ADS 468x60

25 December 2011

அனர்த்த முன்னாயத்த முனைப்பில் மட்டக்களப்பில் தேசிய பாதுகாப்பு தினம்

உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் இயற்க்கை அனர்த்தம்; ஒரு பொதுவான விடயமாக இருந்து வருகின்றது.  அபிவிருத்தி அடையாத  நாடுகளை மட்டுமல்ல , அபிவிருத்தி அடைந்த மேற்குலக நாடுகளையும் அடிக்கடி இயற்க்கை அனர்த்தங்கள் விட்டு வைக்கவில்லை, இருப்பினும் அவற்றின் 90 விகிதமான இயற்கை அனர்த்தங்கள், அதனால்; வரும் பாதிப்புகள், உயிர் இழப்புகள் என்பன மூன்றாம் உலக நாடுகளிலேயே ஏற்ப்பட்டு வருகிறது. இன்று இலங்கைத் தீவு இலகுவாக அனர்த்தங்களுக்கு பாதிக்கப்படும் நாடாக மாறியுள்ளது. இவை கடந்த இரண்டு தசாப்த காலத்தில் பாரிய வெள்ளம், சுனாமி, மண்சரிவு மற்றும் வறட்சி என்பனவற்றினால் மக்களை பொருளாதார சமுக அடிப்படையில் ஒரு படி பின்னோக்கி தள்ளியள்ளது.

இந்நாடு இயற்க்கை அனர்த்தங்களில் இருந்தான நிலையான ஆபத்துக் குறைப்பு, அனர்த்த முகாமைத்துவ தந்திரோபாயங்கள் என்பனவற்றினை செயற்ப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளே அதன் பாதிப்புகளை வேகப் படுத்தியுள்ளதனை கடந்த காலங்களில் இருந்து பார்க்கலாம். இருப்பினும் 2005 இல் சுனாமிக்கு பின்னர் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் நிறுவப்பட்ட பின்னர் சிறிதளவான இடர் தணிப்புக்கான சிறு சமிக்ஞைகள் தோன்ற தொடங்கியுள்ளன. அந்த வகையில்   தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள டிசம்பர் 26ம் திகதி இம்முறை பல அனர்த்தங்களில் அடிபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யபடபட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்தப் பின்னணி.
தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக செறிந்து வாழுகின்ற கிழக்கு மாகாணத்தின் மையப் பகுதியாக இயற்க்கை வளங்கள் நிறையப் பெற்ற, கிட்டத்தட்ட 580,817 மக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாவட்டமாக இது இருக்கின்றது. இங்கு தொடர்ந்து வந்த மூன்று தசாப்த கால யுத்த அனர்த்தத்தில் இம்மக்கள் தங்களது கல்வி, வாழ்வாதாரம், உயிர், உடமை என்று இழந்த மக்களை 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற்போல்' இடையே ஏற்ப்பட்ட சுனாமி அனர்த்தம், வெள்ள அனர்த்தம் என்பன ஒன்றாய் சேர்ந்து இம்மக்களின் மீண்டெழும் தன்மையை நலிவடைய வைத்துள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் வருடாவருடம்; அடையாளங் காணப்பட்ட அனர்த்தங்களாக சூறாவளி, சுனாமி, வெள்ளம், வறட்சி, மின்னல், இடி, தொற்று நோய் மற்றும் யானைகளின் தாக்குதல் என்பனவற்றுக்கு பாதிப்புக்குள்ளாகும் ஒன்றாகும். இவற்றில் மாறாத வடுக்களை ஏற்ப்படுத்தி சென்ற அண்மைய சுனாமி மற்றும் வெள்ளம் என்பனவற்றின் தாக்கம் அதில் இருந்து மக்கள் கற்றுக் கொண்ட பாடம், எதிர்கால சமுக மட்ட முன்னாயத்த ஏற்பாடுகள் என்பன பற்றி பார்ப்பது நல்லது.

கீழ் தரப்பட்ட தரவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தி சென்ற பிரதான அனர்த்தங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்பனவற்றை காட்டுகிறது.

