'கடந்த காலத்தில் எந்தச் சாதனையும் நிகழ்த்தப்படவில்லை நிகழ்ந்ததெல்லாம் இந்த விநாடியில்தான். வருங்காலத்தில் எதுவும் நிகழப்போவதில்லை. நிகழ்வதெல்லாம் இந்த விநாடியில்தான்!' என்கிறார் எக்ஹர்ட் டோல். பல பேர் நாம் சென்றவற்றை நினைத்தே இருக்கின்ற விநாடியை, சந்தோசத்தினை நான் உட்ப்பட இழந்து விடுகிறோம் அல்லவா!. என எக்ஹர்ட் டோல் குறிப்பிடுவதனை அவர் அவரது “The Power of Now” எனும் நூலில் குறிப்பிடும் விடயத்தினை புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நமது வாழ்க்கைக்கு பொருத்தி பார்க்கவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
'தோல்வி என்று எதைச் சொல்வீர்கள்? எதிராளியுடன் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியாத புள்ளி, தோல்வி. ஆந்த விநாடியில் அதை நாம் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேற்றிக்காகத்தான் திட்டமிடுகிறோம், போராடுகிறோம். ஆனால் அதையும் மீறி நம் கணக்கு தப்பும்போது எதுவாயினும் எதிர்கொள்வதுதானே சமயோகித நிதர்சனம்! தோல்விகளிடம் மட்டுமே நாம் சரணாகதி அடையத் தேவையில்லை. வெற்றி, வேதனை, சாதனை, சோதனை போன்ற அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாம் சரணாகதி அடையப் பழக வேண்டும். என்கிறார் எக்ஹர்ட் டோல்.
இதனையே சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு உறைக்கும்படி வேறு விதத்தில் சொன்னார் 'மனிதனின் இலட்சியம் இன்பம் அல்ல, அது அறிவே. இன்பமும் போகமும் வந்தே தீரும். இந்த இன்பத்தை லட்சியமாக எண்ணுவது தவறு. தான் அடைய வேண்டிய லட்சியம் இன்பமே, என்று மனிதன் முட்டாள் தனமாக எண்ணுவதுதான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம். இன்பத்தினைப் போலவே துன்பமும் அறிவினைப் பெறுதற்க்கு அவனது ஆசிரியர்கள். அதுபோலவே நன்மை தீமைகளில் இருந்தும் அவன் படிப்பினைப் பெறுகிறான்' என்பது கடந்து வந்த தோல்விகள் எம்மை அறிவை தேட வைக்கும் ஆசான்களே அவை கடந்து போகும் வருடத்தினைப்போல் கடந்து செல்லும் போது தான் நாம் புதுப்பொலிவுடன் புது மனிதனாகிறோம்.
எக்ஹர்ட் டோல் என்பவர் கொலம்பியாவின் வான்கோவர் நகரத்தில் 13 வயதுவரை தான் நகரத்தில் வசித்து வந்தார் எனக் குறிப்பிட்டார். இனம் புரியாத மன அழுத்தம் காரணமாகத் தினமும் தற்கொலை எண்ணம் வந்து தன் கழுத்தை தானே நெரிப்பாராம். அதன் பிறகு தனது இருப்பை முழுவதுமாக உணரச் செய்யும் சக்தி தனக்கு கிடைத்ததாகவும் அது பல அபூர்வங்களைச் சாத்தியப்படுத்தியதாகவும் சொல்கிறார். தனது இருப்பை உணர்வது என்றால் 'த பவர் ஒவ் நவ்' என்று புன்னகைக்கிறார்.... என விகடன் பத்திரிகையில் சொல்லி இருந்தது.
நாம் நம்மை உணரக் கற்றுக் கொள்ள வேண்டும் நம்மை உணருவது என்றால் என்ன? என்பதனை விட ஆர்மாத்தமாக உணர முயற்சிக்க வேண்டும் என்கிறார். அது ஆத்மார்த்தமாக உங்களின் எல்லாக் கவனத்தினையும் ஒரு புள்ளியில் குவிக்கும், உங்கள் மனச் சலனங்களை கட்டுப்படுத்தும் மனநிலை தான் உங்களை உணர்வது. ஏன்கிறார்.
அப்போது அவரிடம் ஒருவர் கேட்கிறார் 'எனது சிந்தனைகளை, எண்ணங்களை கட்டுப்படுத்துவதனைச் சொல்கிறீர்களா? எனது சிந்தனைகளின் திசையை நான் தானே தீர்மானிப்பேன் அதில் என்ன தவறு? அதற்கு அவர் ' சகட்டு மேனிக்கு சகல விசயத்தினையும் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதுதான் நம்மிடம் உள்ள சிக்கல். சதா சிந்திப்பதும் ஒரு நோய்தான்.
நாய்களுக்கு எப்படி எலும்புத் துண்டை நக்கி விளையாடப் பிடிக்குமோ, அதுபோல தான் நமது மூளைக்குச் சிக்கலில் சிக்கிக் கொண்டு மீழ வழி தெரியாமல் தவிக்கப் பிடிக்கும். நாம் விரும்பினால் மட்டும் தானே கை, கால் விரல்களை அசைக்கிறோம். அதைப்போலவே மூளையையும் நாம் விரும்பும் சமயம் மட்டுமே சிந்திக்க அனுமதிக்க வேண்டும். மூளை நம்மைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. உங்கள் இறந்த காலக் காயங்கள், எதிர்கால மாயங்கள் பற்றி சிந்தித்து கையில் இருக்கும் தங்கக் தருணங்களை தவற விடாதீர்கள்' என்று பதில் கூறி எம்மை எல்லாம் பிறக்கும் புது வருடத்தினைப்போல் புதிதாக வாழச் சொல்லும் இவரின் வார்த்தை உன்மையிலேயே வாழ வைக்கும் வார்த்தை தான். எத்தனையோ துன்பங்கள் சென்றும் அவை எம்மை துரத்துவதாக, எம்மை நம் மூளை நிம்மதி இல்லாமல் செய்துவிடுவதனால் நாம் நமக்கு கிடைக்கிற தங்கத் தருணங்களை நாளாந்தம் துலைக்கிறோம். அவ்வாறான பழயவற்றை எல்லாம் வீசி பதிதாய் பிறப்போம்.
சுவாமி விவேகாநந்தர் கூறினார் 'இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்..அவன் விசாலமான இதயம், பரந்த மனம் (உயர்ந்த செயல்) இவற்றைப் படைத்திருக்க வேண்டும்...உலகத்தின் துயரையும் துன்பத்தையுமட் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்கு தேவை... உணர்வதோடு நில்லாமல், இயற்க்கையினுள்ளும் அறிவிலும் ஆழமாக ஊடுருவிக் காண்பவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்க்காமல் அந்த உணர்சியையும், அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன். மூளை, இதயம், செயல், இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை. என அவர்; கூறியது போல் நல்ல சிந்தனைகளை செயலாக்கி உயர்ந்த வாழ்வினை வாழ இந்த நிமிசமே வாழுவோம். அப்போது தோல்லிகள் பயந்து ஓடி விடும்.
0 comments:
Post a Comment