ADS 468x60

28 October 2015

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே -நமைக் 
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!


கருவானாலும் தமிழ்தாய் வயிற்றில் கருவாவேன்- ஒரு
கனவானாலும் உரிமையை வெல்லும் கனவாவேன்- எனது
வாக்கானாலும் வீட்டை காக்கும் வாக்காவேன்- நம்
வலியை மறந்த நரிகளுக்கெல்லாம் புலியாவேன்- நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

தேர்தல் என்றால் தெருத் தெருவாக வருவாரே - உனை
தேனே மானே உயிரே என்று குழைவாரே -நாளை
வேலையும் வீடும் தருவேன் எனவும் சொல்வாரே -அவர்கள்
வென்றதும் இனத்தை விற்றதில் பிழைத்து போவாரே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

பூனைகள் போலே மூலையில் சுறுண்டு தூங்காதே-வெறும்
பானையைப் போலே முழுதும் இழந்து ஏங்காதே - எமை
ஏய்த்திடும் கோழைகள் மாய்திட செய்யும் நாள்வருதே- அதில்
புயலென எழுந்து புலர்ந்திடும் பொழுதில் வாக்கிடுவோம்
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே
தமிழா தமிழா தமிழா தமிழா!


தேர்தல் காலத்தில் என்னால் எழுதப்பட்ட ஆதரவுக் கவிதை

0 comments:

Post a Comment