சுனாமி அனர்த்தம்.
சுமத்திராவில் 2004 டிசம்பரில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் ஆசிய நாடுகளின் பல பாகங்களையும் பலமாக 'சுனாமி' என்ற பேரலையாக மாறி உயிர்களையும், உடமைகளையும் அழித்துச்சென்றுள்ளது. 

சுனாமியின் காரணமாக மட்டக்களப்பில் 3000 பேர் இறந்துள்ளனர் 2,300 பேர்வரை காயமடைந்துள்ளனர் தவிர 56,000 பேர் வரை இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். அத்துடன் 15000 வீடுகள் முழுதாகவும், சுமார் 5,000 வீடுகள் பகுதியளவிலும் சேதப்பட்டிருந்தன என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனேகம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் தங்களது வாழ்க்கையினை நடத்தி வந்தவர்கள். இவர்கள்; விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் காணப்பட்டமையினால் அவர்களது ஜீவனோபாயம் அடியோடு அழிக்கப்பட்டது. சுமார் 21,040 மீனவர்கள் பாதிப்படைந்திருந்தனர் அதுபோல் 2,417 விவசாயக் குடும்பங்கள் தங்கள் 857 ஏக்கர் விவசாயத்தினை இழந்திருந்தனர். அதுபோல் அனேகமானோரின் வர்த்தக நடவடிக்கைகள் வியாபார செயற்ப்பாடுகள் பாதிக்கப் பட்டிருந்தன.

இவ்வாறு ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் சாதி, இனம், மதம், ஏழை, பணக்காரன் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை. ஒட்டு மொத்த இந்நாட்டின் பாதிப்புகள் இலங்கையின் உள்நாட்டு தேசிய உற்ப்பத்தியில் 4.5 சதவீத அளவு நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1500-1600 மில்லியன் ரூபாவாகும். இது அநேககமாக கரையோரங்களி;ல் வாழும் மீனவர்களினதும், சிறிய தொழில் உற்ப்பத்தியில் ஈடுபடுவோரினதும் மற்றும் விவசாயிகளினதும் வாழ்வாதாரத்தினை மதிப்பிட்டுக்காட்டுகின்றது.   

வெள்ளம் 2010 மற்றும் 2011.
மேற்க்காட்டப்பட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில் 2003ம் ஆண்டில் இருந்து 2010, 26 டிசம்பரில் அடித்து அழிக்க தொடங்கிய வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் என்றுமில்லாத வாறு 100 வருடங்களுக்குப் பின்னர் அதி கூடிய 3500 மில்லி லீற்றர் கன மழையினைக் கொட்டி பெரு வெள்ளத்தினை ஏற்ப்படுத்தியது. இதனால் மாவட்டத்தின் 14 மாவட்டங்களும் நீரில் மூழ்கியது தெரிந்ததே. இந்த வெள்ளத்தினால் வீடுகள், கட்டுமானங்கள், பாடசாலைகள், குடி நீர் விநியோகம் மற்றும் சுகாதாரம் வாழ்வாதாரம் என்பனவற்றில் பேரிடியாய் விழுந்தது. மொத்தமாக இம்மாவட்டத்தில் 5,83,837 பேர் பாதிப்படைந்தனர், சுமார் 3,22,743 பேர் 598 நலன்புரி நிலையங்களில் இடம் பெயர்ந்திருந்தனர். மட்டக்களப்பின் மூன்று பிரதான குளங்கள் நிரம்பி உடைப்பெடுக்கும் ஆபத்தில் இருந்தமையினால் அவற்றின் வான் கதவுகள் தொடர்சியாக என்றும் இல்லாதவாறு திறக்கப்பட்டிருந்தது.

முன்பு கூறியதற்க்கிணங்க மட்டக்களப்பு மக்கள் அனேகமாக விவசாயச் செய்கை, மேட்டுநிலப் பயிர்ச் செய்கை, வீட்டுத்தோட்டம், மரக்கறிச் செய்கை, மிருக வளர்ப்பு என்பனவற்றினையே தங்களது பிரதான வருமான மார்க்கமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இவற்றின் ஒட்டு மொத்த இழப்பும் அம்மக்களது உணவு உற்ப்பத்தியை, வருமானம் உழகை;கும் மார்க்கங்களை அடியோடு சிதைவடைய வைத்துள்ளது.

