ADS 468x60

11 March 2010

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது....


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் பெருமை, வித்தகம், பன்முகப்பணி, பரவலான அறிவு என பல பல. பல்லாயிருவர் ஒரவரிடமே அமையக்கூடியவை. அந்த மகான் செய்த தொண்டு தூய்மையானது. பெற்ற பேறு பெருமளவானது. எல்லாவற்றையும் துறந்த தூய சந்நியாசியாய் இருந்து, இருந்தமிழே உன்னால் இருந்தேன், விண்ணோர் விருந்தமிழ்தும் விரும்பேனென்று தமிழை துறக்க மாட்டாமல், முத்தமிழும் துறைபோகத் தொண்டு செய்தவர்.

கண்டு யாழ் நூலும், நாடகத்துறையை நனி விழங்க மதங்கசூலாமணியும் தங்தவர். தூய மனமும் இனிய உரையும் அஞ்சாத போக்கும், பணிவான இயல்வும் கொண்டவர். வடநாட்டு நகரங்களிலும், தெற்கில் சென்னை, சிதம்பரம், மதுரை முதலான நகரங்களிலும், தஞ்சை பெரு நகரத்திலும் அவர் புகழ் நிலவவிட்டுப் போனவர். யாழ்ப்பாணத்தில் அவர் பணி பெரிது. சென் பற்றிக்ஸ் கல்லூரி, மானிப்பாய் இந்தக்கல்லூரிகளில் பணி செய்தவாறே, இங்கே நாடகத்துறையை வளர்த்ததோடு சைவ பூர்வாச்சிரமத்தில் இளமையிலேயே புலமை ஊறப் பெற்று பல மொழிகள் அறிந்து, விஞ்ஞானத்துறை நன்கறிந்து, வேதாந்த துறையில் புகுந்து விழுமிய நூல்கள் தேர்ந்து இராமகிருஷ்ண மடத்தை அலங்கரித்தவாறே, தனித்துவமான போக்கில், ஆலயம் தொழுது என்றும் சம்பிடத்தில் திருநீறு வைத்திருந்து பரவலாகப்பூசி சிவனை மறவாச் சிந்தையுடன் வாழ்ந்தவர்.

 அண்ணாமலை, பேராதனைப் பல்கலைக்கழகங்களில் முதல் பேராசிரியராக இருந்து தழிழ் மொழிக்கு ஏற்றம் கொடுத்தவாறே இயற்றமிழ் வளம்பெற கட்டுரைகளும் பாடல்களும் எழுதியதோடு, இசை மரபு வித்தியா விருத்திச் சங்கத்தையும். ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினையும் வளர்த்ததோடு கலா நிலையத்திற்கும் வித்திட்டவர் ஆவார். அவர் பெருமையை அறிந்த மாணவர் கூட்டம் மறைநது வருகிறது. அவரிடம் படித்தவர்கள் அவரைப்பற்றி நிறையச் சொல்லவேண்டும் அவர் மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் அணைத்த உயிர்பாலம். அந்த உயிர்பு உயிர்ப்பாகவே நிலவுதல் வேண்டும்...

வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியினைக்கு
வாய்த்த மலரெதுவோ
உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுடுவது....

எனக்கு மட்டுமல்ல அனைவர்கும் பிடிக்கும் வேதாந்த சாறு அவர் இயற்றிய கவிதைகள்அவர் இலங்கைக்கே கிடைத்த முத்து.

0 comments:

Post a Comment