ADS 468x60

16 November 2017

பெண்களின் அரசியல் மற்றும் தொழில்படையில் அதிகரிப்பின் அவசியம்.

வெறும் 10% விகிதம் தான் அரசியலில் பெண்களின் பங்களிப்பு இலங்கையில் இருந்து வருகின்றது. அத்துடன் மொத்த ஊழியப்படையில் 32% விகிதமாக மாத்திரம் இவர்களது பங்களிப்பு கணிக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்தது 40% விகிதத்துக்கு 2020 ஆண்டளவில் உயர்த்த வேண்டும் என்பதே பிரதமரின் குறிக்கோளாகும். என கௌரவ பா.உறுப்பினர் #ரோசி #சேனநாயக்க அவர்கள் பெண்களின் முயற்சியாண்மை பற்றி #BMICH இல் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
இதன் மறுவடிவம் என்னவெனில் பெண்களில் கணிசமானவர்கள் ஊதியம் இன்றி, வசதிவாய்ப்புகள் இன்றி, ஓய்வூதியம் இன்றி தொழிற்படையில் சம்மந்தப்படாமல் இருப்பது வெளிப்படை.

இந்த நிலை பெரும்பாலும் பெண்களிடையே வருமானமின்மை, சேமிப்பு இன்மை, வறுமை, நம்பிக்கை இழப்பு, வீட்டுப்பணிப்பெண்களாக திறனற்ற கூலிவேலைக்கு செல்லுதல் போன்ற ஒரு நிலையினை ஏற்படுத்தி இருப்பது பாாிய ஒரு சவாலாகப் பாா்க்கப்படுகின்றது. இருப்பினும் சிறிதளவு தொழில் படையில் உள்ள பெண்கள்தான் பொருளாதாரத்துக்கு பொிய அளவில் முதுகெலும்புபோல் இருக்கின்றனர்.

இலங்கைக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் ஆடைத் தொழிற்சாலைகள், தேயிலை, இறப்பர் தோட்டத்தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்புகள் ஊடாக நாட்டின் தேசிய வருமானத்துக்கு அதிக பங்களிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கெல்லாம் குறைந்த வேதனம் வசதி வாய்ப்புக்களுடன் கீழ்நிலை ஊழியர்களாகவே அதிக பெண்கள் வேலைபுரிவது வேதனைக்குரிய விடயம்.

இவற்றில் இருந்து மீண்டுவர கொள்கை ரீதியான பல மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டும் ஏற்ப்படவேண்டும் குறிப்பாக,

• வீட்டில் இருந்தவாறே வேலை செய்தல்
• பொருத்தமான வேலை நேரம்
• குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை உருவாக்குதல்
• பெண்களுக்கான பிரத்தியேக பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தல்
• இலகு முறையிலான சுயதொழில் நிதி உதவிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்,


போன்றவற்றில் அதிக கவனம் கொள்கை அமுலாக்கமூலம் ஏற்படுத்த ஆவண செய்யப்படனும். அதனால் நிச்சயமாக 2020 களில் பெண்களின் தொழிற்படையில் குறிப்பிட்ட 40% விகித பங்களிப்பை எமது நாட்டில் ஏற்படுத்தலாம்.

எமது அயல்நாடுகளில் பெண்களின் தொழிற்படைப் பங்களிப்பை பார்க்கும்போது அவை எமது நாட்டில் இருந்து மிகவும் வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது. நேபாளத்தில் 78.9% விகிதமும், தாய்லாந்தில் 64% விகிதமும், சைனாவில் 63 விகிதமும், வங்கதேசத்தில் 57.4% விகிதமும் என அதிகரித்து காணப்பட கல்வியில் பெண்கள் முன்னணியில் இருக்கும் இலங்கையை மீட்டெடுக்க சாதகமான கொள்கைகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே வறுமை ஒளிப்பு, பொருளாதார அபிவிருத்தி என்கின்ற இருவிடயங்களில் குறிப்பாக வடகிழக்குப் பிரதேச பெண்தொழிற்படையினரிடையே கொள்கை ரீதியான மாற்றங்களின்போது வேறுபட்ட நிலைப்பாட்னை கருத்தில் எடுக்கவேண்டும் எனவும், இவர்கள் சாட்சிகள், ஆதாரங்கள் அற்ற நிலையில் நிதி மூலங்களைப்பெறும் வழி செய்யப்படவேண்டும் எனவும், இதன் மூலம் தொழில் படையில் இங்குள்ள பெண்களை ஈடுபட வைப்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ஏனைண பிரதேசங்களுக்கு ஈடான சமுகமாக கட்டியெழுப்ப சிந்தனையாளர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும். அதுவே அர்த்தமுள்ள மீளுருவாக்கச் செயற்பாடாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடாகும்..

அதுபோல் அரசியலில் நன்கு படித்த காருண்யமான தலைமைத்துவம் உள்ள பெண்களை களமிறக்கவேண்டும், மாறாக சண்டித்தனமான, மக்கள் விரும்பாத கல்வியறிவு, திட்டமிடல் அறிவு, அரச அரச சார்பற்ற நிர்வாக, அமுலாக்கல் அறிவு தொடர்பாடல் அறிவு என்பன எதுவும் இல்லாத சும்மா பெண் ஒன்றை பிரதிநிதியாக கொண்டுவரும் முயற்சியால், கிழக்கான் மடையன் என்கின்ற பெயரை நீடிக்கவேண்டாம். சிந்தித்து செயற்படவேண்டிய நேரமிது. இதுவும் பெண்களுக்கான பெரிய அங்கிகாரமாக ஆரோக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கும்.

0 comments:

Post a Comment