என்னதான் இருந்தாலும் '''பழையன கழிதலும், பதியன புகுதலும் வழுவல.'' என்கிறது தொல்காப்பியச் சூத்திரம் சொல்லுவதுபோல் காலத்திற்கும், தேவைக்கும், சூழலுக்கும் பொருந்தாதவற்றை தவிர்த்துவிடுவதும், உகந்தவற்றை புதிதாக உள்வாங்கிக் கொள்வதும் தவறல்ல. ஆக இது பண்பாட்டிற்கும் பொருந்தும். இன்னுமொருபடி சொல்வோமானால் மாற்றம் என்ற சொல் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். என்றார் கால்மாக்ஸ்.
இதைத்தான் மானிட இயங்கியல் என்கிறார்கள். பண்பாடும் இவ் மனிதஇயங்கியல் வயப்பட்டதுவே. இன்றைய காலத்தின் தொழில் நுட்பவளர்ச்சி, உலகமயமாக்கம், மனிதத் தேவைகள், அரசியல், பொருளாதார சமூகவியல் நிலைகள். பண்பாட்டியல் கூறுகளில் மாற்றங்களையும், மருவல்களையும் ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாதது.
இருப்பினும் இந்த மாற்றங்கள் பண்பாட்டில் கலந்து ஒரு சீரான போக்கில் தொடர்சியான வாழ்வியலை நிர்வகித்துச் செல்லவேண்டும்.
ஆகவே தொல்காப்பியச் சூத்திரத்தின் உட்பொருளுக்கமைய காலத்தினதும், சூழலினதும் தேவை எதுவோ அதனடிப்படையில் பண்பாடு தன்னைப் புதுப்பித்து, மறுசீரமைத்து ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வியலையும், நெறிப்படுத்திச் செல்லNவுண்டும் என்பதே எனது வாதம்.
இப்போ பாருங்க, அன்று கேட்காதவற்றையெல்லாம் இன்று கேட்கிறம், பார்க்காதவற்றையெல்லாம் பார்க்கிறம், பேசாதவற்றையெல்லாம் பேசுறம் மற்றும் செய்யாவற்றையெல்லாம் செய்யிறம். உன்மைதான அன்றய வாழ்க்கையில மனிதவலுத்தான் முக்கியமாக இருந்தது அதனால் மனிதர்களை மதித்தார்கள் இப்போதெல்லாம் இயந்திரங்களில் மனிதன் தங்கிவாழத் தொடங்கிவிட்டான் அதனால் மனிதாபிமானம் செத்துவிடத் தொடங்கிவிட்டது.
ஓன்னுக்கு ரெண்டு வீடு அதிலும் மாடிவீடு, போதாக்குறைக்கு போற போற இடமெல்லாம் நில ஆக்கிரமிப்பு. கடற்கரையில வீடு, ஆத்தங்கரையில வீடு, மலையில வீடு நடுக்காட்டில வீடு. இப்படியெல்லாம் பெரிசு பெரிசா வீடுகட்டி ஒன்னுரெண்டு புள்ளயா பெத்து வாழுறான் பாருங்க. யாருடைய மனசும் நோகும்படியா இத நான் சொல்லல்ல இதுதான் ரெண்டுங்க. உலகத்தைப்போல் குடும்பமும் சுருங்கிவிட்டது. அன்று இயற்கையை வழிபட்டு அதற்கு மதிப்பழித்தான் அதனால் இயற்கை அழிவுகள் அன்று இன்றுபோல் இருருந்திருக்கவில்லை. ஆனால் இப்ப. இயற்கையை இரசிக்காமல் அனுபவிக்க முனைந்த மனிதனுக்கு இயற்கை பாடம் புகட்ட தொடங்கியுள்ளது. அது வெள்ளமாகவும், மண்சரிவாகவும், சுனாமியாகவும் மனிதனை அழிக்கத் துவங்கியுள்ளது.
