ADS 468x60

26 May 2017

விபுலாநந்தர் பணியில்

இவர் பணியில் செல்ல இலகில்
எவர் உண்டு இன்னும் உலகில்

மட்டு மாநிலத்தின் சொத்தாய்
எட்டுத் திசையும் மலர்ந்தகொத்தாய்
முருகனின் அருளால் மயில்வாகனனாய்
முத்தமிழில் உருகி வித்தகனாய்

துறவில் கலந்து விபுலாநந்தராய்
தமிழை உயர்த்தும் பேராசானாய்
மொழியில் தேர்ந்த விஞ்ஞானியாய்
அறிவில் தெழிந்த கலைஞ்ஞராய்
இயற் தமிழ் நல்கும் வல்லுணராய்
இசைத் தமிழ் உயர ஆய்வாளனாய்
நாடகத் தமிழ் நல் ஆசானாய்
கல்வியைப் பொழியும் பண்டிதராய்
எத்தனை எத்தனை அவதாரம் இங்கு

வெள்ளையனின் பிடியில் சிக்கி
வேரறுந்த சமூகத்தில்
எல்லையில்லாக் கல்வியினை
ஏழைக்கம் கிடைக்கும் வண்ணம்
பள்ளிகள் நூறு கட்டி
படிப்பை உயரச் செய்தவர்

சாதிக்கொடுமை சொல்லி
சாவடித்த கல்விச் செல்வம்தனை
ஆதித் தமிழ்க் குடியின்
அறவழியில் வந்தெமக்கு
சாடித் தகர்த் தெறிந்து
சாதனைசெய்த தமிழன்

பாலர்படிக்க பள்ளிகளும்
பயிந் தமிழ் ஓதத் திண்ணைகளும்
மூலைமுடுக்குகள் எல்லாம் நிறுவி
மேலைத்தேயக் கல்விதனையும்
மேதினில் எல்லோர்க்கும் பெற
கல்வியில் சமத்துவத்தினை ஏற்றே
கருத்தோடு எடுத்து வைத்தார்

வாழையடி வாழையாக தமிழ்
வாரிசுகள் எங்கும் ஓங்க
பண்டிதர்க்கும் புலவர்க்கும் பண்ணிசைக்கும்
பாவலரும் சமயக் குரவரும்
ஆசான்களும் அறிஞ்ஞர்களும் அறமூட்டும்
ஆன்மீக வாதிகளையும் ஆக்குவித்தவர்

நூல்கள் பல எழுதி
நுண்ணறிவைப் பரப்பியவர்
சொற்கள் லட்சம் கொண்ட
சொற் களஞ்சியம் உருவாக்கியவர்
பத்திரிக்கை பல தொடங்கி
பாரினில் கல்வி செய்தார்.

0 comments:

Post a Comment