ADS 468x60

02 December 2017

மண்ணின் கனவுகளைச் சுமந்துவரும் 'ஊர்க்குருவியின் உலா'

நடைபெற்று முடிந்த புத்தக வௌியீட்டு நிகழ்வினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினர், அதன் செயலாளா் ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான் வே.தவராசா அவர்கள் தலைமையில், இனிதே நடாத்தி முடித்து வைத்தனா்.
தமிழ் சங்கத்தினரின் தட்டிக்கொடுப்பினையும், பாராட்டினையும் முழு உதவியினையும் நான் மனதில் இருத்தி நன்றி கூற விரும்புகின்றேன்.
தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் எமது நிகழ்வில் மாத்திரம் காலையில் இருந்து மாலை வரை வெறும் இதமான கோடையாக வெயில் எறித்தது. வர்ணபகவானின் ஆசிதான் எம்மை அன்று வடிவாக நடாத்த உதவியது. நன்றி இயற்கையே! மனிதர்களை விட உன் உணர்வு பெரியதுவோ!

எமது மண்ணை மணக்கவைத்து எனது நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்துப்பா, மற்றும் இறைவழிபாட்டை இனிமையாய்ப் பாடி ஆரம்பித்த என்னுயிர் தம்பி விதுஷன் லிங்கம் அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் கண்ணா. அத்துடன் இந்த நிகழ்வில் "மட்டு மண்ணே வணக்கம்" என்னும் பாடலைப் பாடி எனது நிகழ்வினைப் பூரணப்படுத்திய இந்த உதவியை மறக்க முடியாது. ஜீவனாத் தம்பி இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்து அதை எனக்கு தந்துதவியது ஒரு பெரிய சந்தோசம் நன்றி தம்பி உங்களுக்கும்.
பல வேலைகள் இருந்தும் இந்த நிகழ்வு சிறப்புற அழைப்பை தட்டிக்கழிக்காமல், வந்து ஆசியுரை வழங்கியதுடன் நில்லாமல் எனது கிராமத்தினையும், என்னையும் பெருமைப்படித்திச் சென்ற, சொல்லின் செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், பீடாதிபதி, மட்டக்களப்பு காயத்திரி பீடம் அவர்களுக்கு முதல் நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மிக முக்கியமாக எமது மண்ணின் பொக்கிசங்களாக இருக்கும், சமகாலத்தில் அரங்குகளின் பக்கம் அழைத்துவரப்படாத மாஸ்டர் சிவலிங்கம், கவிஞர், பண்டிதர் வாகரை வாணன், கலாபூசனம், தேனூரான் ஆகியோர் முறையே கலைக்கோன், கவிக்கோன், மற்றும் கலைச் சக்கரவர்த்தி என இந்நிகழவில் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இவா்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த போதும் எனது அன்புக்கு கட்டுப்பட்டு வருகை தந்தமை எனக்கு கிடைத்த அங்கிகாரம் என நினைக்கின்றேன்.
அவர்கள் எனது நிகழ்வில் கலந்துகொண்டு என்னை ஆசீர்வாதப்படுத்தியதுடன் என் நிகழ்வை குன்றில் விளக்காய் ஒளிரச் செய்தமைக்கு எனது கோடான நன்றிகளை இவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
பல்வேறு வேலைச் சிரமத்தில் இருந்தாலும் ஒரு எழுத்தாளனை தட்டிக் கழிக்க முடியாது, என்ற ஏற்றத்துடன் அழைத்த மாத்திரத்தே வந்து தன்னுடைய நிகழ்வாக இதை எடுத்துக்ெகாண்டு அதிதிகளாக கலந்து என்னை தடடிக்கொடுத்து, சிறப்பித்த Prof.மா.செல்வராசா முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இலக்கியவாதி, கல்வியியலாளர், எழுத்தாளர், முன்னாள் அரச அதிபர் உடுவை S. தில்லைநடராசா ஆகியோர்க்கு எனது மனமுவந்த நன்றிகளை சொல்லிக் கொள்ளுகின்றேன்.