இப்ப பார்தீங்கள் என்றால் நம்வங்கட ஒருசில முகப்புத்தக மற்றும் இணையவழிப் பதிவுகள் இதை வைத்து வஞ்சனை வளர்ப்பதனையும் பார்த்தேன். ஒரு தீயவனைப் பார்த்து நாம் நடக்காமல் ஒரு நல்லவனைப் பார்த்து நடக்க பழகலாம் தானே!. அனர்த்தம் தெற்கில் நிகழும் போது 'இம்மை மறுமை தெரியாத' அப்பாவி வறிய நலிவுற்ற மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்;. இவர்களுக்கு வேறு வேறு நாடுகள் எல்லாம் உதவும் போது நாம் வேற்றவர்கள் போல் சந்தோசப்படுவதா மனிதாபிமானம்!
இந்த இடத்தில் எனது கவிதை ஒன்று நினைவு வருகின்றது.
'சொல்லும் மொழி ரெண்டு உள்ள இனம் மூண்டு
ஒற்றுமை இன்நாட்டில் என்னாச்சு- பெரும்
வேற்றுமை வேஷரூன்றிப் போயாச்சு- இங்க
கிழக்கெண்டும் வடக்கெண்டும் மேற்கெண்டும் தெற்கெண்டும்
நல்ல மனிதரை பிரிச்சாச்சி- எமக்கு
உள்ள உரிமையை பறிச்சாச்சி
கண்ணப்பா இது என்னப்பா!
சொல்லப்பா பதில் சொல்லப்பா!' முந்நூற்றுக்கு மேல் இனங்களை வைத்திருக்கின்ற இந்தியா நூலளவும் பிசகாமல் நல்ல வைச்சிருக்கக்குள்ள மூன்று இனம் உள்ள நாட்டில என்ன ரகளையா இருக்கப்பா!
கிழக்கில் அன்று சூறாவழி, சுனாமி மற்றும் வெள்ளம் என்பன ஏற்பட்டபோது எல்லோரும் ஓடிவந்து உதவினர். அங்கு பாகுபாடு பார்க்கப்படவில்லை. யுhர் யாரோ சுய லாபத்துக்காக இதெல்லாம் ஒரு பொளப்பாய் செய்யுறாங்கப்பா, கவலையாக இருக்கிறது.
'பார் முழுதும் மனிதக்குலப் பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து
போர் முறையை கொண்டவர்க்கு நேர்முறையை விதைத்து' எனும் வரிகள் மக்கள் எதை வளர்த்துக்கொண்டு வாழனும் என்பதை புடம்போட்டுக் காட்டுகிறதல்லவா!.
இன்னொன்று பாருங்க ஒருவர் சொன்னார் 'காசு கொடுத்தும் இந்த திருவிழாவுக்கு சோடனை செய்ய யாரும் இல்ல தம்பி' என்று கல்யான வீட்டில இருந்து சாவீடு எல்லாவற்றிற்கும் கூலிக்கும் பின்னிற்கும் ஒரு தொண்டாண்மை செத்த சமுகத்தினை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆனால் இப்பவும் எல்லைப்புற கிராமங்களில் அவை இன்னும் கொஞ்சமாகவும் இருக்கிறதே என எண்ணி மனசாறிப்போகிறது.
மாணவர்களிடையே பாடசாலை மட்டத்தில் இருந்து இந்தத் தொண்டாண்மை, மற்றவர்கு உதவும் மனப்பாங்கு என்பன வளர்க்கப்படனும் தவிர குடும்பத்தில் பெற்றோர்கள் அதனை பிள்ளைகளின் காதில் எடுத்து சொல்ல வேண்டும் அப்போதுதான் இந்தத் தொண்டாண்மை வளரத்தொடங்கும், இதன் மூலம் ஒற்றுமை பலம் என்பன எம்மத்தியில் தழைத்தோங்கும் தனிமனித முன்னேற்றத்துடன் சமுக முன்னேற்றமும் இணைந்து செல்லும்.
'கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!
வாழ்கை என்பது வட்டமடா
மேலும் கீழும் ஓட்டமடா
நீயும் ஒருநாள் மேலேவா தோழா!
இனி கவலைக்கு இடமில்லையே- பயமில்லையே
எங்கள் கழுத்தினில் விடமில்லையே- வியப்பில்லையே
உந்தன் வாழ்கையில் ஜெயிக்கும்வரை- நீ
கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!'