வெள்ள அனர்த்தம் பற்றிய ஒரு விழிப்புப் பாடல்
இந்த வெள்ளத்தின் அழிவுகளை சற்று ஆழ்ந்து பார்க்க வேண்டும். இவ் இயற்க்கை அனர்த்தத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 160000 கெக்டேயர் நெற்க்காணிகள் இம்மாவட்டத்தில் நீரில் மூழ்கியமையால் விவசாயத்தினை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 214430 விவசாயிகள்; நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டிருந்தனர். இவ் விவசாயிகள் பெரும்பாலும் தங்களது விவசாயத்தினை கடன் பெறுவதன் மூலம் அல்லது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தினைக் கொண்டே தங்களது நிலப்பண்பாடு, விதை நெல் கொள்வனவு மற்றும் களை கொல்லி என்பனவற்றினை கொள்வனவு செய்து வந்தனர். இவ் வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 96 விகிதமான விவசாயம் அழிவுற்றமை விவசாயத்தை நம்பி வாழும் மற்றும் கடனுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்த மக்களை விரக்தி நிலைக்கு தள்ளி இருந்தது.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையை கொண்டவர்கள் இதகால் அவர்களது ஜீவனோபாயத்தில் கால்நடை வளர்ப்பு பின்னிப் பிணைந்திருந்தது. இவை கடந்த வெள்ளத்தில் 37945 புசுக்களையும் 12412 எருமைகளையும் 23417 ஆடுகளையும் மற்றும் 183572 கோழிகளும் பறிகொடுத்துள்ளது. இவ்வாறு பல துறைகளிலும் பாரிய அழிவுகளை இம்மாகாணம் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் சந்தித்துள்ளது. இதனால் தான் இந்த மாவட்டம் தேசிய ரீதியாக வருடந்தோறும் அனுஸ்ட்டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தினை மட்டக்களப்பு மாவட்டில் வைக்க தீர்மானித்துள்ளமை சாலப் பொருத்தமானது.
அனர்த்தங்கள் கற்றுத் தந்த பாடங்களும் அவற்றின் பிரதிபலிப்பும்.

உன்மையில் 'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பதற்கு இணங்க வறுமை, அடக்கு முறை மற்றும் இன்னோரன்ன அழுத்தங்கள் காரணமாக மொத்த சனத் தொகையில் அனேகமானவர்கள் நலிவுறும் தன்மையிலே வாழ்ந்து வருகின்றனர்.  நலிவுறுதல் என்பது இலகுவாகப் பாதிக்கப்படும் நிலைமையில் அவர்கள் வாழ்க்கை தரம் அமைந்து காணப்படுகிறது என்பதாகும். இந்த மக்கள் ஆரம்ப காலங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் முன்னரே தாங்கள் அவற்றுக்கு தயாராகும் ஒரு பொறிமுறையை பின்பற்றி வந்திருக்கின்றனர். ஆனால் யுத்தம் அந்த கலாசாம் நடைமுறை என்பனவற்றை அடியோடு மாற்றி விட்டது.

சென்ற வெள்ள அனர்த்தம் ஏற்ப்படுத்திச் சென்ற வடுக்கள் கானொளியாக

அத்துடன் ஏற்ப்பட்ட பாரிய சுனாமி பேரழிவில் அனேகமான தொண்டு நிறுவனங்கள், அரச அமைப்புகள் மக்களை அனர்த்தத்தின் பின் மீட்சி பெறச் செய்ய அவர்களுக்கு சகல வசதியும் வழங்கத் தொடங்கி இருந்தன. இதனால் மக்கள் மனோ நிலையில் பாரிய மாற்றம் ஏற்ப்படத் தொடங்கி இருந்தது. இதனால் அம்மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை பிறர்மீது வைக்கத் தொடங்கினர். இதனால் தங்கி வாழும் மனோபாவத்தில் அவர்களது வாழ்நிலை மாறிவிட்டமை அவர்களை அவர்களாக வாழ விடாத ஒரு நலிவுறு போக்குக்குள் தள்ளியள்ளது. 

