
பொதுவாக இலங்கையில் 150000 மாணவர்கள் வருடம் ஒன்றுக்கு உயர்தரத்தில் தோற்றுகின்றனர். அதில் 25000 மாத்திரம் தேசிய பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஏனைய 125000 பேரின் நிலை? கேள்விக்குறியாகவே போகின்றது. "ஆசியாவின் அறிவு மையம்" என்ற எடுகோள் சரியான திட்டமிடல் இன்மை காரணமாக வேலையற்ற, வழியற்ற சமுகம் ஒன்றினை தோற்றுவித்துவரும் அபாயம் இன்று காணப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக எமது மாவட்டத்தில் பெண்களின் நிலை கவலைக்குரியதாகவே இருக்கின்றது. பல இழந்தாய்மார்கள் திறனற்ற வீட்டுவேலையாட்களாக நகரும் வெறும் மனிதவளங்களாக இருப்பதனாலும், இன்று அவர்களில் பலபேரின் நிலை மிக மோசமாகவே இருக்கின்றது. குவைத்தில் இறந்த சோ.சர்நீதியா என்ற சத்துருக்கொண்டான் பெண்ணின் நிலமை ஒரு குழந்தையை அநாதரவாக ஆக்கி இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. என்ன நடந்தது என்றுகூட தெரியாத அளவுக்கு இன்று சகோதரிகளின் நிலமை மிக மிக மோசமாக இருக்கின்றது.
தொழிலை உண்டுபண்ணும் தொழில் கல்வியை சகல மட்டத்திலும் ஏற்ப்படுத்த படித்த புத்திஜீவிகள் எம் வறிய வேலையில்லாத தாய்மார்களிடையே அவர்களுக்கு கௌரவமான பாதுகாப்பான உள்நாட்டில் வேலையை பெற்று வாழக்கூடிய சூழலை உருவாக்கி அவர்களை பணியாட்களாக மாத்திரம் அனுப்பாமல் தொழிலாளர்களாகவும் அனுப்பி எதிர்கால சந்ததியை கட்டிக்காக்கும் அன்னையர்களை பாதுகாப்போம் என இன்றய அன்னையர் தினத்தில் உறுதிகொள்வோம்.
//ஏற்கனவே முகப்புத்தகத்தில் வெளியான எனது பதிவு//
//ஏற்கனவே முகப்புத்தகத்தில் வெளியான எனது பதிவு//
0 comments:
Post a Comment