக் கல்வியில், மிலேனியம் அபிவிருத்தி இலக்கில் சொல்லப் பட்டதற்கிணங்க அடைந்து விட்டதென்றே கூறப்படுகின்றது. இருப்பினும் கல்வியின் தரம் எப்படி இருக்கின்றது என்பது கேள்விக்குரியதே.

உதாரணமாக ஆய்வறிக்கை ஒன்று, 8-11 வயதுக்கிடையிலான பாடசாலை செல்லும் மாணவர்களிடையே 10 பேரில் ஒன்றுக்கு மேல் ஒன்றுமே வாசிக்க முடிவதில்லை. அதுபோல் 14 விகிதமான மாணவர்கள் எழுத்துக்களை வாசிக்க முடிவில்லை என்றும், இதில் ஐந்தில் ஒரு பங்கினர் சொற்களை கூட்டி வாசிக்க முடியவில்லை என்றும் மற்றும் 40 விகிதமளவிலான மாணவர்கள் ஒரு பக்க கதையினை முழுசாக வாசிக்க முடியவில்லை என்றும் அறிக்கை இட்டுள்ளது.

ஆகவே இங்கு மிலேனியம் இலக்கை எட்டுவதற்க்கான அடிப்படைக் கல்வி போதுமானதாக உள்ளது என்கின்ற வாதம் கூடப் பொய்து விட்டது. ஏனெனில் இங்கு சரியாக எத்தனை பேர் வாசிக்கவும், விளங்கிக் கொள்ளவும் முடிகின்றது? கல்வியில் அடைவு கிட்டி விட்டது என்பது அதன் தராதரத்தை பொறுத்தும் இருக்க வேண்டும் அது வறுமையை தணிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் மிகப் பிரதானமானது. ஆகவே இந்தியாவின் வறுமையைக் குறைப்பதனில் மிலேனியம் அபிவிருத்தி இலக்கு தீர்வாக அமையுமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

0 comments:

Post a Comment