மூதுர் பெருவெளி சம்பவம், வித்தியாவின் படுகொலை, ஏறாவூர் இரட்டைக்கொலை என சமகாலத்தில் நடந்து முடிந்த சம்பவங்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அன்றய காலத்தினை விட லெட்சக்கணக்கில் பாதுகாப்புப் படையினர் பொலிஸ் அதுபோல் பலப் பல நீதிமன்றங்கள், நிருவாக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் அதிகமாக இருந்தும் என்ன பயன்? என பலர் அங்கலாய்க்கின்றனர். நமது மக்களை எடுத்தேத்த என்ன வழி?
'வாழ்க்கைச் சுமையாலே வாடினோம்- சுடும்
வேட்டுச் சுமையாலே ஓடினோம்
துன்பச் சுமையாலே இடிந்தோம்- தூக்க
தோள்கள் இல்லாமலே மடிந்தோம்'
அன்று இவையெல்லாம் ஒன்றும் இல்லாமல் இப்படியெல்லாம் மோசாமான துர்பாக்கிய சம்பவங்கள் நடந்ததில்லை, அத்தோடு இவர்களை பாதுகாத்த யாருக்கும் கூலிகொடுத்ததும் இல்லை, அன்று அநீதிக்கு உடனடி நீதி வழங்கிவைத்தனர் அதில் பக்கச்சார்பு இருக்கவில்லை வழங்கியவர்கள் புத்தகத்தின்படி இல்லாமல் மனச்சாட்சியின்படியே அதை வழங்கிவைத்தனர். இப்பொழுது மனச்சாட்சி செத்துவிட்டது, காசுக்காக கடவுளைளோ மனச்சாட்சியையோ யாரும் மதிப்பதில்லை. எல்லாம் இழந்த நிலையில் கட்டிக்காத்த மானத்தையும் எமது இனம் இப்போது இழக்கதொடங்கிவிட்டது என எண்ணத்தோணுகிறது.
நிலத்தை நீ இழந்து விட்டாய்-நீர்
புலத்தை நீ இழந்து விட்டாய்
உயிரை நீ இழந்து விட்டாய்- சொந்த
உறவை நீ இழந்து விட்டாய்
சொந்த கடலில் மீன்பிடியை இழந்தோம்-
நெடும் காடு வீடுகளை இழந்தோம்
பசு மாடுக் கூட்டங்களை இழந்து
பள்ளிக் கோயில் சுகங்களை இழந்து
வெல்லும் வீரம் இருந்தும் மானமும் இழந்தோம்'
ஆனால் இன்றும் ஒன்றும் கெட்டுப்போகல பாருங்க, நம்ம நாட்டில நம்ம சனங்க உழைச்சுக் கட்டிய வரிக்காசில படிச்சு நாடு நாடாச் சென்று தமிழன் அப்படி இருக்கிறான் இப்படி இருக்கிறான் என்று மார்தட்டுறத்தில என்ன இருக்கு? இப்படிச் செய்யுறான், அப்படிச் செய்யுறான் எனச் சொல்லணுங்க. திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் எங்கெங்கோ இருந்தெல்லாம் இந்த ஏழை மக்களின் சார்பில் இலவசமாக வாதாட முன்வரவேண்டும், இது அந்தக் குடும்பத்துக்கு மாத்திரமல்ல எமது சமுகத்தில் வளர்ந்துவரும் இளஞ்சமூகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் அல்லவா? அதுதான் எமது தாய்கும் தாய்நாட்டுக்கும் நாங்கள் செய்யும் மிகப்பெரும் கைங்கரியமாக இருக்கும்.
எமது சமுகம் எழுச்சிபெற்றதாக முன்னேற்றங்கண்டதாக இருக்கும்போதுதான் எமக்கு அது பெருமை. சும்மா வீதியில் இறங்கி வீர் வீர் எனக் கத்துவதை யார்தான் கவனிக்கிறார்கள் என்பது அதை ஒழங்கு செய்து நடாத்துபவர்களுக்கு நன்கு தெரியும், அவர்களின் நோக்கம் அதுவல்லவே.
