ADS 468x60

24 July 2012

பாலன் பிறந்த வேளை மகிழ்ச்சி பிறந்தது மட்டக்களப்பில்

'குழந்தைகளுக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் உதவியாகும், இந்த மழை பொழுதிலும், பசியாலும், கொடிய வெள்ளத்திலும் இடம்பெயர்ந்து வாடும் இந்த குழந்தைகள் எப்படி இந்த கிறிஸ்த்மசை கொண்டாடுவது என்று எண்ணி இருந்திருப்பார்கள்! இவர்களை தேடி வந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்த இத்தனை ஏற்ப்பாடுகளையும் செய்த இந்த குழுமத்தினரை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்' என்று மகிழ்ச்சியோடு பாஸ்ட்டர் ஐசையா தனது ஆசீர்வாதச் செய்தியோடும் இந்த விழாவினை ஆராதனையுடனும் ஆரம்பித்து வைத்தார்.


பாலன் பிறந்த வேளை வானத்தில் ஒரு பெரிய நட்ச்சத்திரம் மிளிர்ந்தது, இந்த அழகிய நிகழ்வினை நடாத்திய போதும் அன்புக் குழந்தைகளின் கண்களிலும் மனங்களிலும் அந்த ஒளியைக் கண்டோம். மிகவும் பின்தங்கிய, வறிய கிராமங்களில் மாங்கேணியும் ஒன்று, 'பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' என்பதற்க்கிணங்க இவர்கள் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து 2004 சுனாமியாலும்  மற்றும் தற்போதைய வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டு அயலவர்களின் வீடுகளில் தற்போது தங்கி வாழும் பரிதாபம் அவர்களையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

இந்நிகழ்வின் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது
                                                           
பிறரை மகிழ்விப்பது என்பது பெரிய விடயம். கவலை, வறுமை, பயம், துக்கம், பசி போன்ற வற்றால் இருளாய் இருந்த குழந்தைகளின் மனங்களில் அரவணைப்பு, ஆசிர்வாதம், பாடல், ஆடல், பரிசு, என்பனவற்றினால் ஒளியேற்றினோம். வாழைச்சேனை லிவிங் கிறிஸ்டியன் அசம்ளி மண்டபத்தில் 22.12.2012 அன்று காலை 9.30 மணியளவில் எங்கள் குழுமத்தின் உறுப்பினர் திரு அன்ரன் ஜெசன்வி அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்வினை மகிழ்சியுடன் கொண்டாடினோம்.

'சாவு எல்லோருடைய சரித்திரத்தையும் முடித்து வைக்கிறது, இயேசுவுக்கு அது ஆரம்பித்து வைக்கிறது. என்று அகமகிழ்ந்தனர். இயேசு அவர்களிடம், செல்லுங்கள் உண்மையின் வார்த்தைகளை உலகுக்கு சொல்லுங்கள், நற்செய்தி அறிவித்தலை ஆரம்பமாக்குங்கள். அது போன்றுதான் இந்தக் குழுமத்தினர் எமது குழந்தைகளுக்கு நற்செய்திகளை கொண்டு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். இது போன்று எமது பிரதேசம் எங்கும் மகிழ்சி உருவாக்க உங்களுக்கு ஆண்டவர் சர்வ வல்லமையினையும் தருவாராக' என  ஐசையா பாஸ்ரர் தெரிவித்தார்.
 'அம்மா சொன்னா, சாப்பாட்டுக்கே வழியில்ல அதுக்குள்ள கொப்பி பென்சில் எல்லாம் கேக்காத, பழய கொப்பில இருக்கிற ஒத்தயில எழுது என்டவ. அந்தக் கவலயிலதான் இருந்தம் சரியான சந்தோசம் அண்ணா நீங்க தந்த அத்தனை கொப்பி, கொம்பாசு, பென்னு, சாப்பாட்டுப் பொட்டி, அது நிறைய இனிப்பு அப்பிடி சந்தோசம் நன்றி' என கண்களில் ஆனந்தம் பெருக்கெடுக்க கூறினாள் மலர்விழி.

வெளியே மழை வெள்ளம்; அடிக்க உள்ளே இசை வெள்ளம்;; ஒரே சந்தோசமாக இருந்தனர் சிறுவர்கள் ' எனக்கு வரும்போது இருந்த கஸ்ட்டம் இப்போ தெரியல. அக்கா மாருடைய அழகான டான்ஸ் அதுபோல அண்ணாமாருடைய நடனம் எனக்கு ரொம் பிடிச்சிருந்தது' என்று மாங்கேணியில் இருந்து வந்த நிதன் கேட்டபோது ஆர்வத்துடன் கூறினார்.
'உன்மயா நத்தார் பாப்பா என்ட கையப் புடிச்சி இழுத்து ஆட வைச்சிட்டாரு எனக்கு சரியான சந்தோசம் அப்புறம் இனிப்பெல்லாம் தந்தவரு எனக்கு நல்லா புடிச்சிருக்கு இஞ்ச கூட்டி வந்ததுக்கு நன்றி' என ஆசையாய் பதிலளித்தார் கலந்து கொண்ட சிறுமி யாளினி.

இத்துடன் கரோல் கீதம் இசைக்கப்பட, கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசிப் பொருட்கள் வழங்கி நிகழ்வினை நிறைவு செய்தோம். இந்த அடிக்கும் வெள்ளத்திலும் இந்த நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர்களை கஸ்ட்டத்தில் இருந்து மகிழ்ச்சிக்குள் குறித்த நேரத்துக்குள் அவர்களை சந்தோசப்படுத்தியதோடு, அவர்களது கல்விக்கான ஊக்குவிப்பாகவும் இந்த நிகழ்வினை மாற்றி ஒழுங்கு பண்ணியிருந்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்..

எனவே எமது சமுகம் இயேசுநாதர்போலவே எல்லா துன்பங்களையும் அனுபவித்து விட்டது. இனி அவர்களை சந்தோசமான, அபிவிருத்தியான மாற்றம் நோக்கிய பாதையில் செலுத்தவேண்டியது நாம் அனைவர் முன்னும் உள்ள பாரிய பொறுப்பாகும். ஆதனை நோக்கி நாங்கள் முதல் படி வைத்திருக்கிறோம். அனைவரும் இந்த நல்ல நாளில் அந்த சுபீட்சமான குறிக்கோளினை இலக்காக வைத்து பயணிக்க வேண்டுகிறோம்.

சிறுமியர்கள் நடனமாடுகிறார்கள்

   கரோல் கீதம் இசைக்கும்போது
சண்டா தாத்தாவின் குதூகலத்தில்



 பரிசுப் பொருட்களுடன் சிறுவர்களை மகிழ்விக்கும்போது
பாஸ்ட்டர் ஐசையா வழங்குகிறார்
திருமதி சுரேஸ் வழங்குகிறார்
  


பரிசுப் பொருட்களுடன் பரவசத்தில்  

0 comments:

Post a Comment