ADS 468x60

06 June 2017

நதியாக நான் மாறவேண்டும்

நதியாக நான் மாறவேண்டும்-அதில்
சுதியோடு மீன்பாட அலை பாய வேண்டும்
கதிராக நான் மாற வேண்டும்-களத்தில்
கவிவந்து செவியோரம் தேன்பாய வேண்டும்
கடலாக நான் மாற வேண்டும்-மறவர்
துயில்கொள்ள மடி தந்து தாலாட்ட வேண்டும்..

மண்ணாக நான்மாற வேண்டும்-அங்கு
பசிபோக்கும் பயிராகி துயர் தீர்க்க வேண்டும்
உயிராக நான் மாற வேண்டும்-உன்னில்
உறவாடி கதைபேச ஒரு ஜென்மம் வேண்டும்..
நதியாக நான் மாறவேண்டும்-அதில்
சுதியோடு மீன்பாட அலை பாய வேண்டும்

0 comments:

Post a Comment