இதுபோல பாருங்க இப்பத்தய கல்யான வீட்டில கல்யான வீட்டுக்காரருக்குதான் பாவம் அத்தனை வேலையும் அவங்களே செய்து முடிக்கிறாங்கள். இப்போது கல்யானச் சாப்பாடு, நடைமுறைகள் மற்றும் எமது பண்பாடு வழமை இவற்றுக்கெல்லாம் மாறாக இப்போது ஒரு கல்யான வீட்டை பார்க்கலாம். ஏதோ ஒரு கல்யான மண்டபத்தினை வுக்பண்ணுறாங்க, ஒரு கோக்கிய வுக்பண்ணுறாங்க, ஏதோ மலைபோல அவிச்ச வுறைலர் கோழித்துண்டுடன் வகை வகையான அறியாத அராபியக் கறிவகைகள்;. இவற்றை சாப்பிடுபவர்களை விட குப்பையில் கொட்டுபவர்களைத்தான் அதிகம்; கண்டிருப்பீர்கள்.
அன்று அப்படியில்லை 'கறி காணாது மச்சான் இன்னும் ரெண்டு கோழியை புடிச்சு கறிகாச்சுவம்' என தேவையாக இருந்தது. ஏனென்றால் அது நம்ம ஆக்களின் கைப்பக்குவம் அத்தனையும் நாட்டுக்கறி அதை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் இருந்தனர். 'எல்லா நாம்பனும் ஓடுதென்று வகுத்து நாம்பனும் பின்னால ஓடிச்சாம்' என்கிற கணக்கில இது பட்டி தொட்டியெல்லாம் பாசனாம் ஐயோ ஐயோ!. நல்ல சாப்பாடு ஒன்ற போடுங்கப்பா! நாக்கு வரண்டு போய்க்கிடக்கு இந்த நசல் கறிகள திண்டு திண்டு.
'அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன் ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்
வயலோடே வாழ்ந்தோம் செயலோடே சேர்ந்தோம்
வெயில்லை மழையில்லை உழைப்பால் உயர்தோம்
ஒன்று சேர்ந்தோம் அந்தக்காலம் நின்று போச்சே இந்தக்காலம்
கதிர் அறுத்து புதிர்பொங்கி களவெட்டியில் பந்தல் போட்ட அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்' இப்படி அந்த நாட்களு;னும் இந்த நாட்களுடனும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அருவருப்பான மாற்றத்தை ஏற்க மறுக்கின்ற தன்மையினைக் காணலாம்.
இன்று வேலையற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகள் கைதேர்ந்த சமயல் வல்லுனர்கள். இவர்கள் ஏன் முன்வந்து நமது தமிழ் பண்பாடான சமையலை செய்துகொடுக்கும் தொழிலை ஏற்று செய்யக்கூடாது. ஆவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்கும் நம்ம நாட்டுப்புற கறிபுளிகளையும் சுவைக்கலாம் இல்லயா. அத்தோட எங்க மாவட்டத்தில இல்லாத பால் நிலையங்களா, அவற்றை டெசேட்டாக செய்து நம்ம சுத்தமான உள்ளுர் உணவை உண்டு மகிழலாம் அத்துடன் அவர்களது உற்பத்தியினையும் ஊக்குவிக்கலாம் தானே. இதற்கு எமது மக்களின் நம்இனம் மீதான அக்கறை உணர்வு மேலோங்கி இருக்கவேண்டும்.
அன்று பாட்டி மாரு தாத்தாமாரு பேரன் பேத்தியோட வளரும் மட்டும் கலகலப்பா இருந்து அவங்கட்ட இருந்து நீதிக் கதைகள், பாடல்கள், மற்றும் அனுபவங்களையெல்லாம் கற்றுக்கொண்டு அவங்கள சந்தோசப்படுத்தினாங்கள். இன்று இவங்க இரண்டு வயசிலயே கிளாஸ் அனுப்ப தொடங்கி பிஞ்சில வெம்பகைவ்கிற வேலை இல்லையா செய்யுறாங்கள். அத்தோட ரீவில காட்டூன், டப்பில கேம் இதெல்லாம் ஒரு பிள்ளைக்கு எந்த வகையில் அறவழி சிந்தனையை, மனிதாவிமானத்தை அவர்கிடம் ஊக்குவிக்கும்! அதனால்தான் என்னவோ கேட்ககூடாதவற்றைக் கேட்கிறோம் அல்லவா!
