ADS 468x60

04 December 2015

மற்றவரும் பின்பற்றும் தமிழ் நாகாிகம்..

எல்லோருக்கும் அவரவர் பண்பாடுகள், உணவுவகைகள், கலாசாரம் என்பன மீது ஒரு இறுக்கமான விருப்பு இருப்பது அவர்களது உன்மையான தோற்றத்தை காட்டுவதாய் அமையும். சிலர் அவரவர் இனத்துவத்தினை, கலாசாரத்தினை பேணிக்கொள்ள வெட்க்கப்படுவதனையும் மறைத்துக்கொள்வதனையும் ஒரு நாகரிகமாகக் கொள்ளுகின்றனர்.

இன்றய தமிழ் இளந்தலைமுறையினர் அவற்றை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை போற்றிவந்த பல நிகழ்வுகள் யுத்தத்துடன் யுத்தமாக அடிபட்டுப் போயிற்று.


இருப்பினும் நாடுகளைக் கடந்து வாழ்ந்து வருபவர்கள்கூட இங்கு வந்து அவற்றையெல்லாம் ஆசையோடு பின்பற்ற எமது சமுகம் பின்செல்லவிட்டுவிட்டது.

சிங்களவர்கள் அவற்றை இன்றும் ஆசையுடன் அவர்களது கலாசாரத்தினை போற்றி பாதுகாத்து அவற்றை பின்பற்றும் பொழுது எமது நிலைமையை நினைத்து வருத்தப்படும் நேரங்கள் அதிகம்.

பல்கலைக்கழகம்கள் மற்றும் பாடசாலைகளில் அவற்றை ஊட்டிவளர்க்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுதல். 

0 comments:

Post a Comment