ADS 468x60

27 October 2012

எமது சமுக ஆர்வலர்களால் தும்பங்கேணி, திக்கோடை பகுதிகளில் புதிய சோளம் விதைகள் இலவசமாக வழங்கி வைப்பு


எமது மட்டக்களப்பின் நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் இம்மக்களின் வறுமையயை களையும் முதற்ப்படியாக இதுவரை பாவனையில் இல்லாமல் கிடந்த நிலங்களை அடையாளங் கண்டு அவற்றை பயன்மிக்கதா மாற்றி, சுமார் 100 ஏக்கர் சோளச் செய்கையாளர்களை இனங்கண்டு புதிய முறையிலான இச்செயற்த்திட்டத்தினை அறிமுகம் செய்து பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளனர். எதுவித பயனையும் எதிர்பாராமல்  இம்மக்களின் முன்னேற்றம் கருதி நல்ல இன சோளம் விதைகளை வளங்கி வைக்கும் நிகழ்வு 21.10.2012 அன்று திக்கோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.




மட்டக்களப்பு மாவட்டம் குறிப்பாக அங்கு உள்ள வளங்களைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற ஒரு பிரதேசமாகும். இவர்களில் அனேகமானவர்கள் மரபுரீதியான சந்தை செயல் இழந்த உற்ப்பத்தி செய்கைகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலே தானியப் பயிர் விளைவிப்பதில் அதிக பங்களிப்பினை இந்த மக்கள் செலுத்தி வருகின்றனர். சேனைப்பயிர் செய்கையாக இவற்றை மகா போகத்தில் மாத்திரம் மேறக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் இந்த சேனைச் செய்கையை வருவாய் ஈட்டும் துறையாக மாற்றி, அதில் மாற்றத்தினை ஏற்ப்படுத்த எமது மாவட்ட ஆர்வலர்கள் முன்வந்து மாற்றம் காண முனைந்துள்ளனர்.

உற்சாகமாக இந்தத் திருப்பு முனையை ஏற்றுக் கொண்டு பார்த்திருக்கும் விவசாயப் பெருமக்கள்
'எங்களுக்கு இந்த நிலத்தையும், இந்த குளத்தையும் இந்த மக்களையும் விட்டால் வேறு உலம் ஒன்றும் தெரியாது, ஆனால் நீங்கள் எங்கள் காலடியில் வந்து சொல்வதையும் வழிகாட்டுவதையும் நினைத்தால் இன்னும் ஒரு உலகமும் இருக்கிறது என்பதனை உணரக்கூடியதாக உள்ளது தம்பி' என்று பயனாணி கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.

உன்மையில் இந்த உதவியானது காலா காலமாக மரபுரீதியில் இச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு, வருமானம் குறைந்தவர்களுக்கு, இதை மட்டும் நம்பிக் கிடப்பவர்களுக்கு இந்த உதவி சாலப்பொருத்தமாக இருக்கும்.
         உள் அன்போடு நல்ல சோளம் விதையை உவந்தளிக்கும் திரு.சிவலிங்கம் அவர்கள்.
திரு.சிவலிங்கம் அவர்கள் விதைகளை வளங்கி வைத்து பேசுகையில் 'இந்தச் பயிர்செய்கை மூலம் நீண்ட காலத்தில் புதிய பல மாற்றத்தினை ஏற்ப்படுத்த திட்டமிட்டுள்ளோம். புதிய பயிர்ச்செய்கை மூலம் புதிய சிந்தனையை ஏற்ப்படுத்தி இம்மக்களுக்கு தொழில் வாய்ப்பை அதிகப்படுத்தி, வருமானத்தினை பெறச் செய்வதனூடாக இம்மக்களின் கல்வி அறிவை முற்றாக அதிகரித்தல் வேண்டும். இவற்றோடு உலகமே எதிர்நோக்கியுள்ள உணவுப்பற்றாக்குறைக்கு சவாலாக இந்த மக்களை உருவாக்குதல் என்பன போன்ற இன்னோரன்ன குறிக்கோள்களை கொண்டு இந்த மக்களை இடைத்தரகர்களிடம் சிக்க வைக்காமல் நேரடியாக கம்பனிகளிடம் தொடர்புபடுத்தி அவர்களை சந்தை சார்ந்த ஆர்வலர்களாக மாற்றுவதே எமது நோக்கம்' என்று கோடிட்டு காட்டினார்.
           சோளச் செய்கையாளர்களை தேடி களத்தில் நாங்கள்

அபிவிருத்தியில் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் கிராமிய சிறிய விவசாய செய்கை வினைத்திறனான முறையில் செய்கை செய்கை பண்ணப்படுவதனால் அந்தப் பகுதி மக்களின் வேலை வாய்ப்பினை அதிகரிக்கச் செய்கிறது இதனூடு அந்த மக்களின் வருவாய் மட்டம் அதிகரிக்கிறது இந்த நிலமை அவர்களது வருவாயை உயரச் செய்வதுடன் அந்த பிரதேசத்தின் வறுமையினையும் குறைத்து விடுகிறது.
ஆகவே தனியார் முதலீட்டாளர்கள் நலன் விரும்பிகள் இவர்களைப்போன்று இம்மக்கள் மீது அக்கறை கொண்டு இவ்வாறான தொழில் முயற்ச்சிக்கு ஊக்க மளித்து எமது தமிழ் மக்களின் உயர்ச்சிக்காக கைகோர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இத்துடன் இதன் உற்ப்பத்தி பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி அவர்களே முழுப்பயனையும் பெற்று நல்ல நிலைக்கு கொண்டு வர வழி சமைக்கவேண்டும்.
                               சந்தோசமாக இருக்கும் சிறுமியோடு நாங்கள்
அன்பார்ந்த எமது மக்களே இப்பேர் வாய்ந்த நல்ல மனிதர்களை பாராட்டுவதன் மூலம் இன்னும் இவர்களை ஊக்குவிப்பதோடு மற்றவர்களையும் இவர்கள் போன்று ஈடுபட தூண்டிவிட உங்களை அன்பாக வேண்டும்.

நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம்.

0 comments:

Post a Comment