ADS 468x60

26 June 2016

கனவுகள் தொலையும் போது

கனவுகள் தொலையும் போது
வெறுப்பு வருகின்றது
வெறுப்பு வரும்போது
குழப்பம் நிலைக்கிறது
குழப்பம் ஏற்ப்பட்டால்
முடிவுகள் தெறிக்கின்றன
முடிவுகள் எடுக்க துணை தேவைப்படுகின்றது
அதுவும் இல்லாத போது
தனிமை மட்டும் வருகிறது
தனிமை ஒரு மனிதனை
கொல்லும், வைரப்படுத்தும்
இழைக்கவைக்கும்
இறக்க வைக்கும்
உருக்கவைக்கும் வெறுக்க வைக்கும்

08 June 2016

அறிவில்லாதவர்கள்!

காாியம் ஆவதற்கு பொய்யும் சொல்லலாம், காலிலும் விழலாம், நல்ல அன்பாயும் பேசிச் சாதிக்கலாம் அந்தக் காரியம் வேண்டாதவன் விதண்டாவாதம், பிடிவாதம், வரட்டுக்கௌரவத்தால் வெண்ணை திருடப்போய் தாழியை உடைத்துவிட்ட கதையாய் எல்லாத்தையும் நாசமாக்கிவிடுகிறான். ஒரு திருக்குறள் ஞாபகம் வருகிறது, //அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.// அதாவது அறிவில்லாதவர்கள் அவர்களுக்கு அவர்களது எதிரிகள் திட்டம்போட்டு கொடுக்கிற கொடிய தண்டனையைவிட அவர்கள் அவர்களாகவே தாங்களின் முட்டாள் தனத்தினால் தேடிக்கொள்ளும் தண்டனை மிகவேதனைக்குரியதாகுமாம்.... ம்ம்ம்ம் அவர்கள்தானே முட்டாள்கள் ஆச்சே இந்த திருக்குறள் எங்க புரியப்போகுதோ!!! அதுபோன்று ஒருவன் இன்னொருவரின் பின்னால் அடங்கி திரிய, தலையாட்டி பொம்மையாய் வாழ முனைகிறான் என்றால் அவன் ஒன்றில் முதுகெலும்பு இல்லாதவன் அல்லாது தானாக வாழப் பழகிக்கொள்ளாமல் தங்கி வாழும் ஒரு பிற்போக்கான். அதேபோல் நீதிக்கு புறம்பாக, அதிகாரமோ கல்வி அறிவோ, பணபலமோ எதுவுமே இல்லாமல் அல்லது இருந்து யாரும் அடக்கி ஆள நினைத்தும் அடிபணிந்து வாழதவனைக்கூட அன்பினால் அடக்கிவிடலாம். உலகில் எதைக் கையாழ்வதற்கும் பயன்படும் பெரிய ஆயுதம் அன்புதானுங்க!!