அத்துடன் இந்நிகழ்வில் முன்னிலை வகித்த Dr. க.பிரேமகுமார், சிரேஸ்ட்ட விரிவுரையாளா , முன்னால் உபவேந்தர்; கிழக்குப் பல்கலைக்கழகம், Dr.க.இராஜேந்திரன், சிரேஸ்ட்ட விரிவுரையாளர், முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம், வைத்திய நிபுணர் Dr.க.அருளானந்தம், சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், Eng.ந.சிவலிங்கம், மாவட்ட உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம,; மட்டக்களப்பு, Dr.கு.சுகுணன்;, வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை;, Dr.சு.சிவரெட்டினம்;, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், , திருமதி.சுரேஸ் ஜெயப்பிரபா, சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், திரு.சோ.ஜெகநாதன், துறைத்தலைவர் கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால், சைவப் புரவலர்.வி.ரஞ்சிதமூர்த்தி, ஆகியோருடன் முன்னாள் மாநகர சபை ஆணையாளர் ச.நவநீதன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோ.கருனாகரம் ஆகியோருடன் புத்திஜீவிகள், கலைஞர்கள், ஊட கநண்பர்கள், ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்த நூலை உலகத்துக்கு நிறுத்துக்காட்டும் வண்ணம் மனமுவர்ந்து வந்து நூல் அறிமுகவுரை மற்றும் நயவுரை ஆகியவற்றை மிக நேர்த்தியாக நல்கிய அன்பன் நண்பன் க.மோகனதாசன் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அவர்களுக்கு எனது பாராட்டையும் நன்றியையும் கூறவேண்டியவனாக இருக்கின்றேன்.
இவற்றுக்கு அப்பால் இவ்விழாவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து செம்மையுற நடாத்திச் சென்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.இன்பராசன் அவர்களுக்கும், அன்புக்குரிய செங்கலடி மத்திய கல்லூரி மாணவி செல்வி.குளோரியா அவர்களுக்கும், மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி ச.ரவிச்சந்திரன் அவர்களுக்கம் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடன் மழை வெயில், சாப்பாடு தண்ணி பாராது தோழோடு தோழ் நின்றுழைத்த சகோதரன், வே.குகதாசன் ஆசிரியர், த.சுகிதானந்தராசா அபிவிருத்தி உத்தியோகத்தர், த.சித்தாத்தன் ஆசிரியர் மற்றும் நா.தயாநிதி வர்த்தகர் இவர்களுடன் எனது ஏனைய அனைத்து உதவிகளையும் நேராகவும் மறைமுகமாகவும் செய்துதவிய அனைத்து உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடுகின்றேன்.
இந்த விழாவை சுவையாக நடாத்த மிக அருமையான அழகான, மண் வாசைன மணக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றி எல்லோரையும் ஒரு கணம் சுவற வைத்த செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியர் திருமதி.சருமிளா பிரபாகரன் அவர்களுது மணவச் செல்வங்கள் அனைவரையும் அவர்களது பாதம் குனிந்து பாராட்டி என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இதற்கும் மேலாக இந்தக் கவிக்கோர்வையின் உருவாக்கத்தில் பல தட்டிக்கொடுப்புகளும், ஊக்குவிப்புகளும் காலம் கடந்தாலும் மீட்டுப்பார்க உள்ளம் பணிக்கிறது. முதலில் இந்தக் கவிதைகளையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து அழககாக அனுப்பிய எனது நண்பி உஷாந்தினி அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியுடன் நினைவுகூற விரும்புகிறேன்.
