ADS 468x60

21 May 2024

தும்பங்கேணியின் இளைஞர் விவசாய திட்டத்தை மீட்டேடுப்போம்!

தும்பங்கேணி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு விவசாய குடியேற்றக்கிராமமாகும். விவசாயத்துக்குகந்த மண்வளம் கொண்ட இந்த நிலப்பிரதேசத்தில் ஏற்றுமதி விவசாயம் செய்யவென் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இங்கு கொச்சிக்காய் (மிளகாய்) செய்கை பண்ணப்பட்டதனால் கொச்சிப்பாம் எனவும் அழைக்கப்பட்டு மக்களிடையே பிரபல்யமானது.  இது இளைஞர் விவசாயத் திட்ட ம் எனவும் அழைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தும்பன்கேணி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வந்த இளைஞர் விவசாயத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த கட்டுரை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 1990-களில் ஏற்பட்ட போர் நிலைமைக்குப் பிறகு ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து வரும் சவால்களை மனதில் கொண்டு, உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த திட்டம் வளத்தினைக் கொண்டுள்ளது.

20 May 2024

இஞ்சியின் விலை 5000! நாமும் விளைவிக்கலாம்!

இன்று நாம் பொருளியல், வர்தகம் மற்றும் விவசாயத்தில் எல்லாம் விசேட பட்டம் பெற்றவர்களை நூற்றுக்கணக்கில் உருவாக்குகின்றோம். இதனால் விவசாயம் செழித்து அவர்களின் வியாபாரம் வளர்ந்து மக்களின் பொருளாதாரம் உயர்கின்றதா? இல்லை. ஆனால் இன்னும் எமது மக்கள் எதிர்கால தேவையை அறியாதவர்களாகவும் அதற்கு ஏற்ப தமது உற்பத்திகளை நிரம்பல் செய்யாதவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் தொடர் இழப்புக்கள், நஷ்டம் காரணமாக விவசாயிகள் திறனற்ற தொழிலாளியாக கூலியாளாய் குவைற், கட்டார், சவுதி என தொழிலை மாற்றி தொலைந்துபோகின்றனர். மட்டக்களப்பின் அடையாளமே விவசாயம் அதனை தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். இதற்கு யார் யார் காரணம்?

12 May 2024

பாலர் பாடசாலைக் குழந்தைக்கு மொபைல்போணா?

ஒரு மொபைல் போன் அல்லது கணினி ஒரு குழந்தையின் சிறந்த நண்பராக மாறக்கூடாது. பாலர் பாடசாலை மாணவி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மகொன பிரதேசத்தில் இருந்து ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருத்தமான செய்தி. ஐந்து வயது பாலர் சிறுமி அகால மரணமடைந்தார். இந்த பெண்ணுக்கு மொபைல் போனை கொடுத்தது யார்? 

இப்போது குழந்தைகளுக்கு பொழுதுபோக்கிற்கு மொபைல் போன் கொடுக்கும் சமுதாயம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் சிக்கலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அல்லது தங்கள் சொந்த வேலையை இழப்பதற்காக பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் சிறிய குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வழங்குகிறார்கள். இது காலப்போக்கில் கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பழக்கம். 

01 May 2024

உழைக்கும் மக்களின் உரிமை தின ஞாபகப்படுத்தல் - 2024

என் அன்பு உழைக்கும் தோழர்களே!

உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின நாளாகும்.

உலகினில் கௌரவமிக்க தலைவர்களுக்கு சிலைகளும் அவர்களுக்கென சிறப்பான நாள்களும் கொண்டாடப்படுகின்ற போதும் நாட்டின் முதுகெலும்பாக காணப்படக்கூடிய தொழிலாளர்களை வலுவூட்டும் வகையிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் பொருட்டிலுமே இந்த தொழிலாளர் தினம் ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.