ADS 468x60

28 June 2017

எல்லைக் கிராமங்களை எடுத்தேத்துதல்- 40ம் கொலனி

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையானது மற்றுமொரு தொகுதி இசைக்கருவிகளை 40 ஆம் கொலனியிலுள்ள வம்மியடியூற்று சிவசக்தி கலாமன்றத்திற்கு 26.06.2017ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பல கலையாற்றுகை நிகழ்வுகளையும் சிறுவர்கள் அரங்காற்றுகை செய்தனர். அந்தச் சிறுவர்களுக்கு செய்த சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்வில் அதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர், வெல்லாவெளி பாடசாலை அதிபர் மற்றும் ஆலயகுரு, கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்கள்; ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். இக்கிராமத்திலுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கூட்டு வழிபாட்டை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு இந்த இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த கூட்டு வழிபாட்டின் ஊடாக பக்தி, இசை மற்றும் ஒருமைப்பாடு என்பனவற்றை பொதுமக்களிடையே வளர்ப்பதை நோக்காகக் கொண்டு இவை வழங்கி வருகின்றமை பலராலும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

'மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்றாகும். யுத்தம், அனர்த்தம், வறுமை, வேலையின்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால்  மீண்டெழுந்து வர முடியாமல் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற அதிக மக்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகும். குறிப்பாக எமது மாவட்டம் கல்வியில் வறுமையை அதிகளவில் கொண்ட ஒரு பிரதேசமாகும். காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். 

பாடசாலை மட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற கஸ்ட்ட, அதிகஸ்ட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றவர்கள்தான் ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உணவை உற்பத்தி செய்து வழங்குகின்ற விவசாயிகளாக இருக்கின்றனர். இருந்தபோதிலும், மேற்கூறிய காரணங்களினால் நலிவுற்ற ஒரு சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர். இதனால் இலகுவில் பாதிப்படையக்கூடிய ஒரு பிரிவினராக எமது கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள், எல்லாவற்றையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக அவர்களுடைய பாரம்பரியம், கலாசாரம், ஒழுக்க விழுமியங்கள், பண்பாடு, கலை வடிவங்கள் என்பனவற்றை கட்டிக் காக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எமது சமூகம் பின் தள்ளப்பட்டுள்ளது.' 

'இவ்வாறான நிலையிலுள்ள எமது சமூகத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டியது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஆனால் அந்த உணர்வு எமது மக்களிடையே சொல்லக் கூடியளவுக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமே. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் இந்துக்கள் செறிவாக வாழுகின்ற ஒரு மாவட்டமாகும். ஆனால் இந்துக்கள் பல்வேறு வகையில் மதமாற்றங்களினாலும், விழிப்புணர்வின்மையாலும், பொய்ப்பிரசாரங்களினாலும் சிறிது சிறிதாக அழிவடைந்து செல்கின்றனர். இவ்வாறான நிலையில் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி கிராமப்புறங்களை, அந்த மக்களுடைய மீளெழுச்சிக்காக கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையானது பல்வேறு கல்வி, சுகாதார, சமய, சமூக நலத் திட்டங்களை மக்களுடைய பங்களிப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றார்கள் என்பது குறுப்பிடத்தக்கது.

நிகழ்வுகளின் நிழல்கல்.





0 comments:

Post a Comment