ADS 468x60

23 April 2018

"கொம்புச்சந்திநாதம்” இசை இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பு, தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தினை முன்னிட்டு எமது கலைஞர்கள் ஒன்னறிணைந்து கொம்புச்சந்தி விநாயகர் புகழ்பாடும் #கொம்புச்சந்தி_நாதம் இறுவட்டானது, 2018.04.23 திங்கட்கிழமை அன்று ஆலயத்தின் கௌரவ தலைவர் திரு.விமலானந்தராசா தலைமையில் ஆலய பரிபாலன சபையினரால் கொம்புச்சந்திப் பேராலய மகா மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. 


இந்த இறுவட்டில் உள்ளபாடல் வரிகளை நான் இயற்றி இருந்தேன். அத்துடன் இந்தப்பாடல்களை தேற்றாத்தீவு கலைஞர்களான ஆசிரியர். வீ.உதயகுமார், ச.செல்வப்பிரகாஷ், த.லுகர்சன் ஆகியோர் பாட இதனை ஒலிப்பதிவுசெய்து இணைத்திருந்தார் சி.ஜீவநாத் அவர்கள். இந்த இறுவட்டுவெளியீட்டின் நிகழ்வுகளை செவ்வனே தொகுத்து அதனை அரங்கில் அளிக்கைசெய்திருந்தார் கவிஞ்ஞர் தேனூரான் அவர்கள். விழாக்கால பிரதமகுருக்களில் ஒருவரானசிவம் சிவாசாரியார் அவர்கள் இந்தநிகழ்வில் ஆசியுரையினை வழங்கியதுடன் இதன் முதல் இறுவட்டினையும் பெற்றுக்கொண்டார்.
Image may contain: 3 people, people standing“இவ்வாறான எமது பாரம்பரியங்களை, கலாசாரங்களை, தொன்மைகளை ஏனைய அனைவருக்கும் பறைசாற்றும் எடுத்தேத்தும் செயற்பாடுகளை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தவறவிடாமல் நாம் செய்துவரவேண்டும். அத்துடன் இந்த இளம்கலைஞர்கள்தான் எமது வருங்காலச் சொத்து அவற்றை பாதுகாப்பதே எமது அடுத்த பரம்பரையின் வித்து” எனவும் கவிஞ்ஞர் தேனூரான் புகழாரம் சூட்டியதுடன் பாடலாசியர் மற்றும் பாடியவர்கள், ஒலிப்பதிவாளர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தும் வைக்கப்பட்டார்கள்.
நான் குறிப்பிட்டிருந்தேன் “இது எமது கடமை, கலைக்கும் எமது தமிழுக்கும், அதன் வழிபாட்டு மரபுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது, அவை அன்று ஆலயங்களைச் சுற்றியே வளர்ச்சியடைந்தன. அதனால்தான் தமிழும் சமயமும் இன்றும் உலகில் முதனிலை வகிக்கின்றது. அவை அத்தோடே முடிவடைய விடாது எம்மால் எது இயலுமோ அந்த இயலுமையயை இருக்கின்றவளங்களைக் கொண்டு அந்தக் கைங்கரியங்களை செவ்வனே செய்ய அனைவரும் சங்கற்பம் கொள்ளவேண்டும். அதற்கு இவ்வாறான பேராலயங்கள் துணைபோவதனை யிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்” என எனது ஏற்புரையில் குறிப்பிட்டிருந்தேன்.
Image may contain: 5 people, people standing
Image may contain: 3 people

0 comments:

Post a Comment