ADS 468x60

18 May 2017

முள்ளி வாய்க்கால் முற்று!

முள்ளி வாய்க்கால் முற்று
முடிந்து போகாத கூற்று
ஆப்பாவி மக்களின் பாவம்
அடங்காது அவர்களின் சாபம்
அரசியல் விளையாட்டில் அகப்பட்டு
தொலைந்தவர் நாமல்லோ அழிபடடு
குடியிருப்புக்கள் எல்லாமே படையிருப்புக்களாயின
குடிமக்கள் எல்லாமே குளம்குட்டை தேடின
ஓவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு பேச்சு
ஓண்ணாத மக்களுக்கு போகுது மூச்சு
பாராளு மன்றத்தை அனுபவிக்க என்று
பாவம் நம்மக்களை அடகுவைக்கிறார் இன்று
கட்சிக்கு கட்சி சண்டை
கதிரைக்கு உடையுது மண்டை
குடிசைக்கு வழியில்லாமல் சனம்
கும்பிடுது இன்னொருவனை எம் இனம்
காலை இழந்தவர் இரு கண்ணை இழந்தவர்
சாலையில் வெடிபட்டு சவமாய் விழுந்தவர்
குடும்பத்தை தொலைத்தவர் குற்றுயிராய் இழைத்தவர்
இடம்விட்டு இடமோடி ஏழையாய் முளைத்தவர்
போர்தந்த பரிசுகள் போகாத சுவடுகள்
நீயே உனக்கு துணை நீயே உயிர்கு பலம்
பாயும் புலியென பேசும் கயவரை
தாயும் தகப்பனும் என நம்பி வெம்பி
போயும் போயும் இருக்கும் நாட்களை
இல்லாது செய்யாதீர்
இறைவன் இருக்கிறான் எல்லோர்கும் அருள்வான்!

0 comments:

Post a Comment