ADS 468x60

29 June 2017

மட்டக்களப்பில் கேடு விளைவிக்கும் புற்றுநோய்க்கு சூடு வைக்கும் கருவி அன்பளிப்பு..

"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை.

உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே.
வேறு நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கல்வி, சுகாதாரம், என்பன இலவசமாகக் கிடைக்கப்பெறினும் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் இவை இரு துறைகளிலும் வளர்ச்சியடைந்து கொள்வதனில் பாரிய சவால்களை இன்னமும் எதிர்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் யுத்தம் வடுக்களின் சுமை, வாழ்க்கைச் சுமை என்பன அதிகரித்த காரணத்தினால் அவர்களது பாரம்பரியங்கள், மரபுகள் என்பனவற்றை இறக்கி வைக்க வேண்டிய நிலை காரணமாக வைத்தியம், சோதிடம் மாந்திரிகம் போன்ற பாரம்பரிய சிகிச்சை முறைகூட மட்டக்களப்பில் மருவி அருகிப் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயாளர்கள் ஒரு அச்சத்துக்குரிய சவாலாகும். ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புற்றுநோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாம் காணப்பட்டுள்ளனர், அதில் அவர்களின் புற்று நோயை அடையாளங் காண்பதற்கு முடியாமல் வருடாவருடம் அதிகளவான நோயாளர்கள் கல்முனைக்குடி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையம், கண்டி போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் காலி போதனா வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு அவர்கள் புற்றுநோயினை கண்டறிவதற்க்காகவும், மேலதிக சிகிச்சைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர். இதன் மூலம் மொழி, போக்குவலரத்து, பொருளாதார வசதியீனம் போன்ற இன்னோரன்ன காரணங்களால் அவர்கள் அந்த சிகிச்சையை எடுப்பதனைக்கூட புறக்கணித்து வந்தனர். இதனால் தீர்க்க முடியாத புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.

இவற்றை நன்கறிந்த எமது நாட்டிலும் மக்களிலும் அக்கறை கொண்ட கனடா வாழ் கிழக்கிலங்கை மக்கள் ஒன்றியத்தின் (Eastern Sri Lankan Association- Canada) தொண்டுள்ளங்களின் அயராத உழைப்பில் கிடைத்த நிதியுதவியில், மட்டக்களப்பில் காணப்படும் பாரிய இடைவெளிகளை நிரப்பி அதன் மூலம் நல்ல சுகாதார சேவையினை வழங்குவதற்க்காக புற்றுநோயினைக் கண்டறியும் ஒரு பெறுமதி மதிக்கத்தக்க என்டஸ்கொபி கருவியொன்று எமது குழுமத்தின் ஒருங்கிணைப்பில் 21.06.2013 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவிற்கு அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அ.பார்த்தீபன், வைத்தியசாலையின் பிரத்திப் பணிப்பாளர்களான வைத்தியர் கிறேய் மற்றும் வைத்தியர் கலா ஆகியோருடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி கு.சுகுணன்   கலந்து கொண்டு இந்நிகழ்வை பயனுள்ளதாக்கினர்.

புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அ.பார்த்தீபன் அவர்கள் கனடா சென்று இருந்த வேளை, இங்குள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் புற்று நோய் சம்பந்தமான பாரிய இடர்பாடுகளை அங்குள்ள நலன் விரும்பிகளை சந்தித்து விளக்கியவேளை, உடனடியாக செயற்ப்படும் வண்ணம் இவரின் வேண்டுகோளை செவிசாய்த்து குறிப்பாக அமிர் முருகேசபிள்ளை, சோமா ஞானபண்டிதன், வாசு அரசரெத்தினம், சிவம் விநாயக மூர்த்தி மற்றும் அஜந்தா ஞானமுத்து ஆகியோர் முன்முரமாக நின்று இந்த பாரிய நிதியினை இன்னும் பெயர் குறிப்பிடாத பலரின் அன்பளிப்பில் சேகரித்து எமது அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் உதவியினை செய்துள்ளமைக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

கனடாவில் வாழும் தமிழ் மக்களின் கூட்டு முயற்சியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்க்கான சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த குறிப்பாக சுவாசக்குழாய், மற்றும், தொண்டை போன்ற இடங்களில் காணப்படும் புற்று நோயைக்கூட துல்லியமாகக் கண்டறியும் என்டஸ்கொபி இயந்திரம் மட்டக்களப்பு மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த கிழக்கிலங்கை மக்களுக்குமே கிடைத்த வரம் எனில் அது மிகையில்லை.

அதுபோல் எமது மாவட்டத்தில் பின்தங்கிய மக்களுக்காய் முன்னின்று சேவை வழங்கிவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலைக்கும் 22.06.2013 அன்று கிழக்கிலங்கை மக்கள் ஒன்றியம்- கனடாவின் உதவியில் இங்கு சிகிச்சை பெறும் மக்களின் நலன் கருதி சில மருத்துவ ஆய்வுகூட உபகரணங்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி கு.சுகுணன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சமுகத்தின் ஒட்டுமொத்த வறுமைத் தணிப்புக்குமான மூலகாரணம் ஆரோக்கியமான சுகாதார மேம்பாடடைய சமுதாயமே!. ஒரு சமுகம் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் உற்ப்பத்தி திறனுடைய ஊழியர் படையை உருவாக்க முடிகிறது, மனித முதலீட்டில் முன்னேற்றம் ஏற்ப்படுகின்றது, அதிகப்படியான சேமிப்பு ஏற்ப்படுகின்றது மேலாக, பிறக்கும் போதே இறக்கும் குழந்தைகளை அதிகப்படியாகக் குறைத்து மிலேனியம் அபிவிருத்தி இலக்குக்;கும் கால்கோல் இடுகிறது. அதுபோல் பல்வேறு காரணங்களால் தங்கியிருப்போரின் அளவினைக் குறைத்து விடுகிறது. ஆக மொத்தத்தில் இந்த உதவி எதிர்கால சுபிட்சமான விருத்தி அடையும் மீன்பாடும் தேனாட்டை உருவாக்கும் கைங்கரியங்களில் ஒன்று என்பதில் என்னய்யா ஐயம்!!
வாழ்க்கை
நமக்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம்!

இதைக் கொண்டு
சிலரை வாழ வைக்கவும் முடியும்
பலரை அழ வைக்கவும் மடியும்

வாழவைத்தவன் சிரித்துக்கொண்டிருப்பான்
அழவைத்தவன் மரித்துக்கொண்டிருப்பான்

0 comments:

Post a Comment