
திரு விழாக் காண வருவேன் -எமை
காத்து காத்து அருள்வாயே!
அறுபதடி உயர்ந்து
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
ஆடி வரும் அழகை
பாடி நிதம் தொழவே
கூடாத மனம் என்ன மனமோ
உலகெல்லாம் உனைத் தேடி வரவே!
உயர்ந்தாயே திருக் கோயில் தனிலே
கணநாதா நின் பாதம் பணிந்தேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
பாடி நிதம் தொழவே
கூடாத மனம் என்ன மனமோ
உலகெல்லாம் உனைத் தேடி வரவே!
உயர்ந்தாயே திருக் கோயில் தனிலே
கணநாதா நின் பாதம் பணிந்தேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
0 comments:
Post a Comment