கிளிநொச்சி அன்று யுத்தவேக்காடு மாறாத பூமியாக இருந்தது. அது மனிதர்களை மாத்திரமல்ல மரம் செடி கொடிகளையும் இழந்த பூமி. எனக்கு இந்த மக்களோடு பழக கிடைத்த நாட்கள் கடவுள் தந்த தருணங்கள் தான் என நினைக்கிறேன் .
'என்னுடய கணவர் நித்தியானந்தராசா, என்னுடைய மகன் மார்களான ஜெயராசா, மகேந்திரன் மற்று என்னுடைய மகள் ஜெகலதா என்னுடைய அம்மா, தங்கச்சி, அவன்ட ரெண்டு பிள்ளைகள், என்ட மூத்த அண்ணா அசோக்குமார், என்னுடைய மருமகள் அருந்ததி எல்லாமாக பத்து உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கிறன் தம்பி' என ஆரம்பித்தார் இராசலெட்சுமி. திருநகர் கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமமாகும். அங்குதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றர்கள்.