ADS 468x60

24 May 2011

பெண் சிசுக்களைப் பலிகொடுக்கும் இந்தியா....


இந்த உலகத்தில் இந்தியாவில் ஏழு வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளில் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, தரவுகளின்படி எட்டு மில்லியன் பெண் குழந்தைகள் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர் இந்தியாவில். வறுமை, விருப்பமின்மை, பெண்கள் இன்னொரு வீட்டுக்கு போகும் ஒருத்தி, சீதனக் கொடுமை இது போன்ற ஏராளமான காரணங்களினால் பெண் குழந்தைகள் தாயின் முன்னே பரிதாப கரமாக இறக்க வைக்கும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பெண்கள் பிறப்பது ஒரு சாவக்கேடு என்ற ஒரு அநியாயத்துக்கு நியாயமான காரணங்களினால் கருவிலும், பிறந்த பின்னும் எத்தனையோ குழந்தைகள் அழிக்கப்படுகின்றன என்ற உன்மையை பீ.பீ.சீ செய்தி சேவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வான் என்ற பெண்மணி 2 பெண் பிள்ளைகளைப் பெற்று எடுத்து பின்னர் மூன்றாம், நான்காம் ஐந்தாம் பிள்ளைகள் பெண்ணாகப் பிறக்க இருப்பது ஸ்கான் பரிசோதனை மூலம் அறிந்த பின்னா,; தனது மாமியார் அவரை அச்சுறுத்தி, இந்த மூன்று பிள்ளைகளையும் கருவிலே அழித்தனர், அது தனது மாமியார் தன்; மகனை விவாகரத்து செய்யப்பண்ணப் போவதாகச் சொல்லியே இதனை சாதித்தனர். இதற்கு பின் பிறந்தது ஆண்குழந்தை, ஆதலால் அவனுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் கல்வான் தெரிவித்திருந்நதாக அச்செய்தி கூறுகின்றது. அவர்களுக்கு தேவை ஆண் குழந்தையே, ஏனெனில் அப்போதுதான் அவனுக்கு கொழுத்த சீதனம் பெற்று கொள்ளலாம் என்று அவர்கள் கூறியதாக கல்வான் மனமுடைந்து சொல்லி இருந்தாள்.

குழந்தைகளை இறக்கவைக்கும் முறை..
தேவையில்லாத குழந்தைகளை அங்கு கொல்லும் அநாகரிகமற்ற செயல் மிகவும் கொடூரமானது. குழந்தை பிறந்தவுடன் ஈரப்பைக்குள் போட்டு மூச்சி எடுக்கவிடாமல் கொலுவது, பிறந்தவுடன் குழந்தைக்கு பாலுடன் நெல்மணிகளை போட்டு அது மெல்லிய தொண்டையை அறுப்பதனால் அக்குழந்தையை இறக்க வைப்பது, அக்குடுமமபத்தினரால் அல்லது இக்கொலை செய்வதில் பரிட்சயமானவரினால் தான் இவை செய்யப்பட்டு, அந்த ஏழைத்தாய் அதன் பின் குப்பை கூட்டும் வேலைக்கு பலவந்தமாக 50 ரூபாய் பணத்துக்கு அனுப்பி கொடுமைப்படுத்துகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக தழிழ் நாட்டில் தர்மபுரி, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில்; அதிகம் காணப்படுவதாக சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் தர்மபுரியில் மாத்திரம் வருடத்துக்கு 1300 கழந்தைகள் அவ்வாறு கொல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சட்டங்களும் ஓட்டைகளும்...
1961இல் இந்தியா சட்டப்படி சீதனம் வேண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்திருந்த போதிலும் அவை இன்றும் ஒரு படி வளர்சியடைந்து அது வறியவர் செல்வந்தர்கள் என பகுபாடு பார்க்காமல் எல்லோரையும் பாதித்துள்ளது. இந்த பெண்ணின் செய்தி மில்லியன் கணக்கான குடும்பங்களின் மூடத்தனமான செயலையே சுட்டி நிற்கின்றது.

தகவலின்படி 1961 இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆனால் அவை இன்று 914 ஆக குறைந்துள்ளது. அதற்கும் மேலாக பெண்களின் வளர்ச்சி எல்லா துறைகளிலும் பரிநமித்து நிற்ப்பதோடு, சைனாவின் ஆண்களுக்கான பெண்களின் போதாமையினை விட இந்தியாவில் அது மிக மோசமடைந்துள்ளது, என்று தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றது.