இதே போல சுனாமியை தொடர்ந்து இடம் பெற்று வந்த அநேக அபிவிருத்திப் பணிகளில் இருந்து ஊழல், சமுகச் சீர்கேடுகள், ஊர்ச்சண்டை என்பனவற்றுடன் பாராபட்சமான அதிகாரிகளின் போக்கு உன்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்க தவறிவிட்டன. இதனால் அதிகமான விசாரணைக் குழுக்கள், முறைப்பாடுகள் என்பன பரபரப்பாக இடம்பெற்று முடிந்தமை நாம் கண்ட பாடங்களே. 

அது போல அனர்த்தத்தினுள் பாதிக்கப்பட்டு வருடக்கணக்கில் காத்துக்கிடந்த மக்களுக்கு வீட்டுத்திட்ட வசதிகள் வழங்கப்படாமல் இருந்த வேளை பாதிக்கப்பாத மக்கள் அவற்றைப் பெற்று இருந்தனர். அதுபோல் பாதிக்கப்பட்ட மக்கள் அநேகம் பேர் குடிநீர், தொழில் வாய்ப்பு என்பனவற்றை இலகுவில் அடைய முடியாத தொலைவில் குடியமர்த்தப்பட்டு அவர்கள் இன்னுமோர் அனர்த்தத்துக்கு முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இடர் முகாமைத்துவத்தின் பரந்துபட்ட தேவைப்பாடும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்தினை முகாமை செய்ய வேண்டிய தேவை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் (இடர் முகாமைத்துவ அனுபவம் மற்றும் கல்வி அறிவு கொண்ட) மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அவர்கள் ஒட்டு மொத்த மாவட்டத்தினையும் அனர்த்தங்களில் இருந்து விடுதலை அடைய வைக்கும்.
அனர்த்த முகாமைத்துவ செயற்ப்பாட்டுக்குள் அரசியல் பாரபட்சம் கடந்து, மக்களை பாரிய இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் முகாமைத்துவம் உண்டா! என்கின்ற கேள்வி எழுகிறது. அனர்த்த முகாமைத்துவம் என்றால் அனர்த்தங்கள் நேரிடும்போது மக்களுக்கு மருத்துவ வசதி, நிவாரண வசதி, இருப்பிட வசதி, பாதுகாப்பு, குடிநீர் மற்றும் இவற்றுடன் இணைந்த மீள் கட்டுமானங்களை திட்டமிடல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல், ஒழுங்கமைத்தல் என்பவற்றினூடாக அமுல்படுத்தி மக்களை பாதுகாத்து மீழுருவாக்குகின்ற செயற்ப்பாடு என்று கூறலாம்.
இந்த மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் மக்கள் முன் கூறியதற்க்கிணங்க விவசாயத்தினை செய்யும் வறுமையால் பாதிக்கப்பட்ட நலிவுற்றவர்களை அதிகம் கொண்ட ஒன்றாகும். அவர்களை அடிக்கடி வரும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தனியார், அரச இத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒரங்கிணைந்த செயற்ப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவை நிறுவன ரீதியான நல்லாட்சியை  மையப்படுத்தி இருக்க வேண்டும்.

