ADS 468x60

19 January 2017

நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன்

நான் 16.01.2014 அன்று நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன், அங்கு புதிதாக வந்திருக்கும் சின்னஞ்சிஞசுகளை ஆசையோடு பார்க்கச் சென்றேன். குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து குட்மோணிங் சொல்லி வரவேற்றது என்னை ஒரு கணம் பழய நினைவுக்கு கொண்டு சென்றுவிட்டது. 

இந்த ஆண்டு 42 புதிய மாணவர்கள் தேத்தாத்தீவு மகாவித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் நான் நேசிக்கும் விடயத்தில் இந்தக் குழந்தைகளும் ஒன்று. இவர்களது கல்வி முக்கியமானது, இதனால்தான் மிலேனியம் இலக்கில் கூட ஆரம்பக்கல்வியை உலகில் எல்லாருக்கும் ஊட்டுவது என்ற இலக்கை மையப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு இந்தக் குழந்தைகளுக்கு ஓரிரு கதைகள் சொல்லி அவர்களை நானும் பதிலுக்கு கவிதை, பாடல் ஆடல் என அவர்களும் தங்களது திறமையை என்னிடம் காட்டி மகிழ்ந்தனர். இங்கு பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடனும் அளவளாகிவிட்டு வரக்கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களே நான் பல காலமாக அவதானித்து வருகின்ற ஒன்று, இந்த பாடசாலை நிகழ்வுகளில் பாடசாலையோடே சம்மந்தா சம்பந்தமில்லாத மனிதர்களை மாலை மரியாதையோடு அழைத்து அரசியல்பேச வைப்பது. நீங்கள் கேட்கலாம் சிலா் அந்த வகையில் பொருத்தமானவர்கள் அவர்கள் மாணவர்களை வழிநடத்தப் பேசுபவர்கள் அறிஞர்கள், கல்விமான்கள்.
ஆனால் பிள்ளைகளின் நேரத்தை வடக்கு தெற்கு தெரியாதவர்ளைக் கொண்டு அநியாயம் செய்யும் அறிவற்ற செயற்ப்பாட்டை முதலில் பாடசாலைச் சமுகம் புறக்கணிக்கவேண்டும். கல்வியோடு சம்பத்தப்பட்டவா்களையே அதற்க்கு அழைக்கவேண்டும். இவா்களெல்லாம் முன்வந்து செய்ய எத்தனையோ விடயம் இருக்க இங்கு அவர்கள் நேரத்தை வீணடிப்பது அவர்களை தெரிவுசெய்த மக்களை ஏமாற்றும் செயலாகவே எண்ணத்தோன்றுகின்றது.
இன்னும் சிலர் அரசியல் மற்றும் அபிவிருத்திக் கூட்டங்களில் சும்மா பாடம் நடத்துவது போன்று புள்ளிவபரம், எடுத்துக்காட்டு, சம்பவங்கள், உதாரணங்கள், முன்மொழிவுகள் எதுவுமே இல்லாமல் வெட்கம்கெட்ட தலைமை தாங்குவது இந்தச் சமுகத்தையே தலை குனியவைப்பதைக் கண்டெல்லாம் நெஞ்சி பொறுக்வவில்லையே!



0 comments:

Post a Comment