ஸ்ரீ பாலமுருகன் பால் மணல் பத்து -Part II
24 September 2010
14 September 2010
தேவதையே!
உன்னைப் பார்த்ததில்லை
விழி சேர்த்ததில்லை
இருந்தும்,
உடல் வேர்த்தேன்- உன்
வார்த்தை தேன் கலந்த
மொழியில் மயங்கி
உன்னிடம் தோர்த்தேன்!
நீ
நிலவானவளோ!
சிலையானவளோ!
மலரானவளோ!
மானானவளோ!
புரியவில்லை- விழி
உலகின் அழகை எல்லாம்....
தேடல் செய்தும் முடியவில்லை...
ஓகோ!- நீ!
இந்திரன் சபையில
மந்திரம் செய்யும்
பிரியமானவளோ!
மன்மதன் மயங்கும்
மகாராணியோ!
இல்லை இல்லை -நீ
என்னை இழுத்த காந்தம்- உன்
இதழ்கள் சிவக்கும் காந்தழ்
வெண்ணெய் மணக்கும் பேச்சு
பெண்ணே நீ பெண்ணல்ல
மயக்கும் புன்னகை!
ஒளிரும் பொன்னகை!
இனிக்கும் தேனிலா! எனக்கு தேவதை...!!!!