ADS 468x60

03 March 2010

உலகை வியக்கவைத்தவள்.........

சேய்- உன்
வயிற்றில் பிறந்ததால்
மட்டுமல்ல
செவ்வாயில் சீவனம் செய்ய
சந்திரனில் சஞ்சரிக்க
ரத்தத்தில் உயிர் கலந்து
கடுப்பு பால் தந்த
தாய்- நீ

இவள் விரல் நுனிகள்
தந்தியை மட்டும்
மீட்டவில்லை
சரித்திரம் படைக்கும்
எத்தனையோ மன்னர்களுக்கு
உணவினையும்
ஊட்டி இருக்கின்றது.


இமைகட்கு முள்வேலியிட்டு
சுமைகளை சுகமாக்கி
எங்கள்
கனவு கப்பலுக்கு
விழிகாட்டிய விடிவெள்ளி..
இவள்
பள்ளிக்கூட இதிகாசங்களில்
வெள்ளிச்சரமாய் மின்னும்
முகப்பக்கம்...

தெய்வம்- அது
கண்ணுக்கு தெரியாத
மாயை அல்ல
மதம் பிடித்தோர்
உருவச்சிலைகளும் இல்லை
அது(அவள்)
உயிரை கருவாக்கி
உலகை உருவாக்கி
உன்னை மனிதனாக்கிய
பெண்ணே!

உன்மைகள்
தணலில் கருகும்போது
கயவர்களை கண்களால்
தீயிட்டு எரிக்கும்
கண்ணகி இவள்..
இளமை சக வறுமை
சமன் கொடுமை- இது
ஓளவையார் சமன்பாடு
அதை மாற்றி
இளமை சக அன்பு
சமன் வாழ்கை- என்று
தன்னையே அர்பணிக்கும்
தெரேசா இவள்...

இன்னும்- இவள்
அள்ளி அணைத்து
கொஞ்சிடும் -பேதை
கண்ணில் காதல்
நதி பாச்சும் -மங்கை
மணந்தோர்கு
மாலை சூட்டும் -மடந்தை
தொப்புள் கொடி
உறவு தரும் -அரிவை
தோழில் பிள்ளையை
தூங்கவைக்கும் -தெரிவை
குலத்தை பேணிக்காக்கும் -பேரிளம்பெண்
கும்பிடும் தெய்வமாய் -மூதாட்டி
ஓ...
இவள் பருவங்கள் எல்லாம்- உலகை
புருவம் உயர்த்தி வியக்க வைக்கும்
துருவங்கள் ஆனதப்பா!!!

0 comments:

Post a Comment