பரிசோதனைகளும் பாதகமும்.
குழந்தை பிறந்து 24 மணிநேரத்துக்குள் குடம்பத்தினரின் சம்மதம் அல்லது விருப்பத்தடன் கொலை செய்தல் (Infanticide)  மற்றும் கருவிலே பிள்ளையை வளரவிடாமல் சத்திர சிகிச்சை செய்தல்   (Foeticide) இந்த நாட்டுக்கே ஒரு அவமானச் சின்னமாகும் இவை இந்நாட்டின் பெண்பிள்ளைகளை காப்பாற்றுவதற்க்கான பாரிய இடர்களாக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.

1974 இன் பின் இந்த பால்நிலையை குழந்தை பிறக்குமுன்னே அறிந்துகொள்ளும் ஆர்வம் இந்நாட்டு மக்களிடையே அதிகரித்துக் காணப்பட தொடங்கியது, என அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிலைய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இது, எத்தனையும் ஆண் பிள்ளைகளை பெறலாம் என்பதற்க அப்பால் பொதுவாக சனத்தொகை வளர்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகவும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தொரிவிக்கின்றனர்.

குறிப்பாக 1980 களின் பிற்ப்பாடு, வயிற்றில் கருவுற்றிருக்கும் குழந்தைகளின்; பால் வகுப்பை அவர்களின் உடல் அமைப்பைப் கொண்டு கண்டறியும் பரிசோதனை (Ultra Sound Determination test)  பத்திரிகைகளில் முந்தியடித்துக் கொண்டு விளம்பரப்படுத்தியமை அதன் கேள்வியின் நிலையை உணர்த்துளின்றதல்லவா. 1994 காலப்பகதியில் ஆரம்ப கால உயிரியல் தீர்மானத்திற்க்கான பரிசோதனை (Pre- Natal determination Test (PNDT)) குழந்தைகளின் பால் வகுப்புக் கண்டு பிடித்து குழந்தைகளை கொலைசெய்வது தடை செய்யப்பட்டு இருந்தது.

இருப்பினும் 2004 இல் இது மீண்டும் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டு குழந்தை கருத்தரித்த சிறு காலத்திலேயே கண்டறிய கூடிய நிலையில,; இது இருந்து வந்தது. இருப்பினும் இத்தகைய குழந்தைகளை கருவிலே அழித்தல் சட்டப்படி 12 வாரத்துக்குத்தான் அந்நாட்டுச் சட்டப்படி செல்லுபடியாகும், ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதனை அறிய 14 வாரம் தேவைப்படுகின்ற படியினால்தான் இது சாத்தியமாகின்றது. இன்று இந்திய நாடெங்கும் 40,000 பால் நிலைப் பரிசோதனை நிலையங்கள் முளைத்து, பல விலாசமே இல்லாமல் துலைந்து போய்விட்டதாகவும் BBC செய்தி தெரிவிக்கின்றது.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் இந்த கொலைக்கான ஒட்டுமொத்த முதற்க்காரணம் இந்த குழந்தை பிறக்குமுன்னரான பரிசோதனைகளின் அதிகரிப்பு, சட்டத்தின் இறுக்கமற்ற தன்மை, குடும்பத்தின் மூட நம்பிக்கை, பெண்கள் மீது வைத்திருக்கும் வெறுப்பு, சீதனக் கொடுமை போன்ற இன்னோரன்ன காரணங்கள் இக்குழந்தைகள் பரிதாபகரமாக கொல்லப்படுவதற்கு தூண்டுதலாக இருக்கின்றது. ஒரு மன வேதனை என்னவெனில் முல்லை கொடி படர கொப்பு இல்லாமல் சுடு வெயிலில் கிடப்பதை தாங்காமல் தனது தங்கத் தேரினை அது படர்ந்து செல்ல நிறுத்திச் சென்ற காருண்யமான நாட்டில் ஒரு மனிதக் குழந்தை வாழவிடாமல் அழிக்கும் செய்தி காதில் வெண்ணீராய் பாயுது.

0 comments:

Post a Comment