ADS 468x60

12 July 2011

அனர்த்தங்கள் மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு-

யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.


CBC உலகச் செய்தி அறிக்கைப்படி அமெரிக்காவின் றீட்டா சூறாவளி, சைனாவின் பூமியதிர்ச்சி, அவுஸ்த்திரேலியாவின் வெள்ள அனர்த்தம் மற்றும் கெயிட்டியில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் என்பன விஞஞானத்தினை மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதனை காட்டுகின்றது அல்லவா?
மனிதன் இயற்கையை நேசித்த போது இயற்கை மனிதனுக்கு அரனாகவும், இயற்கையை தூசித்தபோது அவனுக்கு அரக்கனாகவும் இருப்பதனை நாங்கள் கண் முன்னே கண்டுகொண்டு இருக்கின்றோம் அல்லவா. அவுஸ்த்திரேலிய பழங்குடி ஒருவனிடம்; மரபு ரீதியான உங்கள் விவசாயச் செய்கைக்கும், நவீன முறையில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது எனக்கேட்ட போது அதற்க அவன் சொன்ன பதில் ' நாங்கள் அன்னையின் மார்பில் பால் குடிக்கிறோம் ஆனால் அவர்களோ அவளின் மார்பைக் கீறி பால் அருந்துகிறார்கள்' என்று சொன்னார். மிகவும் பொருத்தமான ஒரு பதிலாக அமைந்திருந்தது அது. 

காடுகளை அழித்து, இயற்கையை சிதைத்து பயிரிடுவது ஓரிரு வருடத்துக்கு பயன் தந்தாலும் நீண்ட காலத்தில் அந்த மண்ணின் மேற்ப்பரப்பினை முற்றாகச் சிதைத்து விடுவதுடன் அது அவனுக்கே தீங்கு விழைவிக்கும் ஒன்றாக மாறும் பேர் அனர்த்தங்களாக உருவெடுப்பதனையே நாம் பார்க்கின்றோம்.ஆகவே இயற்கையோடு ஒன்றி வாழ்வதே மனிதன் கற்றுக்கொள்ளவேண்டிய பெரிய பாடமாகும்.

0 comments:

Post a Comment