இந்த காலகட்டத்தில் மனிதன் இன்னொருவனை விட வாழனும் என நினைக்கிறானே தவிர, அவனுக்காகவும் பிறருக்காகவும் வாழ நினைப்பதில்லை குறிப்பாக எமது சமுகத்தில். அதனால்தான் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா' நம்ம நிலைப்பாடு இருந்து வருகிறது பாருங்க. இதனால் தனிமனித சுதந்திரம் மனிதனுக்கு பறிபோய்விடுகிறது, நிம்மதி இழந்து விடுகிறான் அதனால் செல்லம்மா வீட்டில இருந்த சாராய வியாவாரம் போதாமல்; போய்இன்று செல்லுமிடமெல்லாம் சாராயக்கடை, அதில் நிம்மதியடைவதாக நினைத்து இன்னும் இன்னும் அழிந்தொழிந்துகொண்டிருக்கிறது நம்ம இனம்.
இவ்வாறான விடயங்களில் ஈழத்தினதோ அல்லது இலங்கையினதோ மானிடவியல் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனூடாக பண்பாட்டியல் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் கருத்துரை செய்வதற்கும் தகுதியானவர்கள் முன்வரவேண்டும்;. அவை எமது மக்களளிடையே எடுத்துச் செல்லவேண்டும்.
இத்துறையில் ஈழத்தமிழர்கள் ஈடுபடாததற்கு கடந்த நான்கு நூற்றாண்டுகள் அரசற்ற சமூகமாகவும், அல்லது அண்டிவாழ்கின்ற சமூகமாக இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால் பிழைப்புவாதச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதனால் இச்சமூகத்திற்கு மானிடவியல் பற்றியதான நோக்கு தேவையற்றதாகப் போய்விட்டதோ தெரியவில்லை.
இருப்பினும் ஈழத்தில் கடந்த கால் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தேசிய எழுச்சி விடுதலைப்போராட்டங்கள் என்பன பண்பாட்டை மீட்பதும், பண்பாட்டைப் புதுப்பிப்பதும், ஜனநாயகத்தை விரிவாக்குவதும், மானிடவியலை விரிந்த கோணத்தில் ஆராய்வதற்குமான புதிய களமொன்றை திறந்துவிட்டிருக்கிறது சில பகுதிகளில் திறந்து விட்டீருந்தது. கிழக்கில் அதை கண்டுகொண்டதில்லை அந்த வகையில் மீட்கவேண்டிய எமது பண்பாட்டியல் கூறுகளான பின்வருவனவற்றை நன்கு ஆணியடித்து உறுதிப்படுத்தும் ஒரு பொறியே எமது சமுகத்துக்கு இன்றய தேவையாக உள்ளது, அதன் அடையாங்களை தேடிப்பிடிக்க.
1,உணவு வகையும் உணவுப்பழக்கவழக்கமும்; (விருந்தோம்பல் உற்பத்திமுறை)
2, கிராமிய உறவு நிலை (பகிர்ந்துண்ணல்)
4, கிராமியதெய்வவழிபாடும் தெய்வ வழிபாட்டுமுறைகளும் (காவடி, பறையடித்தல் கண்ணகி வழிபாடு, ஐயனார், வைரவர், ராக்கையன்)
5,மருத்துவம் உளவளப்படுத்தல் (சீராண்மை) நேத்திக்கடன், தண்ணி ஓதுதல், வீபூதி போடுதல், நாவூறு கழித்தல், நூல்கட்டுதல், கழிப்புக்கழித்தல், பேய்விரட்டுதல் புத்திமதி கூறுதல்)
6 உற்பத்திமுறையும் பாவனைப் பொருட்களும் (துலா, விவசாய உபகரணங்கள், சேமிப்பு வீடுகளின் அமைப்பு, கொம்பறை)
7, செல்வம், (நிலம் மந்தைகள்)
8 பெண்ணியம், பெண்ணியம் பாதுகாப்பு,
9, கல்விமுறைமையும், போக்குவரத்தும்.
10 சடங்குகள்
11 கலைகள்
நன்றி
0 comments:
Post a Comment