அதுபோல் இவர்கள் இடர்களை அடையாளங்காணுதல் அவற்றை கண்காணித்தல் மற்றும் சரியான முறையில் முன்னெச்சரிக்கையை மக்களிடம் கொண்டு செல்லல் போன்ற வற்றினை எல்லா மட்டங்களிலும் பொறுப்புவாய்ந்தவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அதுபோல் பாரிய இடர்களில் இருந்து உடன் மக்களைப் பாதுகாக்கும் முறையான வளங்களை (மனித, பௌதீக) அடயாளங் காணும் திட்டங்களை தயார் படுத்தவேண்டும். அத்துடன் மக்கள் மத்தியில் இடர்களின் தன்மை, அதன் ஆபத்து அவற்றில் இருந்து மீண்டு வரும் மார்க்கம் என்பனவற்றினை மக்களிடம் சென்று விழிப்படைய வைக்க வேண்;டும். அவர்களை மையமாகக் கொண்ட கிராம மட்டத்திலான அனர்த்த ஆபத்துக் குறைப்பு குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு அது சம்பந்தமான அறிவினை வழங்க வேண்டும். அதே போல் ஒரு வினைத்திறனான முறையில் அனர்தங்களுக்கு பதிலிறுத்தல், தொடர்ந்து அவற்றை மீழ் கட்டமைத்தல் மற்றும் நீண்ட காலத்தில் அவர்களை அபிவிருத்தி செய்தல் என்பனவற்றினை தயார் நிலைப்படுத்தும் திட்டங்களை வரைதல் வேண்டும்.
இவற்றை செவ்வனே நிறைவேற்றும் செயற்திட்டங்கள் மாவட்டத்தை பொறுத்த மட்டில் உள்ளனவா என்ற கேள்வி எழத் தொடங்கி இருக்கிறது. இவ்வாறான அடிப்படைத் தேவைகள் நிறுவப்பட்டு அவை தொடர்ந்து பேணப்படுதல் வேண்டும்.
மட்டக்களப்பின் விவசாயிகள் எதிர்சோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை எட்டப் படவில்லை என்ற சந்தேகமும் இருக்கிறது. விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் மீனவர்கள் தங்கள் இழப்புகளில் இருந்து மீழ்வதற்க்கான திட்டங்களை எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். 'ஒருவனுக்கு மீனை பிடித்துக் கொடுப்பதனை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்ததல்லவா?' அந்த வகையில் அவர்களை நிவாரணச் சோம்பேறிகளாக மாற்றாமல், கொள்கை ரீதியாக பொருளாதார மாற்றங்களை கொண்டு வரலாம் அல்லது காப்பீட்டு முறைகளை அறிமுகம் செய்து வைக்கலாம்.
குறித்த ஒரு பிரதேசத்தில் எங்கு வருமானத்தின் அடித்தளம் அல்லது கொள்கை சிதைக்கப் பட்டிருக்கின்றதோ அங்கு திட்டமிடலாலள்கள் கட்டாயமாக பிரசன்னமாகி பொருளாதாரத்தினை பன்முகப்படுத்தவேண்டும். அத்துடன் புதிய பொருளாதார செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் வேண்டும். இது குறைந்தளவான அல்லது முற்றிலும் அனர்த்தத்தின் எந்தவகையிலும் பாதிப்பு இல்லாத நிலையை தோற்றுவிக்கும்.

இந்நிலையில் நகர சபையின் மனித வளம் மற்றும் பௌதிக வளம் என்பனவற்றைக் கொண்டு இடர் முகாமைத்துவ மையம் ஒன்றினை ஆரம்பித்து அது அந்தச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனூடு அந்த நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி அனர்த்தத்pல் இருந்தான விடுதலையை ஏற்ப்படுத்தும் திட்டம் ஒன்றினை ஆரம்பித்து வைத்து அதனை இப்போது நடைமுறைப்படுத்தி வருவதாகக் மாநகர முதல்வர் அறிவித்துள்ளமை வரவேற்க்கத் தக்கதும் பயன்னுள்ளதுமே. ஆகவே இவ்வாறான மாற்றங்களை ஏற்ப்படுத்துவதன் மூலம் அல்லது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தினை அனர்த்தத்தின் கிடுக்கிப் பிடியில் இருந்து ஓரளவாவது மீட்டெடுக்கலாம். ஆகவே இந்த நிலையில் இங்கு கொண்டாடப்படும் பாதுகாப்பு தினம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நல்ல பாதுகாப்பு சமிக்ஞையாகவும் இருக்கும் என நம்புகிறேன். அனர்;தங்களின்போது உயிர் நீத்த அனைத்து ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திப்போமாக.

0 comments:

Post a Comment