உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் இயற்க்கை அனர்த்தம்; ஒரு பொதுவான விடயமாக இருந்து வருகின்றது. அபிவிருத்தி அடையாத நாடுகளை மட்டுமல்ல , அபிவிருத்தி அடைந்த மேற்குலக நாடுகளையும் அடிக்கடி இயற்க்கை அனர்த்தங்கள் விட்டு வைக்கவில்லை, இருப்பினும் அவற்றின் 90 விகிதமான இயற்கை அனர்த்தங்கள், அதனால்; வரும் பாதிப்புகள், உயிர் இழப்புகள் என்பன மூன்றாம் உலக நாடுகளிலேயே ஏற்ப்பட்டு வருகிறது. இன்று இலங்கைத் தீவு இலகுவாக அனர்த்தங்களுக்கு பாதிக்கப்படும் நாடாக மாறியுள்ளது. இவை கடந்த இரண்டு தசாப்த காலத்தில் பாரிய வெள்ளம், சுனாமி, மண்சரிவு மற்றும் வறட்சி என்பனவற்றினால் மக்களை பொருளாதார சமுக அடிப்படையில் ஒரு படி பின்னோக்கி தள்ளியள்ளது.
25 December 2011
18 December 2011
திகிலிவெட்டை மக்களும், மண் வாசனையும்..
கொடுத்துச் சிவந்த கைகள் போல வளங்கொழிக்கும் கிழக்குப் புற தழிழ் விழை நிலங்களையும், தழராத சுறுசுறுப்பான படுவான் மக்களையும் பார்த்து வியக்காதவர் யாரும் இல்லை. மட்டக்களப்பின் சிறப்பே வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகளும் தான். இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் எமது தாய் மண்ணான 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்தின் 'வாங்கோ' என்று வரவேற்க்கும் மக்கள், குழந்தைகள், மாடுகள், ஆடுகள், பச்சை பசேல் என்ற பயிர்ச் செடிகள் இன்னும் நிறையவே கண்டேன்.
11 December 2011
இரக்கமற்றவள்.
நீ இரக்கமற்றவள் என்பதை- என்
அன்புப் பரிசல்களை
திரும்பத் தந்து காட்டாதே!
உன்னிடம்
விட்டு வைத்துள்ள-
எனது
அப்பாவி இதயத்தை,
ஒரு மூடி நஞ்சு கொடுத்து
கொண்டு விடேன்!
அது இன்னும்
உன்னைப் போல்
அலையும்
முகமூடிக்காரர்களுக்கு
சத்திரமாய்
அமையும் பெண்ணே!
09 December 2011
விரும்புகிறேன்.....
08 December 2011
நான் ஒரு பொறுக்கி
வயலில் கதிர் பொறுக்கி
வாய்க்காலில் மீன் பொறுக்கி
அரிசியில் நெல்லுப் பொறுக்கி
அரிக்குமேலைக்குள் கல்லுப் பொறுக்கி
கல்லூரியில் அறிவு பொறுக்கி
காதலில் இதயம் பொறுக்கி
வலைத்தளத்தில் தகவல் பொறுக்கி
வாத்தியாரிடம் பாடம் பொறுக்கி
காசி பொறுக்கி- மாஸ்டர்
கோசு பொறுக்கி- ஆசான்
ஆசி பொறுக்கி
நேரம் பொறுக்கி- பரீட்சைக்காய்
வாரம் பொறுக்கி
ஏய் பொறுக்கி பீ பொறுக்கி
எடுத்ததெல்லாம் பொறுக்கி
அரசியலில் குப்பை பொறுக்கி
ஆண்மீகத்தில் அமைதி பொறுக்கி
வெட்டியாய் வேலை பொறுக்கி
வேதனையில் வேண்டாதது பொறுக்கி
வாழ்ந்ததெல்லாம் பொறுக்கி- இதனால்
வாங்கிய பேரும் பொறுக்கி.
05 December 2011
இலங்கையின் பேண்தகு வீட்டுத் திட்ட செயன்முறைகளும், வாழ்கை முறையும்.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் அவன் வாழ்வதற்க்கு தேவையான உறைவிடம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனால்தான் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் வீட்டுத்துறை முக்கியமானதாகக் அபிவிருத்தி திட்டங்களில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பினைத் தூண்டி விடுகின்ற வகையில் எல்லாத் துறைகளையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கும் முகாமைத்துவத்தின் தேவையை வலியுறுத்துகிறது. அழகான வீடு ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானத் தேவையாகும். இது முழுவதுமாக வீட்டுக்காரரின் விருப்பு மற்றும் வாழ்கைத் தரம் என்பன மூலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. வீட்டுத் திட்டங்களில் ஏற்ப்படுகின்ற முன்னேற்றம் பல வழிகளில் நன்மை பயக்கின்றது. உதாரணமாக பொருளாதார நன்மைகள், சேரிப்புற வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி, சேமிப்பு ஊக்குவிப்பு, நேரடி மறைமுக கட்டுமானப் பணி வேலைவாய்ப்புகள் மற்றும் நுகர்வு என்பனவற்றினை குறிப்பிடலாம்.