இந்த நூலுக்கு ஆசியுரை தந்து என்னை ஆசீர்வதித்த கிழக்கு இந்துக்குருமார் ஒன்னிறியத் தலைவர் சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் ஐயா அவர்களுக்கும், இந்த நூலை ஆசையோடு எழுதத்தூண்டி என்னைப் பற்றி இந்த நூலின் அட்டையில் பதிப்பிடுவதற்கு எழுதித் தந்த படைப்பாளி, விமர்சகர், பெண்ணியம் எழுத்தாளர் யேர்மனியைச் சேர்ந்த அன்பிற்கினிய அக்கா சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கும், இந்த கவிதை நூல் வெளிவருவதில் அன்போடு தட்டிக்கொடுத்து வாழ்த்துரைகள் வழங்கிய உலக மற்றும் மலேசிய தமிழ்ப் பேரவையினதும் தலைவர் திருவாளர் ப.கு.சண்முகம் அவர்களுக்கும், கொழும்பு தமிழ்ச்சங்க தலைவரும், தாயக ஒலியின் ஆசிரியருமான திருவாளர் தம்பு சிவா அவர்களுக்கும் மற்றும் சிந்தனையாளரும் எழுத்தாளரும் முன்னால் மாவட்ட செயலாளராகவும் இருந்த திருவாளர் உடுவை எஸ்.தில்லை நடராசா அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அதற்கு மேலாக இந்தப் புத்தகத்தின் அணிந்துரையினை செம்மைசெய்து தந்த ஐக்கிய இராட்சியத்தினைச் சேர்ந்த கலை ஆர்வலரும், படைப்பாளரும், சிந்தனையாளருமாகிய திருவாளர் பாலசுகுமார், மேனாள் முதன்மையர் (பீடாதிபதி), கலைகலாசாரப் புலம் கிழக்குப் பல்கலைக் கழகம் அவர்களுக்கும், மகன் என அழைத்து தட்டிக்கொடுத்து இந்த நூல் சிறப்புற வாழ்த்துரை தந்த கனடாவைச் சேர்ந்த இலக்கிய வாதியும், சமுக சிந்தனையாளருமாகிய அன்னை பிலோமினா கிரிஸ் அவர்களுக்கும், என்னை மயிர்கூச்செறியும் வரிகளால் கவிவாழ்த்து படைத்த யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் திருவாளர் தமிழருவி: அம்பலவன் புவனேந்திரன் அவர்களுக்கும், உணர்ச்சி வரிகளால் வாழ்த்துரைத்து ஊக்குவித்த ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர் அம்பிகா வாசுதேவன் அவர்களுக்கும் நான் எனது உளமார்ந்த நன்றியை நவில்கின்றேன்.
அடுத்து உடன்பிறவாச் சகோதரனாக இருந்து அடிக்கடி தட்டிக்கொடுக்கும் வைத்தியர் நடராஜா சஞ்சீவன் அவர்களை நினைவுபடுத்தி நன்றி சொல்ல விரும்புகிறேன்.
அதுபோல் என் படைப்புகளை நாதட்டி இரசித்து நல்ல கருத்தை நாளும் சொல்லி எழுத வைத்த திருவாளர் அன்ரன் ஜெசன்வி அங்கிளுக்கும், என் ஓசையற்றிருந்து கவிதைகளை ஆசையுடன் பாடி அரங்கேற்றிய அன்பர் நண்பர் ச.இன்பராசன் உதவிப்பணிப்பாளர் அவர்களுக்கும், கலைக்கல்லூரியில் ஆசானாய் இருந்து என் கவிகளை உலகத்துக்கு காவிய பாடகர் தம்பி வாகிசனுக்கும் அதுபோன்று என்பாடல்களைப் பாடிய ஒஸ்லோ தயாழினி, அமெரிக்காவைச் சேர்ந்த யோகராஜ், தங்கை பிரணவி, தம்பி லுகர்சன், சண்முகநாதன் அங்கிள் இன்னும் பாடிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
என்னை ஒரு உடன்பிறப்பாக எண்ணி எல்லா வகையான உதவிகளையும் எந்த நேரமும் உவந்தளித்து தட்டிக்கொடுத்து வழிகாட்டி என்னை பாதுகாத்து என் ஒவ்வொரு படிமுன்னேற்றத்தையும் மனதார பாராட்டி மகிழ்ச்சி கொண்டு இருந்து வருகின்ற எஸ்.பி.எம் குடும்பத்தினருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடையாது.
இரண்டு தலைமுறையை தன் பிள்ளைகள்போல் கலைப்பாதையில் இழுத்து சென்று வழிகாட்டியாக இருக்கும் எமது கலாபூசணம் கவிஞ்ஞர் தேனூரான் அவர்கள் காணும்போதெல்லாம் தணி ஏதாவது வெளியிடுங்கள் என் ஆற்றுப்படுத்திய அன்னாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இதற்கெல்லாம் மேலாக நேராகவும் மறைமுகமாகவும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் எனது பெற்றோர், உறவினர்கள் என் உயிரினும் மேலான எமது வாசகப் பெருமக்களுக்கும் இந்த இடத்தில் என் நன்றிகளைப் பதிவு செய்வதுடன் இதில் நன்றி சொல்ல தவறியிருந்தால் அவர்கள் அத்தனைபேருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை பதிவிட விரும்புகிறேன்.
