நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.
20 July 2014
19 July 2014
மட்டக்களப்பு வெற்றிலைக்கு இப்படியும் மகிமையுண்டா!! ஆச்சர்யம்!
கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது..
செழுமை நிறை மட்டக்களப்பு மாநிலத்தின் தென் பகுதியில் கடல், வற்றாத ஆறு மற்றும் குளங்கள் நிறைந்த தேத்தாத்தீவு, மாங்காடு, செம்டிபாளையம், குருக்கள்மடம் மற்றும் களுதாவளை போன்ற பிரதேசங்களில் ஆர்வத்தோடு செய்கை பண்ணப்படும் ஒரு பாரம்பரியப் பயிர், கற்ப்பக மூலிகையாக புராணங்களில் கருதப்படும் வெற்றிலை செடி என்றால் அது மிகையாகாது. வெற்றிலை (வெத்தில) எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்).மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. இங்கு இதை வெற்றிலைத் தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.

13 July 2014
காலமும் சந்தர்ப்பமும்..
இன்னும் அதிகரிக்கிறது
உன் நினைவினை
இந்த இடைவெளி,
ஏனோ தெரியவில்லை
பொதுவான உனக்கான
பிரார்த்தனைகள்
நீளுகின்றது -அது
என் இயலுமைக்குட்பட்டு....
யாரும் அன்பை இழக்க
ஆசைப்படுவதில்லை!
காலமும் சந்தர்ப்பமும்
அதில் கால் வைக்கிறது.
எனக்கும் அந்தக் காலம்
கைக்கொடுக்குமா!
இன்னும் புரியவில்லை
அதனால்தான்,
ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்!!
உன் நினைவினை
இந்த இடைவெளி,
ஏனோ தெரியவில்லை
பொதுவான உனக்கான
பிரார்த்தனைகள்
நீளுகின்றது -அது
என் இயலுமைக்குட்பட்டு....
யாரும் அன்பை இழக்க
ஆசைப்படுவதில்லை!
காலமும் சந்தர்ப்பமும்
அதில் கால் வைக்கிறது.
எனக்கும் அந்தக் காலம்
கைக்கொடுக்குமா!
இன்னும் புரியவில்லை
அதனால்தான்,
ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்!!