
வாழத் தவறியவன்
மெல்லிய சிரிப்பில்
மென்மையான பேச்சில்
தூக்கத்தை துலைத்து
இன்பத்தை பருகியவன்
காறை எலும்பு வரை
கறுத்திருந்த குருதிகளை
மாற வைத்தவள்!
கண்கள் இரண்டினுள்ளும்
கண்ணாடி மாட்டிக்கொண்டு
காணும் காட்சியானவள்!
ஈரம் தொட்டு வரும்
இன்பக் காற்றைப் போல
பாரம் குறைத்துவைத்தவள்
நான் நட்டுவைக்கவில்லை-அன்பை
அறுவடை செய்து போக
நீ விட்டுவைக்கவில்லை
மறுபடி மறுபடி என்னை துரத்த
காலம் எனக்கும் உனக்கும்
பொதுவுடமை மறுக்கவில்லை
காதல் எனக்கு மட்டுமா
தனியுடமை? பொறுக்கவில்லை.
எதையும் கொடுத்துப்பார்- நீ
பன்மடங்கு பெற்றுக்கொள்வாய்
இதயம் எடுத்துப்பார்
உலகையே கற்றுக்கொள்வாய்
இத்தனை நாட்களுக்கா
இத்தனை புரிதலுக்கா
இத்தனை புன்னகைக்கா
இத்தனை ஆறுதலுக்கா
இவன் என்னை நேசிக்கிறான்
நீ நினைப்பது தவறில்லை
கண்ணீரில் நனைப்பதையே
தவறென்கிறேன்!
யாசகம் செய்பவனை விட்டு
வாசம் செய்பவனை வாழவைக்கிறீர்கள்
உள்ளவரிடம் தான்
உவந்து கேட்கலாம்!
தவித்த முயலை அடிக்கலாமா?
குவித்த அன்பை குலைக்கலாமா!
எத்தனை நாள் என்னை அடிப்பீர்கள்
உண்மையை சொல்லுவதாய்
உள்ளத்தை நசிக்கிவைக்கிறீர்கள்
நான் கொடுத்துவைத்தவனா
கேட்காமல் எடுத்துக்கொள்ள
படுத்தாலும் பாழ்பட்ட நித்திரை
எடுத்துவிடுகிறது இரவுகளைஎல்லாம்
இத்தனை ஆசை
எவர்மேலும் கொண்டதில்லை
வலிந்த மனமுடைய நான்
மெலிந்து போகிறேன்-பறவாயில்லை
உண்ணாவிரதங்களையும்
உறங்கா இரவுகளையும்
எண்ணா வலிகளையும்
உங்களிடம் கேட்ட அன்புப்பிச்சைக்கு
காணிக்கை தந்த
பெருந்தன்மை உங்கள்
தருமத்தை வாழவைக்கட்டும்!
0 comments:
Post a Comment