ADS 468x60

04 June 2017

மட்டக்களப்பின் வரலாற்றுப் புத்தகத்தில் புரட்டிப் படிக்கவேண்டிய ஒருவா்.

நெடு நாள் ஆசை ஒன்று, அது மட்டக்களப்பின் முது பெரும் அரசியல், இலக்கிய, கலை ஆர்வமிக்க ஒரு பேராளன் ஒருவரை பார்க்க வேண்டும் என்றுதான். அது தானாகவே எனக்கு கனிந்து வந்தது ஒரு நாள். அவரின் வாழ்க்கை பற்றி அறிய ஆசைப்பட்டேன், நேரில் சந்தித்தேன், நிறையவே பகிர்ந்து கொண்டார், அது வேறு யாருமில்லை சொல்லின் செல்வர், நாவல்லவர் செல்லையா இராசதுரை அவர்கள் தான். 

எங்களுக்கும் எங்கள் அரசியல்வாதிகள் இப்படி இருக்கமாட்டார்களா என்று ஏக்கம் இருக்கிறது 'மக்கள் தீர்ரப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் அறிஞர் அண்ணா. அவர்கள்;. அதைப் பின்னர் மக்கள் ஆட்சித் தத்துவமாக அறிவித்தார்கள் அரசின் அறிஞர்கள். மக்களுக்காக மக்களால் அமைத்துக் கொள்ளுகிற ஆட்சி மக்களாட்சி. அந்த மக்களாட்சிக்கு அத்திவாரம் போன்றதுதான் மக்களின் வாக்குரிமை, அந்த வாக்குரிமை மீது எழுப்பப்படும் மாளிகைதான் நல்லாட்சி. அந்த அரசு நடத்தும் ஆட்சிதான் மக்களாட்சி. அத்தகைய ஆட்சி நடத்தும் பொறுப்பில் அமர்பவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நா நயம் மிக்கவராக இருந்தால் மட்டும் போதாது நாணயம் மிக்கவர்களாகவும், இருக்க வேண்டும். நெஞசுரம்; கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்க்கமைவாக வாழ்ந்து காட்டியவர் செல்லையா இராசதுரை அவர்கள்.

மட்டக்களப்பினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்ப்போது தமிழ் நாட்டிலும் கொழும்பிலுமாக வசித்து வருகின்றார். மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் பழய மாணவரான இவர், இலங்கையில் சிரேஸ்ட்ட எழுத்தாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்களில் ஒருவராவார். சிறுகதை, நாவல், கட்டுரை, பேச்சு மற்றும் நாடகம் என தமிழ் இலக்கியத் துறைக்கு தனது பங்களிப்பை இன்றும் நல்கி வருகிறார்.

இராசாத்தி, பெற்ற தாயும் பிறந்த பொன்னாநாடும், தடுப்புக் காவலில் மூன்று மாதங்கள், என்னைக் கவர்ந்த உத்தமர்கள், முத்தமிழ் வித்தகர் அருட் திரு விபுலானந்தர், தீ இவள் தேன் மலர் உட்ப்பட 25 க்கு மேற்ப்பட்ட நூல்களையும் லங்கா முரசு, சாந்தி, தர்மோதயம், முழக்கம், தேநாடு உட்ப்பட 10 க்கு மேற்ப்பட்ட பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார்.

மதுரை, சென்னை, மலேசியா ஆகிய இடங்களில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மகா நாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இவரிடம் காணப்பட்ட இலக்கியப் பேச்சாற்றலானது பலராலும் கவரப்பட்டமையால் இவருக்கு 'சொல்லின் செல்வர்' மற்றும் 'நாவலர்' போன்ற விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நாடகத்துறையில் சிறந்த நடிகநாகத் திகழ்ந்த இவர் பல சரித்திர சமுக நாடகங்களில் நடித்துள்ளார். இவற்றுள் சங்கிலிய நாடகம் இவரின் நடிப்புக்கு சான்றாக அமைந்தது.

இலங்கைத் தமிழ் அரசிக் கட்சியின் ஸ்த்தாபக உறுப்பினரான இவர் 1956 தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மேயராகவும் 1979 இருந்து 1989 வரை பிராந்திய அபிவிருத்தி இந்து விவகாரம், மற்றும் தமிழ் மொழி அமுலாக்கம் அமைச்சராகவும், இலங்கை மலேசியத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பணியாற்றிய காலத்தில் மட்டக்களப்பு ஸ்வாமி விபுலாநந்தர் இசை நடனக் கல்லூரியை நிறுவியமையும், முதலாவது இந்து சமய மாநாட்டை கொழும்பில் நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

நல்லது செய்வார்கள் என்று வாக்களித்த மக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு அரசுப்பொறுப்பில் அமர்ந்தவுடன் அதிகாரம் கண்ணை மறைக்க துரோகச் செயலில் ஈடுபடுபவர்களை ஒரு நாள் இல்லையானாலும் மற்றொருநாள் மக்கள் சமுதாயம் தண்டிக்காமல் விடாது என்ற உண்மையை உணர்ந்து மக்கள் செல்வாக்குடன்  நீண்ட காலம் மக்கள் தொண்டாற்றி இன்றும் நீங்காத மக்களின் அன்புக்குரியவராக இவர் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு அரசியல்வாதி அந்த மக்களின் கலை, கலாசாரம், பொருளியல் பற்றி நன்கு தெழிவுள்ளவராக இருக்க வேண்டும் அப்போதுதான் அங்கு ஆக்கபூர்வமான விருத்திகளை செய்ய முடியும். ஏன்பதற்க்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. இன்று இவர்போன்ற சாணக்கியர்களை அரசியலில் காண்பது மிக மிக அரிது.

0 comments:

Post a Comment