ஓ பின்னே போய் பார்க்கிறேன்
முன்னே கொண்டு வந்தாய்
இராப் பொழுதுகள் தெரியாத
உழைப்பில் பிழைக்க வைத்தவர்
எமது இன்பத்துக்காய்
நிலாக்களை விளக்காக்கி
நிலங்களை போர்த்தி
வெயிலில் குளித்து
அவையத்துள் முந்தி இருக்கச் செய்தவர்
இதயத்துள் முந்தி நிற்கிறார்
கொழும்புக் கடையில்
மதியச் சோறு கொண்டு தந்தான்
கோறாச் சோற்றை குழைத்தபடி
ஏற இறங்கப்பார்த்தேன் ஒரு
பாறை மீன் துண்டு....
பயித்தியம் மிச்சத்தைக் கொட்டவாபோறா??
தம்பிக்கு வை எனக்கு வேணாம்!
அப்பாவின் அதட்டல்
அந்த ஒற்றை மீன்துண்டு
கொண்டுவந்து
நினைவுறுத்திய போது
என் கண்கள் பனித்த
கண்ணீர்துளிகளை எல்லா
அப்பாக்களுக்கும்
காணிக்கையாக்குகிறேன்