
இந்த இறுவட்டில் உள்ளபாடல் வரிகளை நான் இயற்றி இருந்தேன். அத்துடன் இந்தப்பாடல்களை தேற்றாத்தீவு கலைஞர்களான ஆசிரியர். வீ.உதயகுமார், ச.செல்வப்பிரகாஷ், த.லுகர்சன் ஆகியோர் பாட இதனை ஒலிப்பதிவுசெய்து இணைத்திருந்தார் சி.ஜீவநாத் அவர்கள். இந்த இறுவட்டுவெளியீட்டின் நிகழ்வுகளை செவ்வனே தொகுத்து அதனை அரங்கில் அளிக்கைசெய்திருந்தார் கவிஞ்ஞர் தேனூரான் அவர்கள். விழாக்கால பிரதமகுருக்களில் ஒருவரானசிவம் சிவாசாரியார் அவர்கள் இந்தநிகழ்வில் ஆசியுரையினை வழங்கியதுடன் இதன் முதல் இறுவட்டினையும் பெற்றுக்கொண்டார்.

நான் குறிப்பிட்டிருந்தேன் “இது எமது கடமை, கலைக்கும் எமது தமிழுக்கும், அதன் வழிபாட்டு மரபுகளுக்கும் தொடர்பு இருக்கின்றது, அவை அன்று ஆலயங்களைச் சுற்றியே வளர்ச்சியடைந்தன. அதனால்தான் தமிழும் சமயமும் இன்றும் உலகில் முதனிலை வகிக்கின்றது. அவை அத்தோடே முடிவடைய விடாது எம்மால் எது இயலுமோ அந்த இயலுமையயை இருக்கின்றவளங்களைக் கொண்டு அந்தக் கைங்கரியங்களை செவ்வனே செய்ய அனைவரும் சங்கற்பம் கொள்ளவேண்டும். அதற்கு இவ்வாறான பேராலயங்கள் துணைபோவதனை யிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்” என எனது ஏற்புரையில் குறிப்பிட்டிருந்தேன்.


0 comments:
Post a Comment