ADS 468x60

09 May 2011

இந்தியாவில் தாயாகாத பெண்ணுக்கு சன்மானம்....


முழு சந்தோசங்களையும், வாழ்கைகளையும் நேரத்தையும் செலவிட்டு எம்மையெல்லாம் முழுமையாக உருவாக்குவதற்க்காக தன்னை அர்ப்பணிக்கும் ஜீவன் இவ்வுலகில் யார் இருக்கின்றார் என்று கேள்வி கேட்டால், அது தாயாகத்தான் இருக்க முடியும். இவள் உருவாக்க முடியாத உறவு, கண்களில் எண்ணையை வைத்து கருத்தாக காக்கும் உயிர், மன்னவனும் விண்ணவனும் போற்றும் கருணைக்கடல்... அது தாய் ஒன்றாக மாத்திரம்தான் கருதலாம். ஆதனால்தான் அன்னையர் தினம் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டாடப்படுகின்றது.. அது சாலப் பொருத்தமானதும் கூட.

தாய்மை பற்றி ஒரு புதிய தகவல் விடயம் பற்றி தெரிவிக்கலாம் என விரும்புகிறேன். யாரும் திருமணத்தின் பின் தாய்மை அடையக் கூடாது என்று விரும்புவதில்லை மாறாக தாய்மையடைவதை ஒரு பேறாகவே எம்மத்தியில் கருதி வருகின்றமை காணக்கூடியதாய் உள்ளது..

மேற்கு இந்தியாவின் ஒரு சட்டார் எனும் விவசாய பிராந்தியத்தில் அரசாங்கம் 106 அமெரிக்கன் டொலர்களை, திருமணத்தின் பின் இரு வருடங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வழங்கி வருகின்றது. இதனிடையே அனேகமான பிள்ளைகளை மிகக் குறைந்த இடைவெளியில் பெற்றுக்கொள்ளுவது அவ்வளவுக்கு அரோக்கியம் இல்லை என்பதற்க்கில்லை, என்றும் கருத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. இது சனத்தொகை அதிகரிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அமுலாக்குவது பொருத்தமாகவும் இருக்கலாம் என்பதற்கு இது நடைமுறைப்படுத்துவது என்னவோ உன்மைதான்.

இப்பொழுது இந்தியாவின் சனத்தொகை 1.2 பில்லியனாக இருந்து வரும் நிலையில் இது இன்னும் ஒரு தசாப்த காலத்தினுள் சைனாவின் சனத்தொகையினை விஞ்சி 1.5 தொடக்கம் 1.9 பில்லியன் சனத்தொகையாக மாறி உலகிலே அதிக சனத்தொகையினைக் கொண்ட நாடு என்ன பெயரினை பொறிக்க இருக்கிறது. இது அந்நாட்டு அரசை குறைந்து வரும் வளத்தினிடை கூடிவரும் சனத் தொகையை வைத்து என்ன பண்ணுவது என்ற சங்கடத்திற்குள் உள்ளாக்கியுள்ளதாம். என "சேஞ்ச்" என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகலாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆரோக்கியமான ஒரு சமுகத்தில் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தைகள் இருப்பது உலகத்தின் சமநிலையை பாதுகாக்க உதவியாய் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதனை அதிக வருமானங்களைப் பெறுகின்ற கல்வியில் வளர்ச்சி கண்ட நாடுகள் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வறுமையான மூன்றாம் மண்டல நாடுகளிடையே ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகளுக்கு மேல் சராசரியாகக் காணப்படுகின்றமை காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் மேற்கிந்தியாவில் மாத்திரமல்ல பல நாடுகளில் காட்டமாக குழந்தைகளை பெறக்கூடாது என்ற சட்டரீதியாக பல கொள்கை அமுலாக்கலை கொண்டு வருவதும், ஊக்குவிப்பு தொகையினை அறிமுகப்படுத்தி தாய்மையை அழிப்பதும் உன்மையிலே தாய்மைக்கு நாங்கள் செய்யும் அவமானமாகத்தான் இருக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுவதும் பெறாமல் இருப்பது;ம அத்தாயின் முடிவில் இருக்கவேண்டும் என்ற ஒரு பொதுக் கருத்து காணப்படுகின்றது.

இருப்பினும் சிறுவயதில் சட்டரீதியற்ற முறையில் திருமணம் செய்வோர் இந்த பிராந்நியத்தில் 25 விகிதமாக இருக்கின்றது என்றும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே எது எப்படி இருப்பினும் தாய்மை பற்றி இந்த உலகம் மிகுந்த அக்கறை காட்டி தான் வருகின்றது. மிக நுணுக்கமான முறையில் சட்டங்களையும் கொள்கை அமுலாக்கங்களையும் செய்து ஆரோக்கியமான ஒரு சமுகத்தினை கட்டியெழுப்புவதனூடாக தாய்மைக்கு நல்ல மரியாதையைப் பெற்றுக் கொடுக்கலாம் அல்லவா. நாங்கள் எங்கள் தாயை மாத்திரமல்ல, பாட்டியை, மனைவியை எல்லாம் தாயாக அன்னையர் தினத்தில் மாத்திரமல்ல நாள்தோறும் ஆராதிக்கப் படவேண்டியவர்களே...

1 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇருப்பினும் சிறுவயதில் சட்டரீதியற்ற முறையில் திருமணம் செய்வோர் இந்த பிராந்நியத்தில் 25 விகிதமாக இருக்கின்றது என்றும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஃஃஃஃ

இது ஒரு பாரிய பிரச்சனையாகும் அதுவும் கல்லிவ அறிவு குறைந்த இடங்களில் இன்னும் சிரமமே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

Post a Comment