
இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தன் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களிடமும், அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கவிதை வெளியீட்டு நிகழ்வில் ஆசியுரையினை சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார், பீடதிபதி, காயத்திரிபீடம் மட்டக்களப்பு அவர்கள் வழங்க இருக்கின்றார்.
இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் முகமாக கலை நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பின் முதுபெரும் கலைஞர்களாக விளங்கும் மாஸ்ட்டர் சிவலிங்கம், கவிஞ்ஞர் வாகரைவாணன், கலாபூசணம் கவிஞ்ஞர் தேனூரான் ஆகியோர் கௌரவித்து பாராட்டப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வினை திரு.ச.இன்பராசன், உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொகுத்து வழங்க, இந்த நிகழ்வில் அறிமுக உரையை க.மோகனதாசன் சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம் அவர்கள் தொடர ஆய்வுரையினை கலாநிதி எஸ்.அமலநாதன், மேலதிகச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவர்களும் நிகழ்த்த உள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு அன்புக்குரிய ஊடகவியலாளர்கள், ஆர்வமுள்ளவர்கள், கலைஞர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த முயற்சிக்கு ஊக்கம்தந்து உதவுமாறு அனைவருக்கும் ஆசிரியர் தயவான அழைப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
'ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா!'
//எனது முதற் கவிதை நூல் வெளியீடு சம்மந்தம்மான செய்தியை முடியுமானவரை பத்திரிகைகளில், முகப்புத்தகங்களில், இணையவௌிகளில் வெளியிட்டு உதவுமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
0 comments:
Post a Comment