அத்துடன் இக்கவி நூலை அழகாக புத்தகமாக்கிய மயூரா அவர்களுக்கும் இதை அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
இந்த நூலை வெளியிட என்னை தட்டிக்கொடுத்து உதவிக்கொண்டிருக்கும் நிக் அன்ட் செல்லி அமைப்பின் ஸ்த்தாபகரை நான் மிக வாஞசையுடன் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவதற்கு இருந்த சட்டத்தரணி மு.கணேசராசா தலைவர், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் மற்றும் இந்நிகழ்வின் ஆய்வுரையினை நிகழ்த்த இருந்த கலாநிதி எஸ்.அமலநாதன் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரமுடியவில்லை என தங்களது வருத்தத்தினை தெரிவித்ததுடன் அவர்களது வாழ்த்துக்களையும் எனக்கு சொல்லியிருந்தனர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
அத்துடன் எனது சக உத்தியோகத்தர்கள், எனது புத்தகத்தினை எழுத்துச் சரிபார்த்து தந்த கலைச்செல்வன், இன்பராஜன் மற்றும் எனது புத்தகங்களை கொழும்பிலிருந்து கொண்டு தந்த தம்பி ஸ்ரீ, மற்றும் இந்நிகழ்வை செவ்வனே நின்று நடாத்தி தந்த எனது மருமக்கள்மார் அனைவரையும் நெஞ்சாhர நன்றிகூருகின்றேன்.
முன்னே வேண்டுகிறேன் பிழைகள் இருப்பின் கலைவிழிகொண்டு மறு நூல் மலர உங்கள் வாழ்த்துகளின் எதிர்பார்புடன் இதைப் படைத்துள்ளேன். நன்றிகள்.
இந்த ஊர்க்குருவியின் உலாவில் கண்ட காட்சிகளை மனதில் பட்டவற்றை கவிதைகளாக தொகுத்திருக்கிறேன். நான் ஏன் இதை தொகுத்து வெளியிட வேண்டும் என்றால் அதற்கு பல காரணங்கள் என் கண்முன் விரிகின்றது.
விசைப்பா பாடுகின்ற சமுகத்தில் இசைப்பாக்கள் குறைந்து போச்சி, விருத்தப்பாக்கள் பாடிய நாள் போய் வருத்தப்பாக்கள் அதிகரித்துள்ளது, ஐந்திணை புகழ்ந்த நாட்கள் கடந்து அழிவினைப் பாடலாச்சி, முட்டுக்கட்டைகள் கூடிய நாட்டில் முண்டுகொடுப்போர் குறைந்துபோச்சி, சும்மா எழுதுபவர் மத்தியில் சுவையாய் எழுதுபவர் அருகலாச்சு, அம்மானை காவியத்தின் பின் அடுக்குமொழி அழிந்து போச்சு, சுருங்கிவிட்ட இவ்வுலகில் குறுகச் சொல்வோர் குறைந்துபோச்சி, தடைகளையே சுட்டும் உலகில் விடைகளைப் பகர்வோர் மறைந்து போச்சு, பழையதையே போற்றும் இவ்வுலகில் புதித புனைவோர் களையிழந்துபோச்சி இந்த இடைவெளிகளின் நிரம்பலாய் கை மண்ணளவு கற்றதில் இருந்து இக்கவிநூலை எமது மக்களின் இரசனைக்கும், சிந்தனைக்கும் என விருந்தாக 02.12.2017 அன்று காலை 9.00 மணிக்கு மகஜன கல்லூரி மண்டபத்தில் இதன் முதல் வெளியீட்டை செய்திருந்தேன்.
என் முகநூலில் ஜொலித்தவைதான் என் முதன்நூலாக என் பெற்றோருக்கு சமர்ப்பணமாக்குகியிருந்தேன்..
இந்த கவிக்கோர்வைக்குள் புகுந்து உலாவருவோர் ஒவ்வொருவரும் ஊர்குருவியின் சிறகுமுளைத்து பறந்த பலவித அனுபவங்களை புதிதாக பெற்றவர்களாக வெளிவருவீர்கள் என்பது திண்ணம்.
கைகட்டி பின்னே நின்று
கடிவாளம் முன்னே போட்டு
கொடிதாக வாழ்ந்த காலம் போனதம்மா
பொய்சொல்லி வேடம்போடும் பொழுதொரு பேச்சிபேசும்
பொல்லாத கூட்டம் தனை வேரறுப்போம்

எஸ்.ரி.சீலன்

நிகழ்வுகளின் நிழல்கள்!
























0 comments:

Post a Comment